6
அதற்கு அவர், “நூறு குடம் எண்ணெய்” என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், “இதோ உம் கடன் சீட்டு: உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்” என்றார்.
7
பின்பு அடுத்தவரிடம், “நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?” என்று கேட்டார். அதற்கு அவர், “நூறு மூடை கோதுமை” என்றார். அவர், “இதோ, உம் கடன் சீட்டு: எண்பது என்று எழுதும்” என்றார்.
8
நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.