இணை வசன வேதாகமம்

Click to Subscribe

யாக்கோபு 4

                   
புத்தகங்களைக் காட்டு
1உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களிலே போர்செய்கிற இச்சைகளினாலல்லவா?யாக் 3:14-18
2நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.யாக் 5:1-5 நீதி 1:19 பிரச 4:8 ஆபகூ 2:5 1தீமோ 6:9 1தீமோ 6:10
3நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.யாக் 1:6 யாக் 1:7 யோபு 27:8-10 யோபு 35:12 சங் 18:41 சங் 66:18 சங் 66:19 நீதி 1:28 நீதி 15:8 நீதி 21:13 நீதி 21:27 ஏசா 1:15 ஏசா 1:16 எரே 11:11 எரே 11:14 எரே 14:12 மீகா 3:4 சகரி 7:13 மத் 20:22 மாற் 10:38 1யோவா 3:22 1யோவா 5:14
4விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.சங் 50:18 சங் 73:27 ஏசா 57:3 எரே 9:2 ஓசி 3:1 மத் 12:39 மத் 16:4
5நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?யோவா 7:42 யோவா 10:35 யோவா 19:37 ரோம 9:17 கலா 3:8
6அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.யாத் 10:3 யாத் 10:4 யாத் 15:9 யாத் 15:10 யாத் 18:11 1சாமு 2:3 யோபு 22:29 யோபு 40:10-12 சங் 138:6 நீதி 3:34 நீதி 6:16 நீதி 6:17 நீதி 29:23 ஏசா 2:11 ஏசா 2:12 ஏசா 2:17 ஏசா 10:8-14 ஏசா 16:6 ஏசா 16:7 தானி 4:37 தானி 5:20-23 மத் 23:12 லூக் 1:52 லூக் 14:11 லூக் 18:14 1பேது 5:5
7ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.1சாமு 3:18 2சாமு 15:26 2இரா 1:13-15 2நாளா 30:8 2நாளா 33:12 2நாளா 33:13 யோபு 1:21 யோபு 40:3-5 யோபு 42:1-6 சங் 32:3-5 சங் 66:3 சங் 68:30 எரே 13:18 தானி 4:25 தானி 4:32 தானி 4:34-37 மத் 11:29 அப் 9:6 அப் 16:29-31 அப் 26:19 ரோம 10:3 ரோம 14:11 எபே 5:21 எபிரெ 12:9 1பேது 2:13
8தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.ஆதி 18:23 1நாளா 28:9 2நாளா 15:2 சங் 73:28 சங் 145:18 ஏசா 29:13 ஏசா 55:6 ஏசா 55:7 ஓசி 6:1 ஓசி 6:2 சகரி 1:3 மல்கி 3:7 எபிரெ 7:19 எபிரெ 10:22
9நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது.யாக் 5:1 யாக் 5:2 சங் 119:67 சங் 119:71 சங் 119:136 சங் 126:5 சங் 126:6 பிரச 7:2-5 ஏசா 22:12 ஏசா 22:13 எரே 31:9 எரே 31:13 எரே 31:18-20 எசே 7:16 எசே 16:63 சகரி 12:10-14 மத் 5:4 லூக் 6:21 2கொரி 7:10 2கொரி 7:11
10கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.யாக் 4:6 யாக் 4:7
11சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.சங் 140:11 எபே 4:31 1தீமோ 3:11 2தீமோ 3:3 தீத் 2:3 1பேது 2:1
12நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?ஏசா 33:22
13மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள்.யாக் 5:1 ஆதி 11:3 ஆதி 11:4 ஆதி 11:7 பிரச 2:1 ஏசா 5:5
14நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.யாக் 1:10 யோபு 7:6 யோபு 7:7 யோபு 9:25 யோபு 9:26 யோபு 14:1 யோபு 14:2 சங் 39:5 சங் 89:47 சங் 90:5-7 சங் 102:3 ஏசா 38:12 1பேது 1:24 1பேது 4:7 1யோவா 2:17
15ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.2சாமு 15:25 2சாமு 15:26 நீதி 19:21 புலம் 3:37 அப் 18:21 ரோம 1:10 ரோம 15:32 1கொரி 4:19 1கொரி 16:7 எபிரெ 6:3
16இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைப்பாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது.யாக் 3:14 சங் 52:1 சங் 52:7 நீதி 25:14 நீதி 27:1 ஏசா 47:7 ஏசா 47:8 ஏசா 47:10 1கொரி 4:7 1கொரி 4:8 1கொரி 5:6 வெளிப் 18:7
17ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.லூக் 12:47 லூக் 12:48 யோவா 9:41 யோவா 13:17 யோவா 15:22 ரோம 1:20 ரோம 1:21 ரோம 1:32 ரோம 2:17-23 ரோம 7:13
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.