வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 120

                   
புத்தகங்களைக் காட்டு
1நான் தொல்லைகளில் சிக்குண்டிருந்தபோது, உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் காப்பாற்றினார்!
2கர்த்தாவே, என்னைப்பற்றிப் பொய் கூறியவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். உண்மையில்லாதவற்றை அந்த ஜனங்கள் கூறினார்கள்.
3பொய்யரே, நீங்கள் பெறப்போவதை அறிவீர்களா? நீங்கள் அடையப்போவதை அறிவீர்களா?
4வீரனின் கூரிய அம்புகளும், சுடும் தழலும் உன்னைத் தண்டிக்கும்.
5பொய்யர்களின் அருகே வாழ்வது மேசேக்கில் வாழ்வதைப் போன்றதும் கேதாரின் கூடாரங்களண்டையில் வாழ்வதைப் போன்றதுமாகும்.
6சமாதானத்தை வெறுக்கிற ஜனங்களோடு நான் நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறேன்.
7நான் சமாதானம் வேண்டும் என்றேன். ஆனால் அவர்கள் போரை விரும்புகிறார்கள்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.