2கொரிந்தியர் 2:6-10 - WCV
6
அந்த ஆளுக்கு உங்களுள் பெரும்பான்மையோர் கொடுத்த தண்டனையே போதும்.
7
எனவே இப்பொழுது நீங்கள் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வது தான் நல்லது. அவன் மனவருத்தத்தில் மூழ்கிவிடாமல் இருக்கும் வண்ணம் அவனுக்கு ஆறதல் அளியுங்கள்.
8
நீங்கள் அவன்மீது அன்புகொண்டிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
9
நீங்கள் எப்போதும் எனக்குக் கீழ்ப்படிகிறீர்களா எனச் சோதித்து அறியவே அத்திருமுகத்தை நான் எழுதினேன்.
10
நீங்கள் ஒருவனை மன்னித்தால் நானும் அவனை மன்னிக்கிறேன். நான் மன்னிக்க வேண்டியது ஏதாவது இருந்தால் அதை உங்கள் பொருட்டுக் கிறிஸ்துவின் முன்னிலையில் மன்னித்து விட்டேன்.