1 | கிறிஸ்து இயேசுவின் பொருட்டுக் கைதியாக இருக்கும் பவுல், சகோதரர் திமொத்தேயு ஆகிய நாங்கள் எங்கள் உடன் உழைப்பாளரான அன்பார்ந்த பிலமோனுக்கும், | பிலேமோ 1:9 எபே 3:1 எபே 4:1 எபே 6:20 2தீமோ 1:8 |
2 | சகோதரி அப்பியாவுக்கும், எங்கள் போராட்டத்தில் பங்குபெறும் அர்க்கிப்புக்கும் பிலமோன் வீட்டில் கூடும் திருச்சபைக்கும் எழுதுவது: | கொலோ 4:17 |
3 | நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! | ரோம 1:7 2கொரி 13:14 எபே 1:2 |
4 | என் வேண்டல்களில் உம்மை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி கூறுகிறேன். | ரோம 1:8 எபே 1:16 பிலிப் 1:3 கொலோ 1:3 1தெச 1:2 2தெச 1:3 2தீமோ 1:3 |
5 | ஏனெனில், ஆண்டவராகிய இயேசுவின் மீது நீர் கொண்டுள்ள நம்பிக்கையையும் இறைமக்கள் அனைவர்மீதும் நீர் கொண்டுள்ள அன்பையும் பற்றிக் கேள்விப்படுகிறேன். | கலா 5:6 எபே 1:15 கொலோ 1:4 |
6 | கிறிஸ்துவோடு நாம் கொண்டிருக்கும் உறவால் நமக்குண்டான எல்லா நன்மைகளைப் பற்றியும் நீர் அறிந்துணர்வீர். இதனால் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நம்மிடையே இருக்கும் நட்புறவு செயல்வடிவம் பெற வேண்டுகிறேன். | 2கொரி 9:12-14 பிலிப் 1:9-11 தீத் 3:14 எபிரெ 6:10 யாக் 2:14 யாக் 2:17 |
7 | உம் அன்பைக் குறித்து நான் பெரு மகிழ்வும் ஆறுதலும் கொள்கிறேன். ஆம், சகோதரரே, உம்மால் இறைமக்களின் உள்ளம் புத்துயிர் பெற்றுள்ளது. | 1தெச 1:3 1தெச 2:13 1தெச 2:19 1தெச 3:9 2யோவா 1:4 3யோவா 1:3-6 |
8 | எனவே, நீர் செய்ய வேண்டியதை உமக்குக் கட்டளையிட, கிறிஸ்தவ உறவில், எனக்கு முழு உரிமை உண்டு என்றாலும், | 2கொரி 3:12 2கொரி 10:1 2கொரி 10:2 2கொரி 11:21 1தெச 2:2 1தெச 2:6 |
9 | அன்பின் பெயரால் வேண்டுகோள் விடுவிக்கவே விரும்புகிறேன். கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக, அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் | ரோம 12:1 2கொரி 5:20 2கொரி 6:1 எபே 4:1 எபிரெ 13:19 1பேது 2:11 |
10 | பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்தபோது பிள்ளையான ஒனேசிமுக்காக உம்மிடம் வேண்டுகிறேன். | 2சாமு 9:1-7 2சாமு 18:5 2சாமு 19:37 2சாமு 19:38 மாற் 9:17 1தீமோ 1:2 தீத் 1:4 |
11 | முன்பு உமக்குப் பயனற்றவனாக இருந்த அவன், இப்பொழுது எனக்கும் உமக்கும் பயனுள்ளவன். | யோபு 30:1 யோபு 30:2 மத் 25:30 லூக் 17:10 ரோம 3:12 1பேது 2:10 |
12 | அவனை உம்மிடம் திரும்ப அனுப்புகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும். | மத் 6:14 மத் 6:15 மத் 18:21-35 மாற் 11:25 எபே 4:32 |
13 | நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள விரும்பினேன். | 1கொரி 16:17 பிலிப் 2:30 |
14 | ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச் செய்ய வேண்டுமென்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை. | பிலேமோ 1:8 பிலேமோ 1:9 2கொரி 1:24 1பேது 5:3 |
15 | அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மைவிட்டுச் சிறிதுகாலம் பிரிந்திருந்தான் போலும்! | ஆதி 45:5-8 ஆதி 50:20 சங் 76:10 ஏசா 20:6 அப் 4:28 |
16 | இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையைவிட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்குரியவனாகிறான்! | மத் 23:8 அப் 9:17 கலா 4:28 கலா 4:29 1தீமோ 6:2 எபிரெ 3:1 1பேது 1:22 1பேது 1:23 1யோவா 5:1 |
17 | எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக் கொள்வதுபோல் அவனையும் ஏற்றுக் கொள்ளும். | அப் 16:15 2கொரி 8:23 எபே 3:6 பிலிப் 1:7 1தீமோ 6:2 எபிரெ 3:1 எபிரெ 3:14 யாக் 2:5 1பேது 5:1 1யோவா 1:3 |
18 | அவன் உமக்கு ஏதாவது தீங்கு இழைத்திருந்தால் அல்லது கடன்பட்டிருந்தால் அது என் கணக்கில் இருக்கட்டும். | ஏசா 53:4-7 |
19 | “நானே அதற்கு ஈடு செய்வேன்” எனப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன். நீர் உம்மையே எனக்குக் கடனாகச் செலுத்த வேண்டுமென நான் உமக்குச் சொல்ல வேண்டியதில்லை. | 1கொரி 16:21 1கொரி 16:22 கலா 5:2 கலா 6:11 |
20 | ஆம் சகோதரரே, ஆண்டவர் பொருட்டு எனக்கு இந்த உதவியைச் செய்யும். கிறிஸ்துவின் பெயரால் என் உள்ளம் புத்துயிர் பெறச்செய்யும். | 2கொரி 2:2 2கொரி 7:4-7 2கொரி 7:13-7 பிலிப் 2:2 பிலிப் 4:1 1தெச 2:19 1தெச 2:20 1தெச 3:7-9 எபிரெ 13:17 3யோவா 1:4 |
21 | என் சொல்லுக்கு நீர் இணங்குவீர் என்னும் நம்பிக்கையோடு இதை எழுதுகிறேன். நான் கேட்பதற்கு மேலாகவே நீர் செய்வீர் என்பது எனக்குத் தெரியும். | 2கொரி 2:3 2கொரி 7:16 2கொரி 8:22 கலா 5:10 2தெச 3:4 |
22 | மேலும் நான் தங்குவதற்கு ஓர் இடத்தை ஏற்பாடு செய்யும். நீங்கள் இறைவனிடம் வேண்டுவதால், அவர் அருள்கூர்ந்து, நான் மீண்டும் உங்களிடம் வரச் செய்வார் என எதிர்பார்க்கிறேன் | அப் 28:23 |
23 | கிறிஸ்து இயேசுவின் பொருட்டு என் உடன் கைதியாயிருக்கிற எப்பப்பிரா, | கொலோ 1:7 கொலோ 4:12 |
24 | என் உடன் உழைப்பாளர்களான மாற்கு, அரிஸ்தர்க்கு, தேமா, லூக்கா ஆகியோர் உமக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். | அப் 12:12 அப் 12:25 அப் 13:13 அப் 15:37-39 கொலோ 4:10 2தீமோ 4:11 |
25 | ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! | ரோம 16:20 ரோம 16:24 |