இணை வசன வேதாகமம்

கலாத்தியர் 6

                   
புத்தகங்களைக் காட்டு
1சகோதர சகோதரிகளே, ஒருவர் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டால் தூய ஆவியைப் பெற்றிருக்கும் நீங்கள் கனிந்த உள்ளத்தோடு அவரைத் திருத்துங்கள்: அவரைப் போல் நீங்கள் சோதனைக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.கலா 2:11-13 ஆதி 9:20-24 ஆதி 12:11-13 எண் 20:10-13 2சாமு 11:2-27 மத் 26:69 மத் 26:75 ரோம 14:1 ரோம 15:1 எபிரெ 12:13 யாக் 5:19
2ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்: இவ்வாறு, கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.கலா 6:5 கலா 5:13 கலா 5:14 யாத் 23:5 எண் 11:11 எண் 11:12 உபா 1:12 ஏசா 58:6 மத் 8:17 மத் 11:29 மத் 11:30 லூக் 11:46 ரோம 15:1 1தெச 5:14 1பேது 2:24
3பெருமைக்குரியோராய் இல்லாதிருந்தும், தம்மைப் பெரியவர் எனக் கருதுவோர் தம்மையே ஏய்த்துக் கொள்ளுகின்றனர்.கலா 2:6 நீதி 25:14 நீதி 26:12 லூக் 18:11 ரோம 12:3 ரோம 12:16 1கொரி 3:18 1கொரி 8:2
4ஒவ்வொருவரும் தம் செயல்களை ஆய்ந்து பார்க்கட்டும். அப்பொழுது தம்மைப் பிறரோடு ஒப்பிட்டுப் பெருமை பாராட்டாமல், தாம் செய்த செயல்களைப்பற்றி மட்டும் பெருமை பாராட்ட முடியும்.யோபு 13:15 சங் 26:2 1கொரி 11:28 2கொரி 13:5
5ஒவ்வொருவரும் அவரவர் சுமையைத் தாங்கிக் கொள்ளட்டும்.ஏசா 3:10 ஏசா 3:11 எரே 17:10 எரே 32:19 எசே 18:4 மத் 16:27 ரோம 2:6-9 ரோம 14:10-12 1கொரி 3:8 1கொரி 4:5 2கொரி 5:10 2கொரி 5:11 வெளிப் 2:23 வெளிப் 20:12-15 வெளிப் 22:12
6இறைவார்த்தையைக் கற்றுக் கொள்வோர் அதைக் கற்றுக்கொடுப்போருக்குத் தமக்குள்ள நலன்கள் அனைத்திலும் பங்கு அளிக்கவேண்டும்.உபா 12:19 மத் 10:10 ரோம 15:27 1கொரி 9:9-14 1தீமோ 5:17 1தீமோ 5:18
7ஏமாந்து போகவேண்டாம்: கடவுளைக் கேலிசெய்ய முடியும் என நினைக்காதீர்கள். ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார்.கலா 6:3 யோபு 15:31 எரே 37:9 ஒபதி 1:3 லூக் 21:8 1கொரி 3:18 1கொரி 6:9 1கொரி 15:33 எபே 5:6 2தெச 2:3 யாக் 1:22 யாக் 1:26 1யோவா 1:8 1யோவா 3:7
8தம் ஊனியல்பாகிய நிலத்தில் விதைப்போர் அந்த இயல்பிலிருந்து அழிவையே அறுவடை செய்வர். ஆவிக்குரிய வாழ்வாகிய நிலத்தில் விதைப்போர் அந்த ஆவி அருளும் நிலைவாழ்வை அறுவடை செய்வர்.ரோம 6:13 ரோம 8:13 ரோம 13:14 யாக் 3:18
9நன்மைசெய்வதில் மனம்தளாரதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால்! தக்க காலத்தில் அறுவடை செய்வோம்.மல்கி 1:13 1கொரி 15:58 2தெச 3:13 எபிரெ 12:3
10ஆகையால் இன்னும் காலம் இருக்கும்போதே எல்லாருக்கும், சிறப்பாக, நம்பிக்கை கொண்டோரின் குடும்பத்தினருக்கும் நன்மை செய்ய முன்வருவோம்.பிரச 9:10 யோவா 9:4 யோவா 12:35 எபே 5:16 பிலிப் 4:10 கொலோ 4:5 தீத் 2:14
11இப்பொழுது என் கைப்பட நான் உங்களுக்கு எழுதுகிறேன். எவ்வளவு பெரிய எழுத்துக்களில் எழுதுகிறேன் பாருங்கள்!ரோம 16:22 1கொரி 16:21-23
12உலகின் முன் நல்லவர்களாய் நடிக்க விரும்புகிறவர்களே விருத்தசேதனம் செய்து கொள்ளும்படி உங்களைக் கட்டாயப் படுத்துகிறார்கள். கிறிஸ்துவின் சிலுவையைமுன்னிட்டுக் தாங்கள் துன்புறுத்தப்படாமல் இருக்கவே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்.கலா 6:13 மத் 6:2 மத் 6:5 மத் 6:16 மத் 23:5 மத் 23:28 லூக் 16:15 லூக் 20:47 யோவா 7:18 2கொரி 10:12 2கொரி 11:13 பிலிப் 1:15 பிலிப் 2:4 கொலோ 2:23
13விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களே திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் உங்கள் உடலில் செய்யப்படும் அறுவையை முன்னிட்டுத் தாங்கள் பெருமை பாராட்டிக் கொள்வதற்காகவே நீங்கள் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள்.மத் 23:3 மத் 23:15 மத் 23:23 ரோம 2:17-24 ரோம 3:9-19 2பேது 2:19
14நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.ரோம 3:4-6 பிலிப் 3:3 பிலிப் 3:7 பிலிப் 3:8
15விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது.கலா 5:6 ரோம 8:1 2கொரி 5:17
16இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக!கலா 5:16 கலா 5:25 சங் 125:4 சங் 125:5 பிலிப் 3:16
17இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்கவேண்டாம். ஏனெனில் என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.கலா 1:7 கலா 5:12 யோசு 7:25 அப் 15:24 எபிரெ 12:15
18சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.ரோம 16:20 ரோம 16:24 2கொரி 13:14 2தீமோ 4:22 பிலேமோ 1:25 வெளிப் 22:21

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.