வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 6

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும். என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும்.
2கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன். என்னைக் குணமாக்கும்! என் எலும்புகள் நடுங்குகின்றன.
3என் முழு உடம்பும் நடுங்குகிறது. கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்?
4கர்த்தாவே, என்னை வலிமையாக்கும். நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும்.
5கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள். மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள். எனவே என்னை நீர் குணமாக்கும்!
6கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன். என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது. என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது. உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன்.
7எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர். வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று. தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன.
8தீயோரே அகன்று போங்கள்! ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
9கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்.
10எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள். ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.