Christ the Rock of Peace

      தேவனோடு நமக்குள்ள நீதி, சமாதானம் ஆகியவைகள் பாய்ந்தோடக் கூடிய கன்மலையை நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். அந்தக் கன்மலைக் கிறிஸ்துவே. தன்னிடமுள்ள நற்காரியங்களால் ஒரு உண்மையான கிறிஸ்தவன் நீதிமானாக முடியாது. ஒருவன் அவனாகவே செய்த எந்த ஒரு காரியத்தாலும் அவனுடைய சமாதானத்தை அவன் காணமுடியாது. அவனுடைய ஜெபத்தினாலோ அவனுடைய பழக்க வழக்கங்களாலோ அல்லது மனந்திரும்புத-னாலோ அவன் தன்னை சீர்ப்படுத்திக் கொள்வதாலோ, அவனுடைய நன்னடத்தை, ஒழுக்கம் இவைகளின் மூலமாகவோ, அவனுயை தான தர்மங்கள் மூலமாகவோ சமாதானத்தை வாங்கிவிட முடியாது. இவை அனைத்தின் மூலமாகவும் அவனை நீதிமான் என்று கூறமுடியாது. அவர்களுக்குள்ளாகவே அனேக குறைபாடு உள்ளவர்களாக இருப்பதால், அவர்களுக்கே மிகப் பெரிய மன்னிப்பு தேவையாக இருக்கிறது. அவனை நீதிமானாக்கிக் கொள்ள எந்த ஒரு காரியமும் சொல்லப்படவில்லை. தேவனுடைய நியாயப் பிரமாணத்தின் தரத்தினைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் நல்லவன் என்று சொல்லக்கூடிய ஒரு கிறிஸ்தவன், நீதிமானாக்கப்பட்ட ஒரு பாவியை விட மன்னிப்புப் பெற்ற ஒரு குற்றவாளியைவிட உயர்ந்தவன் அல்ல. தகுதி என்று சொல்லிக் கொள்ளவோ, யோக்கியதையோ அல்லது தேவனுடைய இரக்கத்திற்கு உரிமை கோருவதற்கு கூட அவனிடம் ஒன்றுமில்லை. இவைகளின் மேல் ஒருவன் சார்ந்துக் கொள்வானானால் அவன் மிகவும் மோசமாக ஏமாற்றப்படுபவனாக இருப்பான்.

எந்த ஒரு மனிதனும் அவனுடைய கிரியைகளின் மூலமாக தேவனுக்கு முன் நீதிமான் என்று சிறு அளவில் கூட கூறமுடியாது என்று நான் நம்புகிறேன். மனிதனுக்கு முன்பாக ஒருவனுடைய கிரியைகள் நீதி உள்ளதாக இருக்கலாம். அவன் ஒரு கிறிஸ்தவன் என்பதற்கு அவனுடைய கிரியைகள் சாட்சி பகரலாம். ஆனால் தேவனுக்கு முன்பாக அவன் செய்கைகள் அவனை நீதிமானாக்க முடியாது. அவன் எப்போதும் குறையுள்ளவனாக, முழுமை அற்றவனாக, அவன் எட்டவேண்டிய அளவினை அடையாதவனாக அவன் வாழ்நாள் முழுவதும் இருப்பான். அவனுடைய சொந்த கிரியைககள் மூலமாக ஒருவன் நீதிமானாக, சமாதானமுள்ளவனாக மாற முடியாது. அப்படியானால் ஒரு உண்மையான கிறிஸ்தவன் எப்படி நீதிமானாக்கப்படுகிறான்? அவன் அனுபவிக்கும் சமாதானத்திற்கும், பாவமன்னிப்பை பெற்று விட்டேன் என்பதற்கான உணர்வைப் பெற்று அவன் மகிழ்ச்சியோடு இருப்பதற்கான இரகசியம் என்ன? நல்லவன் என்று ஒரு மனிதனை நினைத்து, பரிசுத்தமுள்ள தேவன் பாவியானவனை சூதுவாது நிறைந்த ஒருவனை எப்படி கையாள்கிறார் என்பதை நாம் எப்படி புரிந்துக் கொள்ள முடியும்? அவன் அனேக பாவங்களை செய்திருந்தாலும் அவனை எப்படி நீதிமானாக எண்ண முடியும்?

இந்த கேள்விகளுக்கெல்லாம் சொல்லக்கூடிய விடையானது சிறியதாகவும் சாதாரணமானதாகவும் இருக்கும். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினால் ஒரு உண்மையான கிறிஸ்தவன் நீதிமான் என்று எண்ணப்படுகிறான்.

கிறிஸ்துவின் மரணத்தினாலும், பாவ நிவிர்த்தி பெற்றதாலும் அவன் நீதிமானாக்கப்படுகிறான். கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார். (I கொரி. 15:3) இதுவே மிகப்பெரிய, நமக்கு புரியாத புதிருக்கான திறவுகோலாக இருக்கிறது. இங்கு மிகப்பெரிய பிரச்சனை தீர்க்கப்படுகிறது. தேவன் எவ்வாறு நீதியுள்ளவர் என்றும், தேவபக்தியற்றவர்களை எப்படி நீதிமான்களாக்குகிறார் என்பதைப் பற்றிய பெரிய பிரச்சனை தீர்க்கப்படுகிறது. கர்த்தராகிய இயேசுவின் வாழ்க்கையும், மரணமும் விளக்கப்பட்டுள்ளது. அவரே நம்முடைய சமாதானக் காரணர். (எபேசியர் 2:14)

உண்மையான ஒரு கிறிஸ்தவனுடைய இடத்தில் கிறிஸ்து நின்றார். அவரே பிணையாளியாகவும், பதிலாளாகவும் ஆனார். நம்முடைய மீறுதல், பாவங்களுக்காக கிறிஸ்து பாடுபட்டார். அதாவது அநீதியுள்ளவர்களுக்காக நீதிபரர் பாவமானார். சிலுவையில் நம்முடைய தண்டனைகளை அவர் சரீரத்திலே சகித்தார். நாம் அடைய வேண்டிய தேவ கோபாக்கினையை அவர் ஏற்றுக் கொண்டார். (1 பேதுரு. 3:18).

ஒரு கிறிஸ்தவன் கொடுக்க வேண்டிய கடனைக் கிறிஸ்து அவருடைய சொந்த இரத்தத்தினால் கொடுத்து விட்டார். அவர் அதை எண்ணிப் பார்த்து அருடைய மரணத்தின் மூலமாக வெகுதூரத்திற்கு அகற்றி விட்டார். தேவன் நீதியுள்ளவராயிருப்பதால் மனிதன் செலுத்த வேண்டிய கடனை இரண்டு முறை கொடுக்க வேண்டும் என்று கேட்க மாட்டார். ஆகையால் ஒரு மெய் கிறிஸ்தவன் நீதிமானாக காணப்படுகிறான். (அப்போஸ்தலர் 20:28) (1 பேதுரு 1:18,19)

தேவனுடைய கட்டளைகளுக்கு கிறிஸ்துவானவர் முழுமையாக கீழ்ப்படிந்தார். பிரபஞ்சத்தின் அதிபதியான சாத்தானால் அவரில் ஒரு குற்றமும் காண முடியவில்லை.

இதினிமித்தம் அனைத்தையும் நிறைவேற்றியதால் அவர் அழிவில்லாத நீதியை கொண்டுவந்து அதன் மூலமாக அவருடைய பிள்ளைகள் அனைவரும் நீதியின் வஸ்திரத்தை தேவனின் பார்வையில் பெற்றுள்ளனர். இதனால் ஒரு உண்மையான கிறிஸ்தவன் ஒரு நீதிமானாக காணப்படுகிறான் (தானியேல் 9:24), (ரோமர். 10:4) 

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் கிறிஸ்துவானவர் மெய்யான ஒரு கிறிஸ்தவனுக்காக வாழ்ந்தார். கிறிஸ்து அவனுக்காக மரித்தார். அவனுக்காக அவர் கல்லறைக்கு சென்றார், அவனுக்காக உயிர்த்தெழுந்தார். கிறிஸ்து அவனுக்காக பரத்திற்கு சென்று அவனுடைய ஆத்துமாவிற்காக பரிந்துப் பேசிக் கொண்டிருக்கிறார். அவனுடைய மீட்புக்காக கிறிஸ்துவானவர் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்தார். சகலத்தையும் கொடுத்துத் தீர்த்தார். எல்லா பாடுகளையும் பட்டார். அதனால் உண்மையான கிறிஸ்தவன் நீதியைப் பெற்றுக் கொண்டு அதன் மூலமாக சமாதானத்தையும் பெற்றுக் கொள்கிறான். அவனுக்குள் ஒன்றுமில்லை. ஆனால் அவனுடைய ஆத்துமாவிற்கு தேவையான அனைத்தையும் அவர் கொடுத்திருக்கிறார். (கொலோசியர் 2:3:3:11)

இயேசு கிறிஸ்துவுக்கும் ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்கும் இடையேயான பரிமாற்றங்கள் எவ்வளவு ஆசீர்வாதமானவைகள் என்பதை யார் சொல்லக் கூடும்! கிறிஸ்துவின் நீதியானது அவன் மேல் வைக்கப்படுகிறது. அவனுடைய பாவங்கள் கிறிஸ்துவின் மேல் சுமத்தப்படுகிறது. அவன் நிமித்தம் கிறிஸ்துவானவர் பாவியாக எண்ணப்படுகிறார். கிறிஸ்துவின் நிமித்தம் அவன் பாவமற்றவனாக எண்ணப்படுகிறான். அவர் பாவமற்றவராக இருந்தும் அவன் நிமித்தமாக அவர் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டார். அவனிடம் பாவம் குற்றம் குறைபாடுகள் இருந்தாலும் கிறிஸ்துவின் நிமித்தம் அவன் விடுவிக்கப்படுகிறான். உண்மையாகவே ஞானம் இங்கே காணப்படுகிறது. தேவன் நியாயம் உள்ளவராக இருந்தாலும் தேவபக்தி அற்றவர்களை மன்னிக்கிறார். மனுஷன் தான் ஒரு பாவி என்பதை உணர்ந்தாலும் பரலோகத்தைக் குறித்ததான நல் நம்பிக்கை இருப்பதால் அவன் சமாதானமுடையவனாக இருக்கிறான். மனிதருக்குள் யார் இப்படி கற்பனை செய்ய முடியும்? இதனைக் கேள்விப்படும் போது யார் இதைப் போற்றாமல் இருக்கக் கூடும் (1 கொரிந்தியர் 5:21)

சுவிசேஷப் புத்தகத்தில் அன்பின் வரலாற்றைக் காட்சிப் படுத்தியிருப்பதை வாசிக்கிறோம். பாவ உலகத்திற்கு தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து வந்ததைக் குறித்து வாசிக்கிறோம். உலகத்திற்கு வரும் முன் அவரைக் குறித்ததான கவலை அவருக்கு இல்லை. அவர் வந்ததைக் குறித்து அவர் மேன்மை கொள்ளவும் இல்லை. சிறைப்பட்டிருந்த நம்மை மீட்பதற்காக, கட்டப்படுவதற்கு அவர் தம்மை ஒப்புக் கொடுத்தார். மரண பரியந்தம் அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் தம்மைத் தாழ்த்தினார். ஆதாமின் சந்ததியாகிய நாம் எந்த விதத்திலும் தகுதியற்றவர்கள் என்றாலும் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்படி அதற்கான வழியைத் திறந்தார். நம்முடைய பாவங்களைப் பொறுமையோடு சகித்தார். அவருடைய நீதியை நாம் தரித்துக் கொள்ளும்படி நம்முடைய மீறுதல்களை அவர் ஏற்றுக் கொண்டார். தேவனுடய பிள்ளைகள் என்ற சுதந்தரத்தை பெற்று ஒளியிலே நடக்க செய்தார். (பிலிப்பியர் 2:8) 

இதனை அறிவுக் கெட்டாத அன்பு என்று கூறலாம். கிறிஸ்துவின் மூலமாக நீதிமான்களாக்கப்படுதல் என்பதைப் போல எந்த வழியிலும் இலவசமான இந்த கிருபை இவ்வளவு பிரகாசமாக இருந்ததில்லை. (எபேசியர் 3:19)

இது பழமையான வழியாக இருந்தாலும் இதன் மூலமாக மாத்திரமே ஆதாமின் சந்ததியார் உலகத் தோற்றத்தி-ருந்து சமாதானத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆபே-ன் பின் சந்ததியாரில் எந்த ஒரு மனுஷனும் மனுஷியும் யாராக இருந்தாலும் ஒரு துளி இரக்கத்தையும் கிறிஸ்துவின் மூலமாகவே பெற்றிருக்கின்றனர். மோசேயின் காலத்திற்கு முன்னதாக கட்டப்பட்ட ஒவ்வொரு ப-பீடமும் உள்ளான ஒரு எண்ணம் கொண்டதாக இருந்தது. ஒவ்வொரு ப-யும், யூதர்களின் சட்டத் திட்டங்களும், ஒவ்வொரு உரிமைக் கட்டளைகளும் இஸ்ரவேலருடைய பிள்ளைகளை சுட்டிக் காட்டுவதாக இருந்தது. இதை எல்லா தீர்க்கதரிசிகளும் சாட்சி கொடுத்தனர். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் கிறிஸ்துவின் மூலமாக நீதியைப் பற்றிய பார்வையை இழந்து போவாமானால் பழைய ஏற்பாட்டின் பெரும் பகுதியானவை அர்த்தமற்ற சிக்கலான வலைப்பின்னல் போல இருந்திருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக நீதிமானாக்கக் கூடிய வழியாக மனிதத் தன்மையின் தேவைகளை நிறைவு செய்கிறது. விழுந்து போனவனாக மனிதன் இருந்தாலும் அவனுக்குள் ஒரு மனசாட்சி இருக்கிறது. அவனுடைய சொந்த தேவைகளை குறித்த சிறிய உணர்வு அவனுக்கு இருந்தாலும் சில நேரங்களில் தேவைகளை அவன் அதிகம் உணரும் போது கிறிஸ்துவானவர் மாத்திரமே அவனை திருப்திபடுத்த முடியும். அவனுடைய மனசாட்சி பசியில்லாமல் இருந்தால் எந்த ஒரு மத சம்பந்தமான, விளையாட்டுப் பொருளைப் போன்றவைகளைப் போல அவனுடைய ஆத்துமாவை சாந்தப்படுத்தி அவனை அமைதியாக இருக்கும்படி செய்யும். ஆனால் அவனுடைய மனசாட்சியானது பசியாய் இருக்குமானால் உண்மையான ஆவிக்குரிய ஆகாரம் மாத்திரமே அவனை அமைதியாக்கும். அந்த ஆகாரம் கிறிஸ்துவே.

ஒரு மனிதனுடைய மனசாட்சியானது உண்மையாகவே விழித்திருக்குமானால் அவனுக்குள்ளாக ஏதோ ஒன்று இருந்துக் கொண்டு முணுமுணுக்கும் குர-ல், என்னுடைய ஆத்துமாவுக்காக ஒரு விலை கொடுத்திருக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் சமாதானமில்லை. உடனே சுவிசேஷமானது கிறிஸ்துவோடு கூட அவனை சந்திக்கிறது. அவனுடைய மீட்புக்காக கிறிஸ்துவானவர் விலையைக் கொடுத்து விட்டார். அவனுக்காக கிறிஸ்து அவரையே கொடுத்திருக்கிறார். நியாயப்பிரமாணத்தின் சாபங்களி-ருந்து கிறிஸ்து அவனை விடுவித்திருக்கிறார். அதினால் அவரே சாபமானார். (கலாத்தியர் 2:20; 3:13)

மனிதனுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது. மனிதனின் மனசாட்சி விழித்திருக்கும் போது, என்னிடம் கொஞ்சமாவது நீதி இருக்க வேண்டும். அல்லது சமாதானமற்ற நிலை என்று முணுமுணுக்கும். உடனே சுவிசேஷமானது கிறிஸ்துவோடு சேர்ந்து அவனை சந்திக்கிறது. நித்திய நீதியை அவர் நமக்கு கொடுத்திருக்கிறார். நீதியின் பிரமாணத்திற்கு அவர் முடிவாக இருக்கிறார். (ரோமர்.10:4) நீதியின் தேவன் என்று அவர் அழைக்கப்படுகிறார். (எரே.23:6) பாவமறியாத அவர், நாம் நீதிமான்களாகும் பொருட்டு தேவன் அவரை நமக்காக பாவமாக்கினார். (2 கொரிந்தியர் 5:21)

மனிதனுக்குள் இருக்கும் மனசாட்சியானது விழித்திருக்கும் போது, "என்னுடைய பாவங்களுக்கு தக்கதான பாடுகளும் தண்டனையும் கட்டாயம் உண்டு. இல்லாவிட்டால் எனக்கு சமாதானமில்லை" என்று முணுமுணுக்கும். அந்நேரமே சுவிசேஷமானது கிறிஸ்துவுடன் சேர்ந்து அவனை சந்திக்கிறது. கிறிஸ்து பாவங்களுக்காக பாடுபட்டிருக்கிறார். தேவனிடம் கிட்டி சேர்வதற்காக அநீதியுள்ளவர்களாகிய நமக்காக நீதியுள்ளவராக பாடுபட்டார் சிலுவை மரத்திலே நம்முடைய பாவங்களை அவர் தமது சொந்த சரீரத்தில் சுமந்து தீர்த்தார். அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (பேதுரு 2:24; 3:18)

மனிதனுக்குள் இருக்கும் மனசாட்சியானது அவனுக்குள் இருந்து என்னுடைய ஆத்துமாவிற்காக எனக்கு ஒரு ஆசாரியன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எனக்கு சமாதானமில்லை என்று முணுமுணுக்கிறது. அந்நேரமே சுவிசேஷமானது கிறிஸ்துவுடனே சேர்ந்து அவனை சந்திக்கிறது. மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே ஒரு மத்தியஸ்தராக இயேசு கிறிஸ்துவை நியமிக்கிறார். பாவிகளுக்காக வாதாடுபவராக இருந்தார்.

அவர் ஒப்புதல் பெற்ற ஒரு ஆலோசகராகவும், நோயுற்றிருக்கும் ஆத்துமாவிற்கு மருத்துவராகவும் இருக்கிறார். அவர் மகா பிரதான ஆசாரியராகவும், பாவங்களை மன்னிக்கிறவராகவும், சர்வவல்லமையுள்ளவரும், பாவ பாரத்தால் பாவ அறிக்கையை ஒரு பாவியான மனுஷன் பண்ணும் போது, அதை கிருபையாய் கேட்கிறவருமாய் இருக்கிறார். ( தீமோத்தேயு 2:5), (எபிரெயர் 8:1)

கிறிஸ்தவர்களைப் போல் நடிக்கும் ஆயிரக்கணக்கானவர்களை எனக்குத் தெரியும். கிறிஸ்துவின் நீதியை குறித்ததான உபதேசத்தின் அசாதாரணமான அழகை அவர்கள் கண்டதே இல்லை. ஏனென்றால் உலகக் காரியங்களில் அவர்களின் உள்ளமானது புதையுண்டிருக்கிறது. அவர்களின் மனசாட்சியானது முடக்குவாதத்தால் உணர்விழந்து பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறது.

அவன் கண்களுக்கு பலவண்ண விளக்குகளும் காதுகளுக்கு பலவித இசைகளும் பொருந்தாததாக பிடிக்காததாக இருக்கலாம். ஆனால் பாவியான ஒரு மனுஷனுக்கு கிறிஸ்துவே அதி முக்கியமான தேவையாக இருக்கிறார். கிறிஸ்துவின் மூலமாக நீதிமானாக்கப்படுவது சமாதானத்திற்கான உண்மையான ஒரே வழியாக இருக்கிறது. தேவனைக் குறித்த சத்தியத்தை உறுதியாக பற்றிக்கொள்ள ஏமாந்து போகக் கூடாது.

கிறிஸ்துவின் மூலமாக அல்லாமல் தேவனோடு நமக்கு சமாதானம் இல்லை என்பதை நீங்கள் நம்ப வேண்டும். சமாதானமானது அவர் தந்த அசாதாரணமான வெகுமதி. அவர் உலகத்தை விட்டு சென்ற போது சமாதானத்தை விட்டு செல்ல அவருக்கு மாத்திரமே வல்லமை இருந்தது. இந்த சமாதானத்தைத் தவிர மற்றவை எல்லாம் கேள்வியாகவும் மாயத்தோற்றம் கொண்டதாகவும் இருக்கிறது. உணவில்லாமல் பசியும், தண்ணீரில்லாமல் தாகமும், ஓய்வில்லாமல் களைப்பும் விலகிப் போகுமென்றால் கிறிஸ்துவல்லாமல் சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது.

இந்த சமாதானம் உங்களுக்கு இருக்கிறதா? கிறிஸ்துவானவர் தமது சொந்த இரத்தத்தால் சம்பாதித்த இந்த சமாதானத்தை இலவசமாய் கிறிஸ்துவின் மூலமாக கொடுக்கப்படுவதை கற்றுக் கொள்ள வாஞ்சையுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் இந்த சமாதானம் உனக்கு சொந்தமாக இருக்கிறதா? என்னுடைய கேள்விக்கு திருப்தியான பதிலைத் தரும் வரை ஓய்ந்திருக்காதே; உனக்கு சமாதானம் இருக்கிறதா?

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.