வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 142

                   
புத்தகங்களைக் காட்டு
1நான் கர்த்தரை உதவிக்காகக் கூப்பிடுவேன். நான் கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்.
2நான் கர்த்தரிடம் என் சிக்கல்களைச் சொல்வேன். நான் கர்த்தரிடம் என் தொல்லைகளைச் சொல்வேன்.
3என் பகைவர்கள் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள். நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராயிருக்கிறேன். ஆனால் கர்த்தர் எனக்கு நடக்கின்றவற்றை அறிந்திருக்கிறார்.
4நான் சுற்றிலும் பார்த்தேன், என் நண்பர்களைக் காணவில்லை. எனக்கு ஓடிச் செல்ல இடமில்லை. என்னைக் காப்பாற்ற முயல்பவர் எவருமில்லை.
5எனவே நான் கர்த்தரிடம் உதவிக்காக அழுதேன். கர்த்தாவே, நீரே என் பாதுகாப்பிடம். கர்த்தாவே, என்னைத் தொடர்ந்து வாழவிட உம்மால் ஆகும்.
6கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நீர் எனக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறீர். என்னைத் துரத்தி வருகிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். அவர்கள் என்னைக் காட்டிலும் மிகுந்த பலவான்கள்.
7இந்தக் கண்ணியிலிருந்து தப்பிச்செல்ல எனக்கு உதவும். அப்போது நான் உமது நாமத்தைத் துதிப்பேன். நீர் என்னைக் கவனித்து வந்ததால் நல்லோர் என்னோடு சேர்ந்து கொண்டாடுவார்கள்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.