1 | நீயோ நலந்தரும் போதனைக்கேற்பப் பேசு. | தீத் 2:11-14 தீத் 1:9 தீத் 3:8 1தீமோ 1:10 1தீமோ 6:3 2தீமோ 1:13 |
2 | வயது முதிர்ந்த ஆண்கள் அறிவுத்தெளிவு, கண்ணியம், கட்டுப்பாடு உடையவர்களாய் இருந்து நம்பிக்கை, அன்பு, மனஉறுதி ஆகியவற்றை நன்கு காத்துக்கொள்ளச் சொல். | லேவி 19:32 யோபு 12:12 சங் 92:14 நீதி 16:31 ஏசா 65:20 |
3 | அவ்வாறே வயது முதிர்ந்த பெண்களும் தூய நடத்தை உடையவர்களாய், புறங்கூறாதவர்களாய், குடிவெறிக்கு அடிமை ஆகாதவர்களாய், நற்போதனை அளிப்பவர்களாய் இருக்குமாறு கூறு. | ரோம 16:2 எபே 5:3 1தீமோ 2:9 1தீமோ 2:10 1தீமோ 3:11 1தீமோ 5:5-10 1பேது 3:3-5 |
4 | இவ்வாறு கற்றுக் கொடுப்பதால் இளம்பெண்கள் தங்கள் கணவரிடமும் பிள்ளைகளிடமும் அன்பு காட்டி, | 1தீமோ 5:2 1தீமோ 5:11 1தீமோ 5:14 |
5 | கட்டுப்பாடும் கற்பும் உள்ளவர்களாய் வீட்டுவேலைகளைச் செவ்வனே செய்பவர்களாய்த் தங்கள் கணவருக்குப் பணிந்திருப்பார்கள். அப்பொழுதுதான் கடவுளுடைய வார்த்தை பழிப்புக்குள்ளாகாது. | ஆதி 16:8 ஆதி 16:9 ஆதி 18:9 நீதி 7:11 நீதி 31:10-31 1தீமோ 5:13 |
6 | அவ்வாறே இளைஞரும் கட்டுப்பாடு உள்ளவராய் இருக்க அறிவுரை கூறு. | யோபு 29:8 சங் 148:12 பிரச 11:9 பிரச 12:1 யோவே 2:28 1பேது 5:5 1யோவா 2:13 |
7 | நற்செயல்களைச் செய்வதில் எல்லாவகையிலும் நீயே முன்மாதிரியாய் இரு: நாணயத்தோடும் கண்ணியத்தோடும் கற்றுக்கொடு. | அப் 20:33-35 2தெச 3:9 1தீமோ 4:12 1பேது 5:3 |
8 | யாரும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத நலந்தரும் வார்த்தைகளைப் பேசு. அப்பொழுது எதிரிகள் நம்மைப்பற்றித் தீயன பேச எதுவுமின்றி வெட்கிப் போவார்கள். | மாற் 12:17 மாற் 12:28 மாற் 12:32 மாற் 12:34 1தீமோ 6:3 |
9 | அடிமைகள் தங்கள் தலைவர்களுக்கு அனைத்திலும் பணிந்து நடந்து, அவர்களுக்கு உகந்தவர்களாய் இருக்கவேண்டும்: எதிர்த்துப் பேசலாகாது எனக் கூறு. | எபே 6:5-8 கொலோ 3:22-25 1தீமோ 6:1 1தீமோ 6:2 1பேது 2:18-25 |
10 | அவர்கள் கையாடல் செய்யாது, முழு நம்பிக்கைக்குரிய நல்லவர்கள் என்று நடத்தையில் காட்ட வேண்டும். அப்பொழுது நம் மீட்பராம் கடவுளின் போதனை எல்லா வகையிலும் சிறப்புப் பெறும். | 2இரா 5:20-24 லூக் 16:6-8 யோவா 12:6 அப் 5:2 அப் 5:3 |
11 | ஏனெனில் மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. | தீத் 3:4 தீத் 3:5 சங் 84:11 சகரி 4:7 சகரி 12:10 யோவா 1:14 யோவா 1:16 யோவா 1:17 அப் 11:23 அப் 13:43 அப் 20:24 ரோம 4:4 ரோம 4:5 ரோம 5:2 ரோம 5:15 ரோம 5:20 ரோம 5:21 ரோம 11:5 ரோம 11:6 2கொரி 6:1 கலா 2:21 எபே 1:6 எபே 1:7 எபே 2:5 எபே 2:8 2தெச 2:16 1தீமோ 1:14 எபிரெ 2:9 எபிரெ 12:15 1பேது 1:10-12 1பேது 5:5-12 |
12 | நாம் இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். | மத் 28:20 யோவா 6:25 1தெச 4:9 எபிரெ 8:11 1யோவா 2:27 |
13 | மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. | 1கொரி 1:7 பிலிப் 3:20 பிலிப் 3:21 2தீமோ 4:8 2பேது 3:12-14 |
14 | அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார். | மத் 20:28 யோவா 6:51 யோவா 10:15 கலா 1:4 கலா 2:20 கலா 3:13 எபே 5:2 எபே 5:23-27 1தீமோ 1:15 1தீமோ 2:6 எபிரெ 9:14 1பேது 3:18 வெளிப் 1:5 வெளிப் 5:9 |
15 | நீ இவைபற்றிப் பேசு: முழு அதிகாரத்தோடும் அறிவுறுத்திக் கடிந்து கொள். யாரும் உன்னைத் தாழ்வாக மதிப்பிட இடமளிக்காதே. | தீத் 1:13 2தீமோ 4:2 |