உபாகமம் 25:13-16 - WCV
13
பெரியதும் சிறியதுமான ஏமாற்று எடைக்கற்களை உன் பையில் வைத்திருக்காதே.
14
பெரியதும் சிறியதுமான ஏமாற்று முகத்தல் அளவைகளை உன் வீட்டில் வைத்திருக்காதே.
15
நிறைவான நேர்மையான எடைக்கற்கள் உன்னிடம் இருக்கட்டும்.நிறைவான நேர்மையான முகத்தல் அளவைகள் உன்னிடம் இருக்கட்டும்.அதனால், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் உன் நாள்கள் நீடித்திருக்கும்: நீ நெடுநாள் வாழ்வாய்:
16
மாறாக, மேற்குறிப்பிட்டவற்றில் நேர்மையற்று நடப்போர் அனைவரும் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவர்.