வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 98

                   
புத்தகங்களைக் காட்டு
1புதிய வியக்கத்தக்க காரியங்களைச் செய்ததால் கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்.
2அவரது பரிசுத்த வலது கை மீண்டும் அவருக்கு வெற்றியைத் தரும்.
3கர்த்தர் தமது மீட்பின் வல்லமையை தேசங்களுக்குக் காட்டினார். கர்த்தர் அவர்களுக்குத் தமது நன்மையைக் காட்டினார்.
4இஸ்ரவேலரிடம் தேவன் காட்டிய உண்மையை அவரைப் பின்பற்றுவோர் நினைவு கூர்ந்தனர். தூர தேசத்து ஜனங்கள் நம் தேவனுடைய மீட்பின் வல்லமையைக் கண்டனர்.
5பூமியிலுள்ள ஒவ்வொருவரும் கர்த்தரை நோக்கிக் களிப்போடு சத்தமிடுங்கள். துதிப்பாடல்களைப் பாடத் தொடங்குங்கள்.
6சுரமண்டலங்களே, கர்த்தரைத் துதியுங்கள். சுரமண்டலங்களின் இசையே, அவரைத் துதியுங்கள்.
7எக்காளங்களையும் மற்றும் கொம்புகளையும் ஊதுங்கள். எங்கள் அரசராகிய கர்த்தரைக் களிப்போடு ஆர்ப்பரியுங்கள்.
8கடலும் பூமியும் அவற்றிலுள்ளவை யாவும் உரக்கப் பாடட்டும்.
9ஆறுகளே, கைகளைத் தட்டுங்கள். எல்லா மலைகளும் இணைந்து பாடுங்கள்!
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.