இணை வசன வேதாகமம்

தீத்து 3

                   
புத்தகங்களைக் காட்டு
1நீ அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியவை: தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர்கள் பணிந்து கீழ்ப்படிய வேண்டும்: அனைத்து நற்செயல்களையும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும்.ஏசா 43:26 1தீமோ 4:6 2தீமோ 1:6 2பேது 1:12 2பேது 3:1 2பேது 3:2 யூதா 1:5
2எவரையும் பழித்துரைக்கலாகாது: சண்டையிடலாகாது: கனிந்த உள்ளத்தினராய் மக்கள் அனைவரோடும் நிறைந்த பணிவுடன் பழக வேண்டும்.சங் 140:11 நீதி 6:19 அப் 23:5 1கொரி 6:10 2கொரி 12:20 எபே 4:31 1தீமோ 3:11 யாக் 4:11 1பேது 2:1 1பேது 3:10 1பேது 4:4 2பேது 2:10 யூதா 1:8 யூதா 1:10
3ஏனெனில் நாமும் ஒரு காலத்தில் அறியாமையில் இருந்தோம்: கீழ்ப்படியாமல் இருந்தோம்: நெறிதவறிச் சென்றோம்: தீய நாட்டங்களுக்கும் பல்வகைச் சிற்றின்பங்களுக்கும் அடிமைகளாய் இருந்தோம்: தீமையிலும் பொறாமையிலும் உழன்றோம்: காழ்ப்புணர்ச்சி கொண்டவராய் ஒருவர் மற்றவரை வெறுத்தோம்.ரோம 3:9-20 1கொரி 6:9-11 எபே 2:1-3 கொலோ 1:21 கொலோ 3:7 1பேது 4:1-3
4நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது,தீத் 2:11 ரோம 5:20 ரோம 5:21 எபே 2:4-10
5நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்.யோபு 9:20 யோபு 15:14 யோபு 25:4 சங் 143:2 ஏசா 57:12 லூக் 10:27-29 ரோம 3:20 ரோம 3:28 ரோம 4:5 ரோம 9:11 ரோம 9:16 ரோம 9:30 ரோம 11:6 கலா 2:16 கலா 3:16-21 எபே 2:4 எபே 2:8 எபே 2:9 2தீமோ 1:9
6அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார்.நீதி 1:23 ஏசா 32:15 ஏசா 44:3 எசே 36:25 யோவே 2:28 யோவா 1:16 யோவா 7:37 அப் 2:33 அப் 10:45 ரோம 5:5
7நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்.தீத் 2:11 ரோம 3:24 ரோம 3:28 ரோம 4:4 ரோம 4:16 ரோம 5:1 ரோம 5:2 ரோம 5:15-21 ரோம 11:6 1கொரி 6:11 கலா 2:16
8இக்கூற்று உண்மையானது. கடவுளிடம் நம்பிக்கை கொண்டவர்கள் நற்செயல்களைச் செய்யக் கருத்தாய் இருக்கும்படி நீ வலியுறுத்தவேண்டும் என்பதே என் விருப்பம். இந் நற்செயல்களைச் செய்வதே முறையானது: இவை மக்களுக்குப் பயன்படும்.தீத் 1:9 1தீமோ 1:15
9மடத்தனமான விவாதங்கள், மூதாதையர் பட்டியல்கள் பற்றிய ஆய்வுகள், போட்டி மனப்பான்மை, திருச்சட்டத்தைப் பற்றிய சண்டைகள் ஆகியவற்றை விலக்கு. இவை பனயனற்றவை, வீணானவை.தீத் 1:14 1தீமோ 1:3-7 1தீமோ 4:7 2தீமோ 2:23
10சபையில் பிளவு ஏற்படக் காரணமாயிருப்போருக்கு ஒருமுறை, தேவையானால் இன்னொரு முறை அறிவு புகட்டிவிட்டுப் பின் விட்டுவிடு.1கொரி 11:19 கலா 5:20 2பேது 2:1
11இப்படிப்பட்டவர் நெறிதவறியோர் என்பதும் தங்களுக்கே தண்டனைத் தீர்ப்பளித்துக்கொண்ட பாவிகள் என்பதும் உனக்குத் தெரிந்ததே.தீத் 1:11 அப் 15:24 1தீமோ 1:19 1தீமோ 1:20 2தீமோ 2:14 எபிரெ 10:26
12அர்த்தமாவை அல்லது திக்கிக்குவை நான் உன்னிடம் அனுப்பும்போது நீ நிக்கப்பொலி நகருக்கு என்னிடம் விரைந்து வந்து சேர். எனெனில் நான் குளிர்காலத்தை அங்கே செலவிடத் தீர்மானித்துள்ளேன்.அப் 20:4 2தீமோ 4:12
13வழக்கறிஞர் சேனாவையும் அப்பொல்லோவையும் அனுப்பிவைக்க முழு முயற்சி செய். அவர்களுக்கு எந்தக் குறையுமில்லாமல் பார்த்துக்கொள்.மத் 22:35 லூக் 7:30 லூக் 10:25 லூக் 11:45 லூக் 11:52 லூக் 14:3
14நம்மைச் சேர்ந்தவர்களும் பயனற்றவர்களாய் இராதபடிக்கு உடனடித் தேவைகளை நிறைவுசெய்யும் முறையில் நற்செயல்களைச் செய்யக் கற்றுக் கொள்வார்களாக!அப் 18:3 அப் 20:35 எபே 4:28 1தெச 2:9 2தெச 3:8
15என்னோடு இருக்கும் அனைவரும் உனக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். விசுவாச அடிப்படையில் அன்பர்களாயிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக் கூறு. இறையருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!ரோம 16:21-24

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.