ஆதியாகமம் 45:5-8 - WCV
5
நான் இங்குச் செல்லுமாறு நீங்கள் என்னை விற்றுவிட்டது குறித்து மனம் கலங்க வேண்டாம். உங்கள்மீதே சினம் கொள்ள வேண்டாம்.ஏனெனில், உயிர்களைக் காக்கும்பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்.
6
நாட்டில் பஞ்சம் தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆகியுள்ளன.இன்னும் ஐந்தாண்டுகள் உழவோ அறுவடையோ இராது.
7
ஆதலால் உலகில் உங்களுள் எஞ்சி இருப்போரைப் பாதுகாக்கவும், பெரும் மீட்புச் செயலால் உங்கள் உயிர்களைக் காக்கவும், கடவுள் உங்களுக்குமுன் என்னை அனுப்பி வைத்தார்.
8
என்னை இங்கு அனுப்பியது நீங்கள் அல்ல, கடவுள்தாம்.அவரே என்னைப் பார்வோனுக்குத் தந்தையாகவும், அவர் வீடு முழுவதற்கும் தலைவராகவும், எகிப்து முழுவதற்கும் ஆளுநராகவும் ஏற்படுத்தியுள்ளார்.