கடந்த பல ஆண்டுகளாக வேத வாசிப்பிலும் வேத ஆராய்ச்சியிலும் ஈடுபட்ட பலருக்கு, அது ஆவிக்குரிய ஆதாயங்களைத் தரவில்லை என்று சொல்லுவதற்குப் பல முக்கிய காரணங்கள் உண்டு. ஆம்! சற்று முன்னோக்கிச் செல்வோம்; பல சமயங்களில் அது ஆசீர்வாதமாக அமைவதற்குப் பதிலாகச் சாபமாகவே அமைந்திருக்கிறது என்ற பயமும் உண்டு. இது சற்று கடினமான வார்த்தைதான், ஆனாலும் நமக்கு நன்றாகத் தெரியும், நாம் சாபத்தைப் பெற்றுக்கொள்வதை விட இது கடினமான வார்த்தையல்ல. ஆவிக்குரிய வரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன; தேவனுடைய இரக்கமும் தவறு செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இக்காலங்களில் பலருடைய கனிகளை நாம் பார்க்கும்போது இது உறுதியாகிறது.
மனிதன் சாதாரணமாக ஏதோ அறிவியலைப் படிப்பதுபோல் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வேதத்தை ஆராய்ச்சி செய்யலாம் (பலமுறை செய்கிறான்). இப்படி ஒருவன் செய்யும்போது அவனுடைய அறிவு அதிகரிக்கிறது, அவனுடைய பெருமையுடன் சேர்த்து! ஒரு வேதியியல் ஆராய்ச்சியாளர் ஆர்வத்தைத் தூண்டும் வேதிவினைகளைச் செய்வதுபோல, வேதத்தை அறிவுப்பூர்வமாகத் தெரிந்துகொள்ள வாசிப்பவரும் அதிலே சில காரியங்களைக் கண்டுபிடிக்கும்போது ஆனந்தமடைகிறார்! ஆனால் வேதத்தை அறிவுப்பூர்வமாக வாசிப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும், ஒரு வேதியியல் ஆராய்ச்சியாளருக்கு உள்ள மகிழ்ச்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; இது ஆவிக்குரிய மகிழ்ச்சியுமல்ல. மேலும், எப்படி ஒரு வேதியியல் ஆராய்ச்சியாளரின் ஆராய்ச்சி வெற்றிபெறும்போது, அது அவர் தன்னை மற்றவர்களை விட சற்று மேலானவராகவும், தன்னை ஒரு முக்கியமானவராகக் காட்டிக்கொள்ளவும் வகைசெய்கிறதோ, அதைப்போலவே வேதத்தை அறிவுப்பூர்வக் கணக்கீடுகள், வார்த்தை ஜாலங்கள், தீர்க்கதரிசனங்கள் மற்றும் பல கோணங்கள் பற்றி அறிந்துகொள்ளப் படிப்பவரும் இருக்கிறார்.
பல நோக்கங்களுக்காக வேதவசனங்களை ஒருவர் வாசிக்கலாம். சிலர் தங்கள் இலக்கிய அல்லது மொழிப் பெருமையைத் திருப்திபடுத்திக்கொள்ள வாசிக்கலாம். சில வட்டங்களில் வேதவசனங்கள் தெரியாமலிருந்தால் பெரும் குறையாகக் கருதப்படுவதால், சிலர் மதிப்பிற்காகவும், பிரஸ்தாபத்திற்காகவும் வேதத்தின் பகுதிகளை வாசிக்கலாம். எல்லாப் புத்தகங்களையும் படித்துவிட வேண்டுமென்கிற உள்ளார்ந்த ஆர்வத்தினால் சிலர் வேதப்புத்தகத்தையும் படிக்கலாம். சிலர் தாங்கள் சார்ந்திருக்கும் சபைப் பிரிவின் பெருமையைத் திருப்திபடுத்திக்கொள்ள வாசிக்கலாம். அவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சபைப் பிரிவின் போதனைகளை உறுதிப்படுத்தும் வேதவசனங்களைத் தேடி அவைகளை நன்கு அறிந்து வைத்திருப்பது தங்கள் கடமையாகக் கருதுவதால் வேதத்தை வாசிக்கலாம். தங்களின் வேதக் கருத்துக்களிலிருந்து மாறுபடுபவர்களிடம் வாதம் செய்ய வசதியாகச் சிலர் வேதத்தை ஆராயலாம். இவை எல்லாவற்றிலும் தேவனுடைய நினைவே இல்லை; ஆவிக்குரிய வளர்ச்சிக்கான எந்த ஆதாயமும் இல்லை; அதனால் ஆத்துமாவிற்கு எந்த உண்மையான பயனும் இல்லை.
அப்படியானால், வேதத்திலிருந்து உண்மையான ஆதாயம் பெறுதல் எதை உள்ளடக்கியது? 2 தீமோத்தேயு 3:16,17-ம் வசனங்கள் இந்தக் கேள்விக்குத் தெளிவான பதிலைக் கொடுக்கின்றன. இங்கே நாம் வாசிக்கிறோம்: "வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேரினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது." இந்த வசனத்தில் எது விடப்பட்டிருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்: பரிசுத்த வேத எழுத்துக்கள் அறிவுசார்ந்த முன்னேற்றத்திற்காகவும், மாம்ச வியூகங்களுக்காகவும் கொடுக்கப்படவில்லை; மாறாக, உபதேசித்து, கடிந்துகொண்டு, சீர்திருத்தி, எந்த நற்கிரியையும் செய்யத் தகுதியாக்கும்படியாகவே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
1. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் பாவத்தைக் குறித்து உணர்த்தப்படும்போது அவன் ஆவிக்குரிய ஆதாயம் பெறுகிறான். இதுதான் வேதத்தின் முதல் நோக்கம்: நம்முடைய குறைவையும், ஒன்றுமில்லாமையையும், மோசமான தன்மையையும் வெளிப்படுத்துவதே. ஒரு மனிதனுடைய வெளிப்படையான நன்னடத்தை கண்டிக்கப்படத்தக்கதாயிராமலும், சக மனிதர்களுடனான உறவு சுமூகமானதாயும் இருக்கலாம்; ஆனால் பரிசுத்த ஆவியானவர் வேதவசனத்தை அவன் இருதயத்திலும் மனதிலும் வெளிப்படுத்தி, அவனது பாவத்தின் குருடான கண்களைத் திறந்து, தேவனுடனான அவனது உறவையும் மனப்போக்கையும் க
ஒருவன் மனந்திரும்புவதற்கு முன்னர் ஏற்பட்ட, மனுகுலத்திற்குப் பாவம் கொண்டுவந்த கொடிய விளைவுகளைக் குறித்த இந்த உணர்த்துதலானது, தன்னுடைய அந்த முதல் அனுபவத்தோடு நிறுத்திக்கொள்ளப்பட வேண்டியதல்ல. ஒவ்வொரு முறையும் என் இருதயத்தில் தேவன் தம்முடைய வார்த்தையை ஆசீர்வதிக்கும்போது, தேவன் என்னிடத்தில் எதிர்பார்க்கிற தரமான, 'உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்' (1 பேதுரு 1:15) என்பதிலிருந்து, நான் எவ்வளவு பின் தங்கியிருக்கிறேன் என்பதை உணர்கிறேன். ஆகவே, இது நாம் செய்ய வேண்டிய முதல் சோதனை: ஒவ்வொரு முறையும் வேதத்தில் மற்றவர்களுடைய தோல்வியை நான் வாசிக்கும்போது, நானும் எத்தனை பரிதாபமாக அவர்களைப்போலவே தோல்வி கண்டிருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்துகிறதா? ஆசீர்வதிக்கப்பட்ட, பரிபூரண கிறிஸ்துவின் வாழ்க்கையை நான் வாசிக்கும்போது, சற்றும் நான் அவரைப்போல இல்லை என்பதை எனக்கு உணர்த்துகிறதா?
2. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் பாவத்தைக் குறித்து மனஸ்தாபப்படும்போது அவன் ஆவிக்குரிய ஆதாயம் பெறுகிறான்.
கிருபையினாலே, தன்னுடைய அறிவுக்கூர்மையினிமித்தம் எந்தப் புகழ்ச்சியையும் விரும்பாத தேவனுடைய ஊழியக்காரன், வேதபோதனை மூலமாக நம்முடைய குணத்தையும், நடக்கையையும், மிகச்சிறந்த தேவனுடைய மக்களின் தோல்வியையும்கூட வெளிப்படுத்தட்டும்; மக்கள் கூட்டம் அந்த செய்தியாளரைப் புறக்கணித்தாலும், உண்மையாக மனந்திரும்பியவர்கள், 'நிர்ப்பாக்கியமான மனுஷன் நான்' என்று தேவனுக்கு முன்பாக அவர்களை மனஸ்தாபப்பட வைத்ததினால் அவர்கள் அந்தச் செய்திக்காக நன்றியுள்ளவர்களாகவே இருப்பார்கள். ஆகவே, என்னுடைய தனிப்பட்ட வேத வாசிப்பில், பரிசுத்த ஆவியானவர் வேதவாக்கியங்கள் மூலமாக என்னுடைய உள்ளார்ந்த அசுத்தத்தை உணரவைக்கும்போது, நான் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்படுகிறேன்.
'நான் என்னை அறிந்துகொண்டதற்குப்பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன்' என்று எரேமியா 31:19-ல் உள்ள வார்த்தைகள் எத்தனை உன்னதமானவைகள்! எனது வாசகரே, இதேபோன்ற ஒரு அனுபவம் உங்களுக்கும் உண்டா? உங்களுடைய வேத ஆராய்ச்சி, உங்கள் இருதயத்தை நொறுக்கி, தேவனுக்கு முன்பதாக உங்களைத் தாழ்மைப்படுத்துகிறதா? தினம் தினம் உங்களை மனந்திரும்புதலுக்கு நேராக வழிநடத்தும் விதமாக உங்கள் பாவங்களை உணர்த்துகிறதா? பஸ்கா ஆட்டுக்குட்டியானது 'கசப்பான கீரை'யுடன் சாப்பிட வேண்டியதாயிருந்தது (யாத்திராகமம் 12:8); ஆகவே, நாம் உண்மையாகச் சாப்பிடும்போது, அது நமக்கு இனிமையைத் தருவதற்கு முன்பாக, பரிசுத்த ஆவியானவர் அதைக் கசப்பாக்குகிறார். வெளிப்படுத்தின விசேஷம் 10:9-ல் உள்ள வரிசையைக் கவனியுங்கள்: "நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்குத் தேனைப்போல மதுரமாயிருக்கும் என்றான்." இதுதான் எப்பொழுதுமே உள்ள அனுபவ வரிசை: ஆறுதலுக்கு முன்னால் துயரப்பட வேண்டும் (மத்தேயு 5:4); உயர்வுக்கு முன்னால் தாழ்மை வேண்டும் (1 பேதுரு 5:6).
3. ஒரு தனிப்பட்ட மனிதன் வேதவாக்கியங்களின் மூலம் பாவத்தை அறிக்கை செய்ய வழிநடத்தப்படும்போது அவன் ஆவிக்குரிய ஆதாயம் பெறுகிறான். உண்மையான ஆத்துமா தன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொள்ளும்போது, வேதவாக்கியங்களிலிருந்து 'கடிந்துகொள்ளுதல்' (2 தீமோத்தேயு 3:16) என்னும் ஆதாயத்தைப் பெற்றுக்கொள்கிறது. 'பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்திற்கு வராதிருக்கிறான்' (யோவான் 3:20) என்று மாம்சத்திற்குரியவர்களைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. 'பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்' என்பதே குத்தப்பட்ட ஒவ்வொரு இருதயத்தின் கதறுதலாயும் இருக்கிறது; ஒவ்வொரு முறையும் நாம் வசனத்தினால் உயிர்ப்பிக்கப்படும்போது ஒரு புதிய வெளிப்பாட்டையும், தேவனுக்கு முன்பாக நம்முடைய குற்றங்களையும் காணமுடிகிறது. 'தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்' (நீதிமொழிகள் 28:13). மறைவான பாவங்களை நம்முடைய மார்பிலே நாம் மறைத்து வைத்திருக்கும்வரை எந்த ஒரு ஆவிக்குரிய ஆசீர்வாதமோ அல்லது கனிகளோ (சங்கீதம் 1:3) நம் வாழ்வில் இருக்க முடியாது; தேவனுக்கு முன்பாக நாம் அவற்றை முழுமையாக அறிக்கை செய்யும்போது மட்டுமே நாம் தேவனுடைய இரக்கத்தில் மகிழ முடியும்.
அறிக்கை செய்யப்படாத பாவ பாரத்தை நாம் நம்மில் புதைத்திருக்கும் வரை, நம்முடைய மனதிற்கு உண்மையான சமாதானமோ அல்லது இருதயத்திற்கு இளைப்பாறுதலோ இல்லை. தேவனுக்கு முன்பாக இருதயத்தைத் திறக்கும்போதே விடுதலை கிடைக்கிறது. 'நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்து போயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று' (சங்கீதம் 32:3,4) என்ற சங்கீதக்காரனின் அனுபவத்தை கவனியுங்கள். இந்த ஓவியமான ஆனால் கடினமான வார்த்தைகள் உங்களுக்கு அர்த்தத்தைக் கொடுக்கிறதா? அல்லது உங்கள் சொந்த ஆவிக்குரிய வரலாற்றை விவரிக்கிறதா? இதன் உடனடி தொடர்ச்சியாக, 'நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்' (சங்கீதம் 32:5) என்பது ஒருவனின் அனுபவமாக இருக்கும்போது அவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்.
'உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன்; ஆதலால் எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன்' (சங்கீதம் 119:104) என்பதே தாவீதின் அனுபவமாயிருந்தது. நன்றாக கவனியுங்கள், 'நான் விலகியிருக்கிறேன்' என்றல்ல, 'நான் வெறுக்கிறேன்' என்கிறார்; ஏதோ குறிப்பிட்ட சில வழிகளையல்ல, 'எல்லாப் பொய் வழிகளையும்' என்கிறார். 'எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளையும் செம்மையென்று எண்ணி, சகல பொய் வழி
'நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்' (யோவான் 15:3). இங்கே நம்மை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ள வேண்டிய இன்னுமொரு முக்கியமான விதி இருக்கிறது. என் வேத வாசிப்பும், வேத ஆராய்ச்சியும் என் வழிகளைச் சீர்ப்படுத்த உதவுகிறதா? நமக்கு நன்கு தெரிந்த கேள்வியான, 'வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்?'
வேதவாக்கியங்களின் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொள்வது மட்டுமே போதுமானதல்ல, அவைகளை நமது உணர்வுகளுடன் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். 'இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கீகரியாமற்போனபடியால்' (2 தெசலோனிக்கேயர் 2:10) என்று கிறிஸ்துவை மறுதலிப்பவர்களைக் குறித்துப் பரிசுத்த ஆவியானவர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். வேதவாக்கியங்களைக் குறித்துப் பேசவும் அல்லது வியூகங்களை வகுக்கவும், அவைகள்
நம்மை அடிக்கடி சோதித்துப்பார்த்துக்கொள்ள வேண்டிய இன்னும் ஒரு விதி இங்கே இருக்கிறது. என்னுடைய நினைவுகளும், என்னுடைய இருதயமும், என்னுடைய வழிகளும் வேலைகளும் தேவனுடைய வார்த்தையினாலே கட்டுப்படுத்தப்படுகிறதா? தேவன் இதைத்தான் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்: 'நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்' (யாக்கோபு 1:22). கிறிஸ்துவின் மீதுள்ள அன்பும் நன்றியுணர்வும் இப்படித்தான் வெளிப்படுத்தப்படுகிறது: 'நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்' (யோவான் 14:15). இதற்குத் தேவனின் உதவி நமக்குத் தேவை. தாவீது ஜெபித்தார், 'உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்' (சங்கீதம் 119:35). நமக்குத் தேவை நம்முடைய வழிகளைத் தெரிந்துகொள்ள வெளிச்சம் மாத்திரமல்ல, அதிலே நடக்கத் தேவையான இருதயமும் அவசியம். நம்முடைய மனக்கண் குருடாயிருப்பதால் வழிநடத்துதல் அவசியமே; நம்முடைய இருதயத்தின் பலவீனத்தால் வல்லமையான தேவனுடைய கிருபையும் அவசியம். 'உண்மையை நாம் தழுவி அதிலே தொடராவிட்டால், அதைக் குறித்த அறிவு நமக்கு எந்தவிதத்திலேயும் பலன்தராது' (மாண்டன்). இது அவரது கற்பனைகளின் வழி: சுயமாகத் தெரிவு செய்த ஒன்றல்ல; ஆனால் நிச்சயமாகக் 'குறிக்கப்பட்ட' வழி; இது பொதுவான சாலை அல்ல, ஒரு தனிப்பட்ட வழி என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள்.
இதை எழுதியவரும் படிப்பவரும், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஏழு காரியங்களையும், தேவனுடைய பிரசன்னத்திலே, உண்மையுடனும் பொறுப்புடனும் ஆராய்ந்து பார்க்கக்கடவர்கள். உங்களுடைய வேத வாசிப்பு மேலும் உங்களைத் தாழ்மையாக்கியிருக்கிறதா? அல்லது நீங்கள் பெற்றுக்கொண்ட வேத அறிவினாலே மேலும் பெருமையுள்ளவர்களாக மாற்றியிருக்கிறதா? உங்கள் சக மனிதர்களின் மத்தியில் உங்கள் மதிப்பை உயர்த்தியிருக்கிறதா? அல்லது தேவனுக்கு முன்பாகத் தாழ்மையான இடத்தைத் தெரிந்துகொள்ள உங்களை நடத்தியிருக்கிறதா? சுயத்தைக் குறித்த ஆழமான வெறுப்பை உள்ளத்தில் கொடுத்திருக்கிறதா? அல்லது மேலும் உங்களைத் திருப்திபடுத்தியிருக்கிறதா? உங்களைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து நீங்களும், 'உம்முடைய வேதத்தின் அறிவு எனக்கும் இருக்கிறது' என்று சொல்லச் செய்கிறதா? அல்லது என்னுடைய நண்பருக்கோ, ஆசிரியருக்கோ கொடுத்திருப்பதுபோல எனக்கும் விசுவாசத்தையும், கிருபையையும், பரிசுத்தத்தையும் தாரும் என்று ஜெபம் செய்யச் செய்கிறதா? இந்த வார்த்தைகளைத் தியானம் செய்; உன்னை முழுவதுமாக அவைகளுக்கு ஒப்புவி; உன்னுடைய ஆவிக்குரிய ஆதாயம் மற்றெல்லாருக்கும் தெரிந