நீதிமொழிகள் 31:10–31
இது ஒரு அரிதான பொக்கிஷம் என்பதலால் சவாலாக கொடுக்கப்பட்டுள்ளது: “குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்?” (நீதிமொழிகள் 20:6-ஐ ஒப்பிடுக). ஆபிரகாம், தன் நேச குமாரனுக்காக இந்த அளவிட முடியாத ஆசீர்வாதத்தைத் தேடி தூர தேசத்துக்கு அனுப்பப்பட்டார் (ஆதியாகமம் 24:3,4). இந்த பரிசு சிறப்பானதாக தோன்ற பல காரணங்களில் ஒன்று, அதனை யாரும் உரிய முறையில் தேடுவதில்லை. பெரும்பாலும், அதிகமாக நற்குணங்களை விட சாதனைகளை பார்க்கப்படுகிறது; உள்ளார்ந்த தெய்வீக நற்பண்புகளை விட, வெளிப்புற பாராட்டுகளும் தோற்ற அடிப்படையிலான புகழ்ச்சிகளும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுகின்றன.
இந்த தேடுதலே, அந்த பொக்கிஷத்தின் மதிப்பினை உணர்த்துகிறது. ஆதாம் பாவமற்றவராய் இருந்தும், பிதாவாகிய தேவன் அவனுக்கேற்ற துணையை உருவாக்கும் வரை, அவன் பூரணப்படவில்லை (ஆதியாகமம் 2:18). உண்மையாகவே, அவளுனுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் விலையேறப்பெற்றது. எந்தப் பொக்கிஷமும் அவளுக்கு ஒப்பானதல்ல...
வசனம் 11–12: ஒரு குணசாலியான ஸ்திரீயின் மதிப்பு முன்பே கூறப்பட்டுள்ளது; இப்போது அவளுடைய பல்வேறு பண்புகள் விவரிக்கப்படுகின்றன. இந்த விளக்கத்தின் ஆரம்பத்திலேயே, மனைவியாகிய அவளுடைய குணம் விளக்கப்படுகிறது. அவளுடைய விசுவாசம், ஒருமனதான நிலை, அன்பும் கடமையுணர்வும் நிறைந்த நடத்தை, அவள் கணவனுடைய இருதயத்தை உறுதியாக நம்ப வைக்கிறது. அவர் தன்னை பாதுகாப்பாக உணர்கிறார்; அவளுடைய கணவனுடைய பாரங்கள் குறைக்கப்படுகின்றன; அழுத்தமான கவலைகளில் இருந்து அவருடைய மனம் இளைப்பாறுகிறது. வீட்டிலிருந்து விலகி இருக்க வேண்டிய நேரங்களில் கூட, அவர் மனநிம்மதியுடன் இருக்கிறார், ஏனெனில் அவருக்குரியவை அவளுடைய பாதுகாப்பான கையில் இருப்பதையும், அவளுடைய மகிழ்ச்சியுள்ள புன்னகையால் வரவேற்கப்படுவதைத் தெரிந்தும் இருக்கிறார். ஒரு விசுவாசமுள்ள மனைவியும், அவளிடம் முழு நம்பிக்கையுடனும் அன்புடனும் நடக்கும் கணவனும், ஒருவருக்கொருவர் ஆசீர்வாதமாக இருக்கிறார்கள். இத்தகைய மனைவியைக் பெற்றவன் சந்தேகமோ, சிக்கலோ இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறான். அவன் இருதயமாகிய இல்லமே வீடாகும்.
அவளிடம் ஒப்படைக்கப்பட்டவற்றை கணவன் சந்தேகமான பார்வையில் பார்ப்பதற்கே அவசியமில்லை; அவனுக்குப் பொறாமை கிடையாது. வெளியே ஆளும் கணவன், வீட்டை அவள் சுதந்திரமாக நடத்த அனுமதிக்கிறார். அவளுடைய செயற்பாடுகள் ஞானமும் சிக்கனமும் நிறைந்தவை; எனவே அவனுக்கு அநியாயமாக சம்பாதிக்க வேண்டியதோ, சண்டையிட்டு கொள்ளையடிக்க வேண்டிய அவசியமோ இல்லை. இத்தகைய மனைவியின் அன்பும், பற்றும் திருமண வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் நிலைத்ததாகவும் சீரானதாகவும் இருக்கின்றன. அவள் நம்பிக்கையை துஷ்பயோகப்படுத்தாமல், வாழ்நாளெல்லாம் அதற்குத் தகுதியுடையவளாக இருக்க விரும்புகிறாள். அவள் சஞ்சலமானவளோ, நம்பிக்கையற்றவளோ அல்ல. அவள் "தன் புருஷனுக்கு எப்படி பிரியமாய் இருக்கலாம்" என்பதை எண்ணிக்கொண்டு வாழ்கிறாள். (1 கொரிந்தியர் 7:34); அவளுடைய வாழ்நாள் முழுவதும், அவள் அவனுக்கு தீமை அல்ல, நன்மையே செய்கிறாள். அப்படி எல்லா பெண்களும் இருந்தால் எவ்வளவு நலமாய் இருக்கும்! ஆனால் பாருங்கள்: ஏவாள் துணையாக இருக்க வேண்டியவள் இச்சித்தவளாக மாறினாள்; சாலொமோனின் மனைவிகள் அவனுடைய இருதயத்தை வழுவி போகப்பண்ணினார்கள்; யேசபேல், தன் கணவனை அருவருப்பான பாவங்களுக்கு தூண்டினாள்; யோபுவின் மனைவி, “தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும்” என்று சொன்னாள் (யோபு 2:9); சண்டைக்காரியான ஸ்திரீ (நீதிமொழிகள் 21:9; 25:24) இவை அனைத்துக்கும் எதிர்மறையாக நன்மை அல்ல, தீமையே செய்கிறாள். பல சமயங்களில், நன்மையிலும் தீமை கலந்த வடிவம் காணப்படலாம்... ஆனால் இங்கு, தீமை அல்ல நன்மையை மட்டுமே காட்டுகிறது.
அவளுடைய புருஷனின் ஆறுதலே, அவளுடைய உற்சாகமும், இளைப்பாறுதலுமாய் இருக்கிறது. அவருக்காக வாழ்வதே, அவளுக்கு மிக உயர்ந்த சந்தோஷமாகும். அவளின் மிக நுணுக்கமான கவனிப்புகள் எப்போதும் பாராட்டப்படாதபோதிலும், அவள் ஒருபோதும் மற்றவரின் எண்ணத்தையோ, உதாசீனத்தையோ, அன்பில்லாமையையோ காட்டுவதில்லை; அல்லது, கற்பனையாக தோன்றும் புறக்கணிப்புக்கு அவள் சலிப்போடு பதிலளிக்க மாட்டாள்; அல்லது, செயற்கையானதோ அல்லது பீடிக்கப்படும் மனதோடு நடந்துக் கொண்டு, உண்மையான அடித்தளமற்ற உணர்ச்சி பூர்வமான பதில்களை வெளிப்படுத்த விரும்பமாட்டாள். இந்த தன்னலமற்ற அக்கறையும் அர்ப்பணிப்புள்ள பட்சமும், கிறிஸ்தவ கோட்பாடுகளின் அடிப்படைகளில் காணப்படும்போது,
திருமண வாழ்க்கை பரிசுத்தமும், கனமும் மிகுந்த கிருபையோடு வெளிப்படுகின்றன. இது அடிப்பணிவதாக தோன்றினாலும், தரக்குறைவானதல்ல. உண்மையில், இதற்குக் கிடைக்கப்பெறும் மிகப்பெரிய மகிமை என்னவென்றால், இதனாலே “அந்த பெரிய மறைபொருளான” — “கிறிஸ்துவுக்கும் சபைக்கும்” (எபேசியர் 5:32) உள்ள ஒருமைப்பாடும், அவளுடைய சோதனைகள் அவனுடையதாகவும், அவனுடைய நோக்கம் அவளுடையதாகவும் விளக்கப்படுகின்றன என்பதாகும்.
வசனம் 13–27: இந்த அழகான குணங்களை உடையவளின் வர்ணனை, (விளக்கம்) பழங்காலத்தின் நடைமுறைகளைப் பின்பற்றியதாக இருந்தாலும், இதில் உள்ள பொது நெறிகள் எல்லா காலங்களுக்கும் பொருந்தக்கூடியவையாகும். இது உயர்ந்த நிலையில் உள்ள ஒருவனின் மனைவியை மட்டும் வர்ணிப்பதில்லை; மாறாக, தன் வீட்டுப் பொறுப்புகளில் புத்திசாலியும், பயனுள்ளவளும், தேவபக்தியுள்ள மனைவியையே வர்ணிக்கிறது. இவள் “தேவபக்தியை அறிக்கையிடுகிற பெண்ணாகவும்”, “நல்ல கிரியைகளால் அலங்கரிக்கப்பட்டவளாகவும்” இருக்கிறாள்; (1 தீமோத்தேயு 2:10) மார்த்தாளை விட மரியாள் குறைவானவளல்ல... ஆனால் இதில் ஒன்றே முக்கியமானவையாகக் காணப்படுகிறது. இங்கு காணப்படும் தேவபக்தியின் தரம் என்பது, மகா பரிசுத்தத்தையும் தேவனுக்கான முழு அர்ப்பணிப்பையும் காட்டும் பெயரில், கிரியைகளில் இருந்து ஒதுங்கி வாழும் ஒரு தேவபக்தியான வாழ்க்கையை வாழ்வதை போன்றதல்ல. இதில் தற்போது கிறிஸ்தவத்தில் பூரணம் எனப் போற்றப்படும் திருமணமாகாமல் தவவாழ்க்கை மேற்கொள்ளும் பழக்கங்கள் எதுவும் இல்லை. ஒரு குணசாலியான பெண்ணின் வர்ணனையில் குறைந்தது பாதி பகுதியாயினும், அவளுடைய தனிப்பட்ட மற்றும் வீட்டு உழைப்புகள் இடம்பெற்றுள்ளன. சுய விருப்பத்தை நிறைவேற்ற விரும்பியும் செயலற்ற நிலையில் இருப்போருக்குப் இது எவ்வளவு கடுமையான கண்டனமாக உள்ளது...!
ஆனால் நமக்கு முன்பாக கொடுக்கப்பட்ட இந்தப் பண்புகளை இன்னும் நுணுக்கமாகப் பார்ப்போம். அவளுடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் வல்லமை நிறைந்ததாய் இருக்கின்றன. பழங்காலங்களில் அடித்தரமான கைவேலைகள் கூட உயர்ந்த நிலையில் உள்ள பெண்களின் வேலையாக இருந்தது. இங்கு சுய தியாகம் ஒரு முக்கியக் கொள்கையாக உள்ளது. குணசாலியான பெண், முயற்சியிலும், மரியாதையிலும், தன் வேலைக்காரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறாள்; தான் முதலில் மேற்கொள்ளாத எதையும் அவர்களுக்கென வைப்பதில்லை; தான்கட்டுப்படுத்துவதன் மூலம், தன் வீட்டை மிகவும் திறமையாக ஆளுகிறாள். அவள் தன் வேலைக்கானவைகளை தேடுகிறாள். அவளுடைய ஊசி வேலை, குடும்பத்தின் பயன்பாட்டுக்கே ஆகும். தேவைக்கு புலம்புவதற்குப் பதிலாக, தன் கைகளால் சுதந்திரமாக வேலை செய்து மாதிரியாக திகழ்கிறாள். மற்றவர்கள் உழைக்கும் போதும், அவள் வேலையின்றி நேரத்தை வீணடிக்காமல், இராட்டினம், கதிர் ஆகியவற்றில் வேலை செய்வதை வெட்கமாய் நினைக்கவில்லை. அவள் தனது வேலைக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணிக்கிறாள். அதிகாலமே எழுகிறாள், இரவு நேரத்திலும் எழும்பி செயல்படுகிறாள். அவளுடைய உழைப்பின் பலனை நன்கு பயனாக்குகிறாள். அதை வியாபாரமாக மாற்றி, வெகுதூரத்தில் இருந்து கொண்டு வரப்படும் பண்டங்களுக்குப் மாற்றுகிறாள். அவளுடைய வியாபாரப் பொருட்கள் தரமானவை; மெல்லிய புடவை, இரத்தின கம்பளங்கள் மற்றும் கச்சைகள் வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அவளுடைய முழு மனமும் அவளுடைய வேலையில் இருக்கிறது. தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளை பலப்படுத்துகிறாள். தனக்கேற்ற எந்த வேலையையும் செய்யத் ஆயத்த நிலையில் இருக்கிறாள். நிலமும் அவளுடைய கவனத்திற்கு உரியது. தன் கனவனின் நலன்களுக்காக எப்போதும் கவனமுள்ளவளாய், ஒரு நிலத்தின் மதிப்பை அவள் சிந்திக்கிறாள்; அது ஒரு நல்ல கொள்முதல் எனில், அதை வாங்கி, அதிலேயே மிகச்சிறந்த விளைவுக்காக திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
இப்போது மீண்டும், ஓர் வீட்டின் தலைவியாக அவளது நடத்தைப் பற்றி கவனிப்போம். இங்கே, “கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீ” (வசனம் 30) என்பவள், தேவபக்தியாக, அவள் ஆவிக்குரியவளாக தன் நேரத்தை செலவிடுகிறாள் என்பதாக அல்ல, மாறாக வேதத்தின்படி “தன் வீட்டை நடத்துகிறவளாக” (1 தீமோத்தேயு 5:14) காணப்படுவதின் நிமித்தமே அவள் புகழப்படுகிறாள். அவள் தன் பொறுப்புகளை மிக கவனமாக நோக்குகிறாள்; உணவையும் வேலைகளையும் சரியான அளவிலும், "காலத்திற்கேற்ப" பகிர்ந்தளிக்கிறாள். இது அவளுடைய பொறுப்பு. “ஒரு மனுஷன் தன் வேலைக்கும், பண்ணைக்கும் காலை முதல் மாலை வரை செல்கிறான்” என்றால் (சங்கீதம் 104:23), ஒரு ஸ்திரீ “வீட்டில் தரித்திருந்து” (தீத்து 2:5) வேலையில் தன் பங்கினை காண்கிறாள். அவளுடைய உழைப்பு, சுய வெறுப்பு மற்றும் மனப்பூர்வ அர்ப்பணிப்பு மூலம், அவள் “தன் வீட்டைக் கட்டுகிறாள்” என்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது (நீதிமொழிகள் 14:1). அவள் இன்னும் இருள் இருக்கும்போதே எழுகிறாள், அவளைக் பாராட்ட வேண்டும் என்பதற்காக அல்ல, தன் வீட்டாருக்கு படியளக்கவே ஆகும். அவள் தன் சுதந்தரத்தை நேர்த்தியாய் காத்துக்கொள்ளும் விதமும் மிகவும் கவனத்துக்குரியது... அவள் தன் வீட்டாரின் வழிகளை நன்கு கவனிக்கிறாள்; ஒவ்வொரு துறையிலும் அவள் காட்டும் சிறந்த ஆற்றல் காரணமாக, “சோம்பலின் அப்பம் சாப்பிடுகிறவள்” என்று யாரும் அவளைக் குற்றம் சொல்ல முடியாது. அவளுடைய வீட்டில், ஒழுங்கே அவளுடைய கொள்கையாக உள்ளது. அவள் முற்போக்கு சிந்தனையோடுடனான பராமரிப்பு தன்னை சார்ந்தவர்களுக்கு மாத்திரமல்ல. அவள் கதிரும், இராட்டினமும் வேலை செய்கின்றன — அவளுக்கோ, அவளுடைய வீட்டுக்கோ மட்டும் அல்ல, சிறுமையானவர்களுக்கும் ஏழைகளுக்குமான சேவைக்கும் ஆகும். முதலில் தன் ஆத்துமாவை சாய்த்தவளாக (ஏசாயா 58:10), தன் கரங்களை நீட்டி, தூரத்திலுள்ளவர்களை தன் அன்பின் ஊற்றால் அணைக்கிறாள். (உபாகமம் 15:7,8); அவ்வாறு “கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது” (யோபு 29:13; அப்போஸ்தலர் 9:39). அவளுடைய ஆவியும் நடையும் ஒரேவிதமான குணத்தை பிரதிபலிக்கின்றன; அவளுடைய கிரியைகளும் இதற்கு முற்றிலும் இசைவானவை ஆகும்... இந்த தேவபக்தியுள்ள மனைவியின் இருதயத்தில் அன்பின் பிரமாணம் மட்டும் இல்லாமல், அவளுடைய வாயில் ஞானமும், அவளுடைய நாவிலே இரக்கத்தின் பிரமாணமும் உண்டு. அவளுடைய இருதயத்தைக் கட்டுப்படுத்தும் அதே அன்பு, அவளுடைய நாவையும் வழிநடத்துகிறது... இதுதான் உண்மையிலேயே “குணசாலியான ஸ்திரீ, தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்” என்பதைக் காண்பிக்கிறது. (நீதிமொழிகள் 12:4). அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே உட்கார்ந்திருப்பார்; அவனுக்குக் கிடைத்த மகிழ்ச்சியும் பொக்கிஷமும் சாதாரணமானது அல்ல; அவனுடைய பதவி உயர்வுக்கு வீட்டிலுள்ள அவளுடைய நிர்வாகம் மூலமாக வந்த செல்வம் உதவியாய் இருந்திருக்கலாம்; அது மட்டுமல்ல, அவள் முன்னுதாரணமாய் திகழ்தலும், அவள் வார்த்தைகளும் அவர் நற்குணத்தோடு நிலைத்திருக்க உதவியிருக்கலாம். வெளியரங்கமாகவும், பலவிதங்களிலும் ஆசீர்வாதங்கள் அவள்மேல் தங்கியிருக்கும். பெலனே அவளுடைய உள்ளான மனிதனின் ஆடையாய் உள்ளது. ஆவிக்குரிய தைரியமும் தீர்மானமும், அவளைக் கொடுமையானச் சிக்கல்களை வெற்றிக்கொள்ள செய்கின்றன. அவளுடைய மகிமையான வஸ்திரம், அவளை கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவளாக, அவருடைய விசுவாசமுள்ள ஊழியக்காரியாக, அவருடைய கிருபையின் பிள்ளையாக, அவருடைய மகிமையின் சந்ததியாக காண்பிக்கின்றது...
வசனம் 28–31: குணசாலியான ஸ்திரீ தன் முழு விருப்பத்துடன் பணிவாக சேவை செய்கிறாள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், தன் பிள்ளைகள் மரியாதையுடன் நடந்து கொள்வதும், தன் கனவன் ஆசீர்வாதத்தை பெறுவதும் விட பெரிய சந்தோஷம் பூமியில் எது? அவளது நிலையைக் குறித்து நாம் சிந்திக்கலாம் — அவள் வயது முதிர்ந்தவளானாள், அவளது பிள்ளைகள் வளர்ந்தவர்கள், அவர்களும் தங்கள் குடும்பங்களோடு இருக்கக்கூடும், தாங்கள் எப்படி வளர்க்கப்பட்டார்களோ அதுபோலவே தங்கள் பிள்ளைகளையும் வளர்க்க முயற்சி செய்யக்கூடியவர்களாக காணப்பட்டிருப்பர். அவர்களின் தாய் எப்போதும் அவர்களின் கண் முன்னிலையில் இருக்கிறாள். அவளுடைய மிருதுவான வழிநடத்தல், ஞானமான ஆலோசனைகள், அன்பான சிட்சை, பரிசுத்தமான முன்மாதிரி — இவை அனைத்தும் நினைவில் தெளிவாகவே இருக்கும். அவளை ஆசீர்வதித்து, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவதை அவர்கள் நிறுத்துவதில்லை, ஏனெனில் அவள் அவரால் அருளப்பட்ட விலைமதிப்பற்ற பொக்கிஷம் ஆகும். அதேபோலவே அவளுடைய புருஷனும் அவளை புகழ்கிறார். அவருடைய பாசம், ஏமாற்றமும் வீணுமான அழகின் கவர்ச்சியில் இல்லை, கர்த்தருக்கு பயப்படுகிறதில் தான் அவ்வழகு காணப்படுகிறது. எனவே, அவள் அவருடைய பார்வையில் இறுதி வரைக்கும், அவர் முதுமையிலும் உடனிருப்பவளாகவும், கவலைகளை போக்குகிறவளாகவும், குழப்பங்களில் ஆலோசகராகவும், துக்கங்களில் ஆறுதலாகவும், பூமிக்குரிய சந்தோஷங்களில் பிரகாசமாகவும் இருக்கிறாள். பிள்ளைகளும் புருஷனும் இணைந்து நன்றியுடன், “அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள்” என்று கூறுவர்.
ஆனால் ஏன் வெளிப்புற பரிந்துரைகள் இந்த விளக்கத்தில் இடம்பெறவில்லை என்று கேட்கலாம். இதில் விளக்கப்படுவது அனைத்தும் உறுதியான நற்குணங்கள் மட்டுமே. இதில் தயை காட்டுவது ஏமாற்றவது போன்றது. அழகான தோற்றமும் சீரான உருவமும், பல நேரங்களில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஏமாற்றங்களுடன் முடிவடைகின்றன. அவை அலங்கோலமான சிதைவுகளுக்கு முக்காடாகவும் திகழ்கிறது. அழகு என்பது மிகவும் சீரிழக்கும் வீணான ஒன்றாகும். ஒரு நோயே அதை முற்றிலும் அழிக்கக்கூடும் (சங்கீதம் 39:11). துக்கமும் கவலையும் கவர்ச்சியை வாடவைக்கும். மேலும் அது நிலைத்திருந்தாலும் கூட, மகிழ்ச்சியான வாழ்க்கையுடன் அது நேரடியாக தொடர்புடையதல்ல. அழகு பல நேரங்களில் சிரமங்களுக்கு வழிவகுக்கும், பல தீங்கு தரும் சோதனைகளுக்கும் வலைகளுக்கும் மூல காரணமாக மாறும். அடிப்படையான நல்லொழுக்கக் குணாதிசயங்கள் இல்லாமல் இருக்கும்போது, அறிவோடும் பரிசுத்த மனதோடும் பார்ப்பவருக்குத் அது ஈர்க்கும் ஒன்றாக இல்லாமல் வெறுப்பூட்டும் ஒன்றாகவே காணப்படும் (நீதிமொழிகள் 11:22).
இங்கு தெய்வீக உந்துலால் வரையப்பட்ட காரியம், குணசாலியான ஸ்திரீயைக் குறித்த காரியங்களோடு தொடங்குகிறது; பின்னர் அந்த விளக்கத்தை, கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயின் காரியங்களால் பூர்த்தி செய்கிறது. (நீதிமொழிகள் 31:10,30). அதில் சித்தரிக்கப்படும் அழகான பண்புகள் அவளுடைய புருஷனுக்கான விசுவாசம், அவளுடைய சுறுசுறுப்பான தனிப்பட்ட பழக்கங்கள், தன் குடும்பத்தில் காட்டும் நல்ல நிர்வாகமும் உழைப்பும், அடுத்தவர்களின் தேவைகளையும் ஆறுதல்களையும் கருத்தில் கொள்ளும் தன்மை, தன்னுடைய நடத்தைப் பற்றிய விழிப்புணர்வு, ஏழை எளியவர்களுக்குக் காட்டும் அன்பும், எல்லோரிடமும் காட்டும் நன்மையும் மரியாதையுமான இந்த பூரண சுபாவமும் கிருபையும், தெய்வீக சுபாவத்திலிருந்து மட்டுமே வெளிப்படக்கூடியவை ஆகும். இவை, மரம் நல்லது என்பதை நிரூபிக்கிற நல்ல கனிகள் ஆகும் (மத்தேயு 7:17). இவை, சரியான ஆதாரத்திலிருந்து உருவாகும் கனிகள் ஆகும்; இயல்பாகவே குற்றமுள்ள மனிதனிடம் இவை ஒருபோதும் உருவாக முடியாது.
இது திருமணத் தேர்வுக்கான ஒரு வழிகாட்டியாக மிக மதிப்புமிக்கதாக அமைந்துள்ளது. அழகை அல்ல, குணநலனையே முதன்மையானதாகக் கருதி தேர்வு செய்ய வேண்டும். மாயையான அழகினை மேற்கொண்டு, கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயுடன் தொடர்புடைய உண்மையான மகிழ்ச்சியை முதன்மைப்படுத்த வேண்டும். இங்கேதான் மகிழ்ச்சிக்கான உறுதியான அடித்தளம் இருக்கிறது. “நான் ஒருவளை அவளுடைய அழகுக்காகத் தேர்வு செய்தால், அந்த அழகு நீங்கும் வரைதான் அவளை நேசிப்பேன்; அதன் பிறகு, கடமையும் மகிழ்ச்சியும் ஒருசேரக் கடைசியாகிவிடும், ஆனால், நான் அவளுடைய குணநலனுக்காக அவளை நேசித்தால், மற்ற எல்லா அடித்தளங்களும் வீழ்ந்தாலும், என் மகிழ்ச்சி பூரணமாய் நிலைத்திருக்கும்...” என்கிறார் மறைமலர் பிஷப் பிவரிட்ஜ். “இவ்வாறு, மீண்டும் மேத்தியூ ஹென்றி, “ஸ்திரீகளுக்கான இந்தக் கண்ணாடி மூடப்படுகிறது. அவர்கள் அதைத் திறந்து, தங்களை அலங்கரிக்க விரும்புகிறார்கள் என்றால், அவர்களுடைய அலங்காரம் இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அவருக்கு துதியும், கனமும், மகிமையும் உண்டாக காணப்படுவதாக" என கூறுகிறார்.