இணை வசன வேதாகமம்

2தெசலோனிக்கேயர் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1சகோதர சகோதரிகளே! இறுதியாக எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள். ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே விரைந்து பரவிப் புகழ் பெற்றது. அதுபோல அது எங்கும் பரவிப் புகழ்பெறவும்,மத் 9:38 லூக் 10:2 ரோம 15:30 2கொரி 1:11 எபே 6:19 எபே 6:20 கொலோ 4:3 1தெச 5:17 1தெச 5:25 எபிரெ 13:18 எபிரெ 13:19
2தீயோர், பொல்லாதவர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படவும் வேண்டுங்கள்: ஏனெனில் நம்பிக்கை எல்லாரிடமும் இல்லை.ரோம 15:31 1கொரி 15:32 2கொரி 1:8-10 1தெச 2:18 2தீமோ 4:17
3ஆனால் ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காத்தருள்வார்.1கொரி 1:9 1கொரி 10:13 1தெச 5:24
4நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டதை நீங்கள் செய்கிறீர்கள்: இனியும் செய்வீர்கள் என்னும் உறுதியான நம்பிக்கையை ஆண்டவர் எங்களுக்குத் தருகிறார்.ரோம 15:14 2கொரி 2:3 2கொரி 7:16 2கொரி 8:22 கலா 5:10 பிலிப் 1:6 பிலேமோ 1:21
5கடவுளின் அன்பையும், கிறிஸ்துவின் மன உறுதியையும் அடைய ஆண்டவர் உங்கள் உள்ளங்களைத் தூண்டுவாராக!1இரா 8:58 1நாளா 29:18 சங் 119:5 சங் 119:36 நீதி 3:6 எரே 10:23 யாக் 1:16-18
6அன்பர்களே! எங்களிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட முறைமையின்படி ஒழுகாமல் சோம்பித்திரியும் எல்லா சகோதரர் சகோதரிகளிடமிருந்தும் விலகி நில்லுங்கள் என, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.1கொரி 5:4 2கொரி 2:10 எபே 4:17 கொலோ 3:17 1தெச 4:1 1தீமோ 5:21 1தீமோ 6:13 1தீமோ 6:14 2தீமோ 4:1
7எங்களைப்போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித்திரியவில்லை.2தெச 3:9 1கொரி 4:16 1கொரி 11:1 பிலிப் 3:17 பிலிப் 4:9 1தெச 1:6 1தெச 1:7 1தீமோ 4:12 தீத் 2:7 1பேது 5:3
8எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம்.2தெச 3:12 நீதி 31:27 மத் 6:11
9எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல, மாறாக, நீங்களும் எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம்.மத் 10:10 1கொரி 9:4-14 கலா 6:6 1தெச 2:6
10“உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது” என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம்.லூக் 24:44 யோவா 16:4 அப் 20:18
11உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம்.1தெச 4:11 1தீமோ 5:13 1பேது 4:15
12இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம்.ஆதி 49:14 ஆதி 49:15 நீதி 17:1 பிரச 4:6 எபே 4:28 1தெச 4:11 1தீமோ 2:2
13சகோதர சகோதரிகளே! நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளர வேண்டாம்.ஏசா 40:30 ஏசா 40:31 மல்கி 1:13 ரோம 2:7 1கொரி 15:28 கலா 6:9 கலா 6:10 பிலிப் 1:9 1தெச 4:1 எபிரெ 12:3
14இத்திருமுகத்தில் நாங்கள் எழுதியவற்றிற்குக் கீழ்ப்படியாதோரைக் குறித்துவைத்துக்கொண்டு, அவர்களோடு பழகாதிருங்கள். அப்பொழுதாவது அவர்களுக்கு வெட்கம் வரும்.உபா 16:12 நீதி 5:13 செப் 3:2 2கொரி 2:9 2கொரி 7:15 2கொரி 10:6 பிலிப் 2:12 1தெச 4:8 பிலேமோ 1:21 எபிரெ 13:17
15ஆனாலும், அவர்களைப் பகைவர்களாகக் கருதாது, சகோதரர் சகோதரிகளாக எண்ணி, அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.லேவி 19:17 லேவி 19:18 1கொரி 5:5 2கொரி 2:6-10 2கொரி 10:8 2கொரி 13:10 கலா 6:1 1தெச 5:14 யூதா 1:22 யூதா 1:23
16அமைதியை அருளும் ஆண்டவர்தாமே எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு அமைதி அளிப்பாராக! ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக!சங் 72:3 சங் 72:7 ஏசா 9:6 ஏசா 9:7 சகரி 6:13 லூக் 2:14 யோவா 14:27 ரோம 15:33 ரோம 16:20 1கொரி 14:33 2கொரி 5:19-21 2கொரி 13:11 எபே 2:14-17 1தெச 5:23 எபிரெ 7:2 எபிரெ 13:20
17இவ்வாழ்த்தைப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன். நான் எழுதும் திருமுகம் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம். இதுவே நான் எழுதும் முறை.1கொரி 16:21 கொலோ 4:18
18நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!ரோம 16:20 ரோம 16:24

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.