இணை வசன வேதாகமம்

பிலிப்பியர் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1எனவே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா?பிலிப் 3:3 லூக் 2:10 லூக் 2:11 லூக் 2:25 யோவா 14:18 யோவா 14:27 யோவா 15:11 யோவா 16:22-24 யோவா 17:13 ரோம 5:1 ரோம 5:2 ரோம 15:12 ரோம 15:13 1கொரி 15:31 2கொரி 1:5 2கொரி 1:6 2கொரி 2:14 2தெச 2:16 2தெச 2:17 எபிரெ 6:18 1பேது 1:6-8
2அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்.பிலிப் 2:16 பிலிப் 1:4 பிலிப் 1:26 பிலிப் 1:27 யோவா 3:29 2கொரி 2:3 2கொரி 7:7 கொலோ 2:5 1தெச 2:19 1தெச 2:20 1தெச 3:6-10 2தெச 2:13 2தீமோ 1:4 பிலேமோ 1:20 1யோவா 1:3 1யோவா 1:4 2யோவா 1:4 3யோவா 1:4
3கட்சிமனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.பிலிப் 2:14 பிலிப் 1:15 பிலிப் 1:16 நீதி 13:10 ரோம 13:13 1கொரி 3:3 2கொரி 12:20 கலா 5:15 கலா 5:20 கலா 5:21 கலா 5:26 கொலோ 3:8 1தீமோ 6:4 யாக் 3:14-16 யாக் 4:5 யாக் 4:6 1பேது 2:1 1பேது 2:2
4நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.மத் 18:6 ரோம 12:15 ரோம 14:19-22 ரோம 15:1 1கொரி 8:9-13 1கொரி 10:24 1கொரி 10:32 1கொரி 10:33 1கொரி 12:22-26 1கொரி 13:4 1கொரி 13:5 2கொரி 6:3 2கொரி 11:29 யாக் 2:8
5கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!மத் 11:29 மத் 20:26-28 லூக் 22:27 யோவா 13:14 யோவா 13:15 அப் 10:38 அப் 20:35 ரோம 14:15 ரோம 15:3 ரோம 15:5 1கொரி 10:33 1கொரி 11:1 எபே 5:2 1பேது 2:21 1பேது 4:1 1யோவா 2:6
6கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.ஏசா 7:14 ஏசா 8:8 ஏசா 9:6 எரே 23:6 மீகா 5:2 மத் 1:23 யோவா 1:1 யோவா 1:2 யோவா 1:18 யோவா 17:5 ரோம 9:5 2கொரி 4:4 கொலோ 1:15 கொலோ 1:16 1தீமோ 1:17 1தீமோ 3:16 தீத் 2:13 எபிரெ 1:3 எபிரெ 1:6 எபிரெ 1:8 எபிரெ 13:8
7ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,சங் 22:6 ஏசா 49:7 ஏசா 50:5 ஏசா 50:6 ஏசா 52:14 ஏசா 53:2 ஏசா 53:3 தானி 9:26 சகரி 9:9 மாற் 9:12 ரோம 15:3 2கொரி 8:9 எபிரெ 2:9-18 எபிரெ 12:2 எபிரெ 13:3
8சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.மத் 17:2 மாற் 9:2 மாற் 9:3 லூக் 9:29
9எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.ஆதி 3:15 சங் 2:6-12 சங் 8:5-8 சங் 45:6 சங் 45:7 சங் 69:29 சங் 69:30 சங் 72:17-19 சங் 91:14 சங் 110:1 சங் 110:5 ஏசா 9:7 ஏசா 49:6-8 ஏசா 52:13 ஏசா 53:12 தானி 2:44 தானி 2:45 தானி 7:14 மத் 11:27 மத் 28:18 லூக் 10:22 யோவா 3:35 யோவா 3:36 யோவா 5:22-27 யோவா 13:3 யோவா 17:1-3 யோவா 17:5-3 அப் 2:32-36 அப் 5:31 ரோம 14:9-11 1கொரி 15:24-27 எபிரெ 2:9 எபிரெ 12:2 2பேது 1:17 வெளிப் 1:5 வெளிப் 3:21 வெளிப் 5:12 வெளிப் 11:15 வெளிப் 19:16
10ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்:ஆதி 41:43 ஏசா 45:23-25 மத் 27:29 மத் 28:18 ரோம 11:4 ரோம 14:10 ரோம 14:11 எபே 3:14 எபிரெ 1:6 வெளிப் 4:10 வெளிப் 5:13 வெளிப் 5:14
11தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக”இயேசு கிறிஸ்து ஆண்டவர்” என எல்லா நாவுமே அறிக்கையிடும்.சங் 18:49 மத் 10:32 யோவா 9:22 யோவா 12:42 ரோம 10:9 ரோம 15:9 1யோவா 4:2 1யோவா 4:15 2யோவா 1:7 வெளிப் 3:5
12என் அன்பர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்படிந்து வருகிறீர்கள்: நான் உங்களிடம் வந்தபோது மட்டுமல்ல, அதைவிட அதிகமாக உங்களோடு இல்லாத இப்பொழுதும் கீழ்ப்படிந்து வருகிறீர்கள். எனவே நீங்கள் அச்சத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள்.பிலிப் 4:1 1கொரி 4:14 1பேது 2:11
13ஏனெனில், கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார். அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.2நாளா 30:12 ஏசா 26:12 எரே 31:33 எரே 32:38 யோவா 3:27 அப் 11:21 2கொரி 3:5 எபிரெ 13:21 யாக் 1:16-18
14முணுமுணுக்காமலும், வாதாடாமலும் யாவற்றையும் செய்யுங்கள்.பிலிப் 2:3 யாத் 16:7 யாத் 16:8 எண் 14:27 சங் 106:25 மத் 20:11 மாற் 14:5 அப் 6:1 1கொரி 10:10 யாக் 5:9 1பேது 4:9 யூதா 1:16
15அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமும் கபடுமற்றவர்களாய்க் கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்: உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்.லூக் 1:6 1கொரி 1:8 எபே 5:27 1தெச 5:23 1தீமோ 3:2 1தீமோ 3:10 1தீமோ 5:7 தீத் 1:6 2பேது 3:14
16கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையும் வகையில், வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். வீணாக நான் ஓடவில்லை, வெறுமனே நான் உழைக்கவில்லை என்பது அதனால் தெளிவாகும்.பிலிப் 1:27 சங் 40:9 சங் 71:17 மத் 10:27 லூக் 12:8 ரோம 10:8-16 வெளிப் 22:17
17நம்பிக்கையால் நீங்கள் படைக்கும் பலியில் நான் என் இரத்தத்தையே பலிப் பொருளாக வார்க்கவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே. அம்மகிழ்ச்சியை நான் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன்.பிலிப் 2:30 பிலிப் 1:20 அப் 20:24 அப் 21:13 2கொரி 12:15 1தெச 2:8 2தீமோ 4:6 1யோவா 3:16
18அதுபோலவே நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள். உங்கள் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.பிலிப் 3:1 பிலிப் 4:4 எபே 3:13 யாக் 1:2-4
19ஆண்டவர் இயேசு அருள்கூர்ந்தால், திமொத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்ப இயலும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு உங்களைப்பற்றிய செய்திகளை அறிந்து நானும் உளமகிழ்வேன்.பிலிப் 2:24 எரே 17:5 மத் 12:21 ரோம 15:12 எபே 1:13 2தீமோ 1:12 யாக் 4:15 1பேது 1:21
20என் உளப்பாங்கிற்கு ஏற்ப, உங்கள்மீது உண்மையான கவலை கொள்வதற்கு அவரைத்தவிர வேறொருவரும் என்னிடமில்லை.பிலிப் 2:2 பிலிப் 2:22 சங் 55:13 நீதி 31:29 யோவா 10:13 யோவா 12:6 1கொரி 1:10 1கொரி 1:11 கொலோ 4:11 1தீமோ 1:2 2தீமோ 1:5
21எல்லாரும் தம்மைச் சார்ந்தவற்றைத் தேடுகிறார்களே தவிர, இயேசு கிறிஸ்துவைச் சார்ந்தவற்றைத் தேடுவதில்லை.பிலிப் 2:4 ஏசா 56:11 மல்கி 1:10 மத் 16:24 லூக் 9:57-62 லூக் 14:26 அப் 13:13 அப் 15:38 1கொரி 10:24 1கொரி 10:33 1கொரி 13:5 2தீமோ 1:15 2தீமோ 3:2 2தீமோ 4:10 2தீமோ 4:16
22ஆனால் திமொத்தேயுவின் தகைமை உங்களுக்குத் தெரியும். தந்தையோடு சேர்ந்து மகன் பணியாற்றுவது போல் என்னோடு சேர்ந்து அவர் நற்செய்திக்காகப் பணியாற்றியுள்ளார்.அப் 16:3-12 2கொரி 2:9 2கொரி 8:8 2கொரி 8:22 2கொரி 8:24
23என் நிலைமை எப்படி இருக்கும் எனத் தெரிந்தவுடன் அவரை உங்களிடம் அனுப்ப முடியும் என எதிர்பார்க்கிறேன்.1சாமு 22:3
24ஆண்டவர் அருள்கூர்ந்தால் நானே உங்களிடம் விரைவில் வருவேன் என உறுதியாக நம்புகிறேன்.பிலிப் 2:19 பிலிப் 1:25 பிலிப் 1:26 ரோம 15:28 ரோம 15:29 பிலேமோ 1:22 2யோவா 1:12 3யோவா 1:14
25என் சகோதரரும் உடன் உழைப்பாளரும் உடன் போர் வீரருமான எப்பப்பிராதித்துவை என் தேவைகளில் எனக்குத் துணை செய்யும்படி நீங்கள் அனுப்பி வைத்தீர்கள். அவரை இப்பொழுது உங்களிடம் திரும்ப அனுப்புவது தேவை எனக் கருதுகிறேன்.பிலிப் 4:18
26ஏனெனில் அவர் உங்கள் எல்லாருக்காகவும் ஏக்கமாயிருக்கிறார். குறிப்பாக, அவர் உடல்நலம் குன்றியிருந்ததைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டதை அறிந்து மனங்கலங்கியுள்ளார்.பிலிப் 1:3 பிலிப் 1:8 பிலிப் 4:1 2சாமு 13:39 ரோம 1:11 2கொரி 9:14
27அவர் உடல்நலம் குன்றி, இறக்கும் நிலையில் இருந்தது உண்மையே. ஆனால் கடவுள் அவர்மேல் இரக்கம் கொண்டார். அவர்மேல் மட்டும் அல்ல, துயரத்துக்கு மேல் துயரம் எனக்கு நேராதபடி, என்மேலும் இரக்கம் கொண்டார்.பிலிப் 2:30 2இரா 20:1 சங் 107:18 பிரச 9:1 பிரச 9:2 யோவா 11:3 யோவா 11:4 அப் 9:37
28அவரை மிக விரைவில் அனுப்பிவைக்கிறேன். நீங்கள் அவரை மீண்டும் பார்ப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். நானும் துயரின்றி இருப்பேன்.பிலிப் 2:26 ஆதி 45:27 ஆதி 45:28 ஆதி 46:29 ஆதி 46:30 ஆதி 48:11 யோவா 16:22 அப் 20:38 2தீமோ 1:4
29எனவே முழு மகிழ்ச்சியோடு ஆண்டவர் பெயரால் அவரை ஏற்றுக் கொள்ளுங்கள்: இத்தகையோருக்கு நீங்கள் மதிப்புக் கொடுக்க வேண்டும்.மத் 10:40 மத் 10:41 லூக் 9:5 யோவா 13:20 ரோம 16:2 1கொரி 16:10 2கொரி 7:2 கொலோ 4:10 3யோவா 1:10
30ஏனெனில் நீங்கள் எனக்கு ஊழியம் புரிய இயலாமற்போன குறையை நீக்க அவர் தம் உயிரையே இழக்கத் துணிந்தார். கிறிஸ்துவுக்காக அவர் செயலாற்றிய காரணத்தினால்தான் இவ்வாறு அவர் சாகும் நிலைக்கு ஆளானார்.1கொரி 15:53 1கொரி 16:10

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.