இணை வசன வேதாகமம்

1தெசலோனிக்கேயர் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆகவே, இந்தப் பிரிவை எங்களால் தாங்க முடியாமல் போனதால், நாங்கள் ஏதென்சு நகரில் தனிமையாக இருக்க முடிவு செய்தோம்.1தெச 3:5 1தெச 2:17 எரே 20:9 எரே 44:22 2கொரி 2:13 2கொரி 11:29 2கொரி 11:30
2நம் சகோதரரும், கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் கடவுளின் உடன் உழைப்பாளருமாகிய திமொத்தேயுவை உங்களிடம் அனுப்பினோம்.அப் 16:1 அப் 17:14 அப் 17:15 அப் 18:5
3நீங்கள் படும் துன்பங்களால் எவரும் மனம் தளர்ந்து போகாதவாறு, உங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தி உங்களை ஊக்குவிக்க அவரை அனுப்பினோம். துன்பங்கள் வந்தே தீரும் என்பது உங்களுக்குத் தெரியும்.சங் 112:6 அப் 2:25 அப் 20:24 அப் 21:13 ரோம 5:3 1கொரி 15:58 எபே 3:13 பிலிப் 1:28 கொலோ 1:23 2தெச 1:4 2தீமோ 1:8 1பேது 4:12-14 வெளிப் 2:10 வெளிப் 2:13
4நாம் துன்பப்படத்தான் வேண்டும் என்று நாங்கள் உங்களோடு இருந்தபொழுதே உங்களுக்குச் சொன்னோம். அவ்வாறே நடந்திருக்கிறது: இதுவும் உங்களுக்குத் தெரியும்.யோவா 16:1-3 அப் 20:24
5ஆகவே, நமது பிரிவைத் தாங்க முடியாமல் உங்கள் நம்பிக்கையைப் பற்றி அறிந்துகொள்ள திமொத்தேயுவை அனுப்பினேன். ஏனெனில் சோதிப்பவன் உங்களைச் சோதனைக்குட்படுத்தி விட்டானோ என்றும் அதனால் எங்கள் உழைப்பு வீணாகி விட்டதோ என்றும் அஞ்சினேன்.1தெச 3:2 1தெச 3:6 அப் 15:36 2கொரி 7:5-7
6ஆனால் இப்பொழுது திமொத்தேயு உங்களிடமிருந்து திரும்பி எங்களிடம் வந்துவிட்டார்: உங்களுடைய நம்பிக்கையையும் அன்பையும் குறித்து நல்ல செய்தி சொன்னார். நாங்கள் உங்களைக் காண ஏங்குவதுபோல நீங்களும் எங்களைக் காண விழைவதாகவும், எப்பொழுதும் எங்களை அன்போடு நினைவுகூறுவதாகவும் அறிவித்தார்.அப் 18:1 அப் 18:5
7ஆகையால், அன்பர்களே! எங்கள் இன்னல் இடுக்கண்கள் நடுவிலும் உங்களது நம்பிக்கையைக் கண்டு உங்களால் நாங்கள் ஆறுதல் அடைகிறோம்.1தெச 3:8 1தெச 3:9 2கொரி 1:4 2கொரி 7:6 2கொரி 7:7 2கொரி 7:13 2யோவா 1:4
8நீங்கள் ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருக்கிறீர்கள் என்று அறிந்ததும் எங்களுக்கு உயிர் வந்தது.1சாமு 25:6 சங் 30:5 பிலிப் 1:21
9நம் கடவுள் முன்னிலையில் உங்களால் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அதற்காக உங்கள் பொருட்டு எத்தகைய நன்றியை அவருக்குக் கைம்மாறாகக் காட்ட இயலும்?1தெச 1:2 1தெச 1:3 2சாமு 7:18-20 நெகே 9:5 சங் 71:14 சங் 71:15 2கொரி 2:14 2கொரி 9:15
10நாங்கள் உங்கள் முகத்தைக் காணவும், உங்கள் நம்பிக்கையில் குறைவாகவுள்ளவற்றை நிறைவாக்கவும், அல்லும் பகலும் மிகுந்த ஆர்வமுடன் மன்றாடுகிறோம்.லூக் 2:37 அப் 26:7 2தீமோ 1:3 வெளிப் 4:8 வெளிப் 7:15
11இப்பொழுது நம் தந்தையாம் கடவுளும், நம் ஆண்டவராம் இயேசுவும் உங்களிடம் வருவதற்கான வழியை எங்களுக்குக் காட்டுவார்களாக!1தெச 3:13 ஏசா 63:16 எரே 31:9 மல்கி 1:6 மத் 6:4 மத் 6:6 மத் 6:8 மத் 6:9 மத் 6:14 மத் 6:18 மத் 6:26 மத் 6:32 லூக் 12:30 லூக் 12:32 யோவா 20:17 2கொரி 6:18 கொலோ 1:2 1யோவா 3:1
12உங்கள் மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக!1தெச 4:10 சங் 115:4 லூக் 17:5 2கொரி 9:10 யாக் 1:17 2பேது 3:18
13இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!1தெச 5:23 ரோம 14:4 ரோம 16:25 1கொரி 1:8 பிலிப் 1:10 2தெச 2:16 2தெச 2:17 1பேது 5:10 1யோவா 3:20 1யோவா 3:21

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.