வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 101

                   
புத்தகங்களைக் காட்டு
1நான் அன்பையும் நியாயத்தையும் பற்றிப் பாடுவேன். கர்த்தாவே, நான் உம்மை நோக்கிப் பாடுவேன்.
2நான் கவனமாகப் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன். என் வீட்டில் நான் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன். கர்த்தாவே, நீர் எப்போது என்னிடம் வருவீர்.
3என் முன்னால் நான் விக்கிரகங்களை வைக்கமாட்டேன். ஜனங்கள் அப்படி உமக்கு எதிராகத் திரும்புவதை நான் வெறுக்கிறேன். நான் அதைச் செய்யமாட்டேன்!
4நான் நேர்மையாக இருப்பேன். நான் தீயக் காரியங்களைச் செய்யமாட்டேன்.
5யாராவது ஒருவன் தனது அயலானைக் குறித்து இரகசியமாகத் தீயக் காரியங்களைக் கூறினால் நான் அவனைத் தடுத்துவிடுவேன். நான் பிறரைப் பெருமைப்படவோ, தாங்கள் பிறரை காட்டிலும் சிறந்தவர்கள் என்று எண்ணவோ விடமாட்டேன்.
6நம்பத்தக்க ஜனங்களைத் தேசம் முழுவதும் தேடிப்பார்ப்பேன். அவர்கள்Ԕமட்டுமே எனக்கு சேவைச் செய்ய அனுமதிப்பேன். பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மட்டுமே என் பணியாட்களாக முடியும்.
7பொய்யர்கள் என் வீட்டில் வாழ நான் அனுமதிக்கமாட்டேன். என் அருகே பொய்யர்கள் தங்கவும் அனுமதியேன்.
8இந்நாட்டில் வாழும் தீயோரை நான் எப்போதும் அழிப்பேன். கர்த்தருடைய நகரை விட்டுத் தீயோர் நீங்குமாறு நான் வற்புறுத்துவேன்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.