இணை வசன வேதாகமம்

எபேசியர் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1இதன் காரணமாக, பிற இனத்தவராகிய உங்களுக்காகக் கிறிஸ்து இயேசுவின் பொருட்டுப் பவுலாகிய நான் கைதியாக இருக்கிறேன்.2கொரி 10:1 கலா 5:2
2உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன்.எபே 4:21 கலா 1:13 கொலோ 1:4 கொலோ 1:6 2தீமோ 1:11
3அந்த மறைபொருள் எனக்கு இறை வெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அதைப்பற்றி நான் ஏற்கெனவே சுருக்கமாக உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.எபே 1:17 அப் 22:17 அப் 22:21 அப் 23:9 அப் 26:15-19 1கொரி 2:9 1கொரி 2:10 கலா 1:12 கலா 1:16-19
4அதை நீங்கள் வாசிக்கும்போது, கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நான் புரிந்து கொண்டேன் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.மத் 13:11 1கொரி 2:6 1கொரி 2:7 1கொரி 13:2 2கொரி 11:6
5அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.எபே 3:9 மத் 13:17 லூக் 10:24 அப் 10:28 ரோம 16:25 2தீமோ 1:10 2தீமோ 1:11 தீத் 1:1-3 எபிரெ 11:39 எபிரெ 11:40 1பேது 1:10-12
6நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.எபே 2:13-22 ரோம 8:15-17 கலா 3:26-29 கலா 4:5-7
7கடவுள் வல்லமையோடு என்னுள் செயல்பட்டு எனக்கு அளித்த அவரது அருள்கொடைக்கு ஏற்ப, அந்த நற்செய்தியின் தொண்டன் ஆனேன்.எபே 3:2 ரோம 15:16 2கொரி 3:6 2கொரி 4:1 கொலோ 1:23-25
8கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப்பற்றிய நற்செய்தியை பிற இனத்தாருக்கு அறிவிக்கவும்,நீதி 30:2 நீதி 30:3 ரோம 12:10 1கொரி 15:9 பிலிப் 2:3 1தீமோ 1:13 1தீமோ 1:15 1பேது 5:5 1பேது 5:6
9எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்குள் ஊழி காலமாக மறைந்திருந்த இந்த மறைபொருளின் திட்டம் இன்னதென யாவருக்கும் தெளிவுபடுத்தவும், இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையவனாகிய எனக்கு இந்த அருள் வழங்கப்பட்டுள்ளது.மத் 10:27 மத் 28:19 மாற் 16:15 மாற் 16:16 லூக் 24:47 ரோம 16:26 கொலோ 1:23 2தீமோ 4:17 வெளிப் 14:6
10அதன்மூலம் பலவகையில் விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர், வான்வெளியில் அதிகாரம் செலுத்துவோர் ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது.யாத் 25:17-22 சங் 103:20 சங் 148:1 சங் 148:2 ஏசா 6:2-4 எசே 3:12 1பேது 1:12 வெளிப் 5:9-14
11இவ்வாறு கடவுள் ஊழி காலமாகக் கொண்டிருந்த திட்டத்தை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாய் நிறைவேற்றினார்.எபே 1:4 எபே 1:9 எபே 1:11 ஏசா 14:24-27 ஏசா 46:10 ஏசா 46:11 எரே 51:29 ரோம 8:28-30 ரோம 9:11 2தீமோ 1:9
12கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது.எபே 2:18 யோவா 14:6 ரோம 5:2 எபிரெ 4:14-16 எபிரெ 10:19-22
13ஆகவே உங்கள் பொருட்டு நான் படும் துன்பங்களைக் கண்டு நீங்கள் மனந்தளர்ந்து போகாதபடி உங்களை வேண்டுகிறேன். அத்துன்பங்களே உங்களுக்குப் பெருமையாக அமையும்.உபா 20:3 ஏசா 40:30 ஏசா 40:31 செப் 3:16 அப் 14:22 கலா 6:9 2தெச 3:13 எபிரெ 12:3-5
14இதன் காரணமாக, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும்எபே 1:16-19 1இரா 8:54 1இரா 19:18 2நாளா 6:13 எஸ்றா 9:5 சங் 95:6 ஏசா 45:23 தானி 6:10 லூக் 22:41 அப் 7:60 அப் 9:40 அப் 20:36 அப் 21:5
15உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன்.எபே 1:10 எபே 1:21 பிலிப் 2:9-11 கொலோ 1:20 வெளிப் 5:8-14 வெளிப் 7:4-12
16அவருடைய அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும் தம் தூய ஆவி வழியாகத் தந்தருளுவாராக!எபே 3:8 எபே 1:7 எபே 1:18 எபே 2:7 ரோம 9:23 பிலிப் 4:19 கொலோ 1:27
17நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!எபே 2:21 ஏசா 57:15 யோவா 6:56 யோவா 14:17 யோவா 14:23 யோவா 17:23 ரோம 8:9-11 2கொரி 6:16 கலா 2:20 கொலோ 1:27 1யோவா 4:4 1யோவா 4:16 வெளிப் 3:20
18இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!எபே 3:19 எபே 1:18-23 யோபு 11:7-9 சங் 103:11 சங் 103:12 சங் 103:17 சங் 139:6 ஏசா 55:9 யோவா 15:13 கலா 2:20 கலா 3:13 பிலிப் 2:5-8 பிலிப் 3:8-10 1தீமோ 1:14-16 1தீமோ 3:16 தீத் 2:13 தீத் 2:14 வெளிப் 3:21
19அதன் மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக!எபே 3:18 எபே 5:2 எபே 5:25 யோவா 17:3 2கொரி 5:14 கலா 2:20 பிலிப் 2:5-12 கொலோ 1:10 2பேது 3:18 1யோவா 4:9-14
20நம்முள் வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான கடவுளுக்கேஆதி 17:1 ஆதி 18:4 2நாளா 25:9 எரே 32:17 எரே 32:27 தானி 3:17 தானி 6:20 மத் 3:9 யோவா 10:29 யோவா 10:30 ரோம 4:21 ரோம 16:25 எபிரெ 7:25 எபிரெ 11:19 எபிரெ 13:20 எபிரெ 13:21 யாக் 4:12 யூதா 1:24
21திருச்சபையில் கிறிஸ்து இயேசு வழியாக தலைமுறை தலைமுறையாக என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.எபே 1:6 1நாளா 29:11 சங் 29:1 சங் 29:2 சங் 72:19 சங் 115:1 ஏசா 6:3 ஏசா 42:12 மத் 6:13 லூக் 2:14 ரோம 11:36 ரோம 16:27 கலா 1:5 பிலிப் 2:11 பிலிப் 4:20 2தீமோ 4:18 எபிரெ 13:21 1பேது 5:11 வெளிப் 4:9-11 வெளிப் 5:9-14 வெளிப் 7:12-17

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.