இணை வசன வேதாகமம்

1தீமோத்தேயு 2

                   
புத்தகங்களைக் காட்டு
1அனைவருக்காகவும் மன்றாடுங்கள்: இறைவனிடம் வேண்டுங்கள்: பரிந்து பேசுங்கள்: நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே.2கொரி 8:6 எபே 3:13 எபிரெ 6:11
2இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள்.எஸ்றா 6:10 நெகே 1:11 சங் 20:1-4 சங் 72:1 எரே 29:7
3இதுவே நம் மீட்பராகிய கடவுளின்முன் சிறந்ததும் ஏற்புடையதுமாகும்.1தீமோ 5:4 ரோம 12:1 ரோம 12:2 ரோம 14:18 எபே 5:9 எபே 5:10 பிலிப் 1:11 பிலிப் 4:18 கொலோ 1:10 1தெச 4:1 எபிரெ 13:16 1பேது 2:5 1பேது 2:20
4எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்.ஏசா 45:22 ஏசா 49:6 ஏசா 55:1 எசே 18:23 எசே 18:32 எசே 33:11 லூக் 14:23 யோவா 3:15-17 யோவா 6:37 ரோம 3:29 ரோம 3:30 2கொரி 5:17-19 1தெச 2:15 1தெச 2:16 தீத் 2:11 2பேது 3:9
5ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்.உபா 6:4 ஏசா 44:6 மாற் 12:29-33 யோவா 17:3 ரோம 3:29 ரோம 3:30 ரோம 10:12 1கொரி 8:6 கலா 3:20 எபே 4:6
6அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்: குறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார்.யோபு 33:24 ஏசா 53:6 மத் 20:28 மாற் 10:45 யோவா 6:51 யோவா 10:15 2கொரி 5:14 2கொரி 5:15 2கொரி 5:21 எபே 1:7 எபே 1:17 எபே 5:2 தீத் 2:14 எபிரெ 9:12 1பேது 1:18 1பேது 1:19 1பேது 2:24 1பேது 3:18 1யோவா 2:1 1யோவா 2:2 1யோவா 4:10 வெளிப் 1:5 வெளிப் 5:9
7இதற்காகவே நான் நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் விசுவாசத்தையும் உண்மையையும் பிற இனத்தாருக்குக் கற்பிக்கும் போதனைகனாகவும் ஏற்படுத்தப்பட்டேன். நான் சொல்வது உண்மையே: பொய் அல்ல.1தீமோ 1:11 1தீமோ 1:12
8எனவே, ஆண்கள் சினமும் சொற்பூசலும் இன்றி எவ்விடத்திலும் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யுமாறு விரும்புகின்றேன்.1தீமோ 5:14 1கொரி 7:7 தீத் 3:8
9அவ்வாறே பெண்கள் பின்னற் சடை, பொன், முத்து, விலையுயர்ந்த ஆடைகள் ஆகியவற்றால் தங்களை அணிசெய்து கொள்ளாமல், நாணத்தோடும் தன்னடக்கத்தோடும் ஏற்புடைய ஆடைகளை அணிய வேண்டும்.1பேது 3:3-5
10கடவுள் பற்று உள்ளவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் பெண்களுக்கு ஏற்ற அணிகலன்கள் நற்செயல்களே.1பேது 3:3-5 2பேது 3:11
11பெண்கள் அமைதியாயிருந்து, மிகுந்த பணிவோடு கற்றுக்கொள்ளட்டும்.ஆதி 3:16 எஸ்தர் 1:20 1கொரி 11:3 1கொரி 14:34 1கொரி 14:35 எபே 5:22-24 கொலோ 3:18 1பேது 3:1 1பேது 3:5 1பேது 3:6
12பெண்கள் கற்றுக்கொடுக்கவோ, ஆண்களைக் கட்டுப்படுத்தவோ நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் அமைதியாயிருக்க வேண்டும்.
13ஏனென்றால் ஆதாமே முதலில் உருவாக்கப்பட்டார். பிறகுதான் ஏவா உருவாக்கப்பட்டார்.ஆதி 1:27 ஆதி 2:7 ஆதி 2:18 ஆதி 2:22 1கொரி 11:8 1கொரி 11:9
14மேலும், ஆதாம் ஏமாற்றப்படவில்லை: பெண்தான் ஏமாந்து கட்டளையை மீறினார்.ஆதி 3:6 ஆதி 3:12 2கொரி 11:3
15இருப்பினும் அவர்கள் தன்னடக்கத்தோடு நம்பிக்கை, அன்பு, தூய வாழ்வு ஆகியவற்றில் நிலைத்திருந்தால் தாய்மைப் பேற்றின் வழியாக மீட்புப் பெறுவார்கள்.ஆதி 3:15 ஏசா 7:14 ஏசா 9:6 எரே 31:22 மத் 1:21-25 லூக் 2:7 லூக் 2:10 லூக் 2:11 கலா 4:4 கலா 4:5

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.