இணை வசன வேதாகமம்

1தெசலோனிக்கேயர் 4

                   
புத்தகங்களைக் காட்டு
1சகோதர சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள்: அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம்.1தெச 2:11 ரோம 12:1 2கொரி 6:1 2கொரி 10:1 எபே 4:1 பிலேமோ 1:9 பிலேமோ 1:10 எபிரெ 13:22
2ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள்.எசே 3:17 மத் 28:20 1கொரி 9:21 2தெச 3:6 2தெச 3:10
3நீங்கள் தூயோராவதே கடவுளுடைய திருவுளம்: பரத்தைமையை நீங்கள் தவிர்க்க வேண்டும்.1தெச 5:18 சங் 40:8 சங் 143:10 மத் 7:21 மத் 12:50 மாற் 3:35 யோவா 4:34 யோவா 7:17 ரோம 12:2 எபே 5:17 எபே 6:6 கொலோ 1:9 கொலோ 4:12 எபிரெ 10:36 எபிரெ 13:21 1பேது 4:2 1யோவா 2:17
4உங்களில் ஒவ்வொருவரும் தம் மனைவியைத் தூயவராகக் கருதி, மதிப்புடன் நடத்த அறிந்திருக்க வேண்டும்.ரோம 6:19 ரோம 12:1 1கொரி 6:15 1கொரி 6:18-20
5கடவுளை அறியாத பிற இனத்தாரைப் போன்று நீங்கள் கட்டுக்கடங்காப் பாலுணர்வுக்கு இடம் கொடுக்கலாகாது.ரோம 1:24 ரோம 1:26 கொலோ 3:5
6இதில் எவரும் தவறிழைத்துத் தம் சகோதரரை வஞ்சிக்கக் கூடாது. ஏனெனில் இத்தகைய செயல்கள் அனைத்தையும் ஆண்டவரே தண்டிப்பார். இதை நாங்கள் முன்னமே உங்களிடம் எடுத்துரைத்திருக்கிறோம்: எச்சரித்தும் இருக்கிறோம்.யாத் 20:15 யாத் 20:17 லேவி 19:11 லேவி 19:13 உபா 24:7 உபா 25:13-16 நீதி 11:1 நீதி 16:11 நீதி 20:14 நீதி 20:23 நீதி 28:24 ஏசா 5:7 ஏசா 59:4-7 எரே 9:4 எசே 22:13 எசே 45:9-14 ஆமோ 8:5 ஆமோ 8:6 செப் 3:5 மல்கி 3:5 மாற் 10:19 1கொரி 6:7-9 எபே 4:28 யாக் 5:4
7கடவுள் நம்மை ஒழுக்கக்கேட்டிற்கு அல்ல, தூய வாழ்வுக்கே அழைத்தார்.லேவி 11:44 லேவி 19:2 ரோம 1:7 ரோம 8:29 ரோம 8:30 1கொரி 1:2 எபே 1:4 எபே 2:10 எபே 4:1 2தெச 2:13 2தெச 2:14 2தீமோ 1:9 எபிரெ 12:14 1பேது 1:14-16 1பேது 2:9-12 1பேது 2:21-12 1பேது 2:22-12
8எனவே இக்கட்டளைகளைப் புறக்கணிப்போர், மனிதரை அல்ல, தம்முடைய தூய ஆவியை உங்களுக்கும் அளிக்கும் கடவுளையே புறக்கணிக்கின்றனர்.1சாமு 8:7 1சாமு 10:19 யோவா 12:48
9சகோதர அன்பைப்பற்றி உங்களுக்கு எழுதவேண்டிய தேவையில்லை. ஏனெனில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த, கடவுளிடமிருந்து நீங்களே கற்றுக்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள்.லேவி 19:8 சங் 133:1 யோவா 13:34 யோவா 13:35 யோவா 15:12-17 அப் 4:32 ரோம 12:10 எபே 5:1 எபே 5:2 எபிரெ 13:1 1பேது 3:8 2பேது 1:7 1யோவா 2:10 1யோவா 3:11 1யோவா 3:14-19 1யோவா 3:23-19 1யோவா 4:7-16
10உண்மையிலேயே நீங்கள் மாசிதோனியாவிலுள்ள சகோதரர் சகோதரிகள் அனைவரிடமும் அன்பு செலுத்தி வருகிறீர்கள். அன்பர்களே! இதில் இன்னும் முன்னேற வேண்டுமென்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.1தெச 1:7 2கொரி 8:1 2கொரி 8:2 2கொரி 8:8-10 எபே 1:15 கொலோ 1:4 2தெச 1:3 பிலேமோ 1:5-7
11நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டதுபோல, உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு, உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.நீதி 17:1 பிரச 4:6 புலம் 3:26 2தெச 3:12 1தீமோ 2:2 1பேது 3:4
12அப்பொழுது திருச்சபைக்கு வெளியே இருப்பவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்: பிறர் கையை நம்பாதபடி வாழ்வீர்கள்.1தெச 5:22 ரோம 12:17 ரோம 13:13 2கொரி 8:20 2கொரி 8:21 பிலிப் 4:8 தீத் 2:8-10 1பேது 2:12 1பேது 3:16 1பேது 3:17
13சகோதர சகோதரிகளே! இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்: எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது.ரோம 1:13 1கொரி 10:1 1கொரி 12:1 2கொரி 1:8 2பேது 3:8
14இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.ஏசா 26:19 ரோம 8:11 1கொரி 15:12-23 2கொரி 4:13 2கொரி 4:14 வெளிப் 1:18
15ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.1இரா 13:1 1இரா 13:9 1இரா 13:17 1இரா 13:18 1இரா 13:22 1இரா 20:35 1இரா 22:14
16கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்: அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர்.ஏசா 25:8 ஏசா 25:9 மத் 16:27 மத் 24:30 மத் 24:31 மத் 25:31 மத் 26:64 அப் 1:11 2தெச 1:7 2பேது 3:10 வெளிப் 1:7
17பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டுபோகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்.1தெச 4:15 1கொரி 15:52
18எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.1தெச 5:11 1தெச 5:14 ஏசா 40:1 ஏசா 40:2 லூக் 21:28 எபிரெ 12:12

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.