| 1 | தாவீதும், படைத்தலைவர்களும் ஆசாப்பின் மகன்களை சிறப்பு வேலைக்காகத் தனியாகப் பிரித்தனர். ஆசாப்பின் மகன்கள் ஏமான், எதுத்தூன் ஆகியோர். அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வதை தேவனுக்கு சிறப்புப்பணியாகக் கொண்டனர். இதனைச் சுரமண்டலங்கள், தம்புருகள், கைத்தாளங்கள் போன்றவற்றால் செய்தனர். இவ்வகையில் பணி செய்தவர்களின் பெயர் பட்டியல் இது: |
| 2 | ஆசாப்பின் குடும்பத்தில், சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா ஆகியோர். தாவீது அரசன், ஆசாப்பைத் தீர்க்கதரிசனம் சொல்லத் தேர்ந்தெடுத்தான். ஆசாப் மகன்களுக்கு வழிகாட்டினான். |
| 3 | எதுத்தானின் குடும்பத்திலிருந்து கெதலியா, சேரீ, எஷாயா, சீமேயி, அஷபியா, மத்தித்தியா எனும் ஆறுபேர். எதுத்தான் தன் மகன்களுக்கு வழிகாட்டினான். எதுத்தான் சுரமண்டலங்களைப் பயன்படுத்தி தீர்க்கதரிசனம் சொன்னான். கர்த்தருக்கு நன்றி சொல்லுவதும் துதிப்பதுமாக இருந்தான். |
| 4 | ஏமானின் மகன்களான புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் ஆகியோர் பணிசெய்தனர். |
| 5 | இவர்கள் அனைவரும் ஏமானின் மகன்கள். ஏமான் தாவீதின் தீர்க்கதரிசி. ஏமானைப் பலப்படுத்துவதாக தேவன் வாக்களித்துள்ளார். எனவே ஏமானுக்கு அதிக மகன்கள். தேவன் அவனுக்கு 14 மகன்களையும் 3 மகள்களையும் கொடுத்தார். |
| 6 | ஏமான் தன் மகன்களை ஆலயத்தில் பாடுவதற்குப் பயிற்சிகொடுத்தான். அவர்கள் சுரமண்டலங்கள், தம்புருக்கள், கைத்தாளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள். இவ்வாறு அவர்கள் தேவாலயத்தில் பணிசெய்தனர். தாவீது அரசன் அவர்களைத் தேர்ந்தெடுத்தான். |
| 7 | அவர்களும் அவர்களது உறவினர்களும் லேவியர்களின் கோத்திரத்தில் உள்ளவர்கள் பயிற்சி பெற்றனர். அவர்களில் 288 பேர் கர்த்தரை துதித்துப் பாடக் கற்றிருந்தனர். |
| 8 | அவர்கள் சீட்டுக் குலுக்கல் மூலம் அவர்களுக்குரிய வேலைகளை ஒதுக்கினான். எல்லோரும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர். முதியவர்களும், இளைஞர்களும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர். குருக்களும், மாணவர்களும் ஒரேவிதமாக நடத்தப்பட்டனர். |
| 9 | முதலில், ஆசாப்பின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டாவதாக, கெதலியா மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 10 | மூன்றாவதாக, சக்கூரின் மகன்களிடமும், உற வினர்களிடமும், இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 11 | நான்காவதாக, இஸ்ரியின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 12 | ஐந்தாவதாக, நெத்தனியாவின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 13 | ஆறாவதாக, புக்கியாவின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 14 | ஏழாவதாக, எசரேலாவின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 15 | எட்டாவதாக, எஷாயாவின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 16 | ஒன்பதாவதாக, மத்தனீயாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 17 | பத்தாவதாக, சிமேயாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 18 | பதினொன்றாவதாக அசாரியேலின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். |
| 19 | பன்னிரெண்டாவதாக, அஷாபியாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள்தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 20 | பதிமூன்றாவதாக, சுபவேலின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 21 | பதினான்காவதாக, மத்தித்தியாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 22 | பதினைந்தாவதாக, எரேமோத்தின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 23 | பதினாறாவதாக, அனனியாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 24 | பதினேழாவதாக, யோஸ்பேக்காஷாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 25 | பதினெட்டாவதாக, ஆனானியின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 26 | பத்தொன்பதாவதாக, மலோத்தின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 27 | இருபதாவதாக, எலியாத்தாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 28 | இருபத்தொன்றாவதாக, ஒத்திரின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 29 | இருபத்திரெண்டாவதாக கிதல்தியின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 30 | இருபத்துமூன்றாவதாக, மகாசியோத்தின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 31 | இருபத்துநான்காவதாக, ரொமந்தியேசரின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |