| 1 | கர்த்தரைத் துதியுங்கள்! தேவனை அவரது ஆலயத்தில் துதியுங்கள்! பரலோகத்தில் அவரைது வல்லமையைத் துதியுங்கள்! |
| 2 | அவர் செய்கிற பெரிய காரியங்களுக்காக தேவனைத் துதியுங்கள்! அவரது எல்லா மேன்மைகளுக்காகவும் அவரைத் துதியுங்கள்! |
| 3 | எக்காளத் தொனியோடு தேவனைத் துதியுங்கள்! வீணைகளோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்! |
| 4 | தேவனைத் தம்புருக்களோடும் நடனத்தோடும் துதியுங்கள்! நரம்புக் கருவிகளோடும் புல்லாங் குழலோடும் அவரைத் துதியுங்கள்! |
| 5 | ஓசையெழுப்பும் தாளங்களோடும் தேவனைத் துதியுங்கள்! பேரோசையெழுப்பும் தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்! |
| 6 | எல்லா உயிரினங்களும் கர்த்தரைத் துதிக்கட்டும்! கர்த்தரைத் துதிப்போம்! |