1 | சகோதர சகோதரிகளே, மாசிதோனியத் திருச்சபைகளுக்குக் கடவுள் கொடுத்த அருளைப்பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம். | 2கொரி 8:2-7 2கொரி 9:12 அப் 11:23 1கொரி 15:10 எபே 3:8 கொலோ 1:29 |
2 | அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களால் கடுமையாகச் சோதிக்கப்பட்ட போதும் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாய் இருந்தார்கள். அவர்கள் வறுமையில் மூழ்கி இருந்தாலும் வள்ளன்மையோடு வாரி வழங்கினார்கள். | 1தெச 1:6 1தெச 2:14 1தெச 3:3 1தெச 3:4 |
3 | அவர்கள் தங்களால் இயன்ற அளவுக்குத் தாங்களாகவே கொடுத்தார்கள். ஏன், அளவுக்கு மீறியே கொடுத்தார்கள். இதற்கு நானே சாட்சி. | 2கொரி 9:6 2கொரி 9:7 மாற் 14:8 அப் 11:29 1கொரி 16:2 1பேது 4:11 |
4 | இறைமக்களுக்குச் செய்யும் அறப்பணியில் பங்குபெறும் பேறு தங்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். | 2கொரி 8:18 2கொரி 8:19 ஆதி 33:10 ஆதி 33:11 2இரா 5:15 2இரா 5:16 அப் 16:15 1கொரி 16:3 1கொரி 16:4 |
5 | நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக அவர்கள் தங்களை முதன்மையாக ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்கள்: நாங்கள் கடவுளின் திருவுளப்படி செயல்படுவதால், எங்களுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள். | 2கொரி 5:14 2கொரி 5:15 1சாமு 1:28 2நாளா 30:8 ஏசா 44:3-5 எரே 31:33 சகரி 13:9 ரோம 6:13 ரோம 12:1 ரோம 14:7-9 1கொரி 6:19 1கொரி 6:20 |
6 | எனவே இந்த அறப்பணியைத் தொடங்கிய தீத்துவே அப்பணியை முடிக்க வேண்டும் என நாங்கள் அவரை வேண்டிக் கொண்டோம். | 2கொரி 8:16 2கொரி 8:17 2கொரி 12:18 |
7 | நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபட வேண்டும். | ரோம 15:14 1கொரி 1:5 1கொரி 4:7 1கொரி 12:13 1கொரி 14:12 வெளிப் 3:17 |
8 | நான் இதை உங்களுக்கு ஒரு கட்டளையாகச் சொல்லவில்லை. மாறாக, பிறருடைய ஆர்வத்தை எடுத்துக் காட்டி உங்கள் அன்பு உண்மையானதா எனச் சோதிக்கவே இவ்வாறு செய்கிறேன். | 2கொரி 8:10 2கொரி 9:7 1கொரி 7:6 1கொரி 7:12 1கொரி 7:25 |
9 | நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். | 2கொரி 13:14 யோவா 1:14 யோவா 1:17 ரோம 5:8 ரோம 5:20 ரோம 5:21 1கொரி 1:4 எபே 1:6-8 எபே 2:7 எபே 3:8 எபே 3:19 |
10 | இவ்வறப்பணியைப் பொறுத்தவரை என் கருத்து இதுவே: இது உங்களுக்குப் பயனளிக்கும். கடந்த ஆண்டிலிருந்தே நீங்கள் இப்பணியைச் செய்து வருகிறீர்கள்: அது மட்டுமல்ல: இதனை விருப்பத்தோடு தொடங்கியவர்களும் நீங்களே. | 1கொரி 7:25 1கொரி 7:40 |
11 | அப்பணியை இப்போதே செய்து முடியுங்கள். ஆர்வத்தோடு தொடங்கியது போலவே உங்கள் நிலைக்கு ஏற்றவாறு கொடுத்து, ஆர்வத்தோடு அதனைச் செய்து முடியுங்கள். |
12 | ஆர்வத்தோடு கொடுத்தால், தம் நிலைக்கேற்றவாறு எவ்வளவு கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். தம்மிடம் இருப்பதற்குக் கூடுதலாக யாரும் கொடுக்க வேண்டியதில்லை. | 2கொரி 9:7 யாத் 25:2 யாத் 35:5 யாத் 35:21 யாத் 35:22 யாத் 35:29 1நாளா 29:3-18 2நாளா 6:8 நீதி 19:22 மாற் 12:42-44 மாற் 14:7 மாற் 14:8 லூக் 7:44-46 லூக் 12:47 லூக் 12:48 லூக் 16:10 லூக் 21:1-4 1பேது 4:10 |
13 | மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, எல்லாரும் சமநிலையில் இருக்க வேண்டும் என்றே சொல்கிறோம். | அப் 4:34 ரோம 15:26 ரோம 15:27 |
14 | இப்பொழுது உங்களிடம் மிகுதியாயிருக்கிறது: அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும் போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும். |
15 | ‘மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை: குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை’ என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! | யாத் 16:18 லூக் 22:35 |
16 | எங்களுக்கு உங்கள் பேரில் உள்ள அதே ஆர்வத்தைத் தீத்துவின் உள்ளத்திலும் தூண்டியெழுப்பிய கடவுளுக்கு நன்றி உரித்தாகுக! | எஸ்றா 7:27 நெகே 2:12 எரே 31:31 எரே 32:40 கொலோ 3:17 வெளிப் 17:17 |
17 | நாங்கள் விடுத்த வேண்டுகோளை முன்னிட்டு மட்டும் அல்ல, அவரே மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதால் அவராக உங்களிடம் புறப்பட்டு வருகிறார். | 2கொரி 8:6 எபிரெ 13:22 |
18 | அவரோடு மற்றொரு சகோதரரையும் அனுப்புகிறோம். அவர் நற்செய்தி அறிவித்து எல்லாத் திருச்சபைகளிலும் புகழ்பெற்று விளங்குபவர். | 2கொரி 8:19 2கொரி 8:22 2கொரி 8:23 2கொரி 12:18 |
19 | அது மட்டும் அல்ல, நாங்கள் செய்யும் அறப்பணிப் பயணத்தில் வழித்துணைவராகத் திருச்சபையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் அவரே. ஆண்டவரின் மாட்சி இலங்கவும் எங்கள் ஆர்வம் விளங்கவுமே நாங்கள் இவ்வறப் பணியை மேற்கொண்டுள்ளோம். | 2கொரி 8:1-4 அப் 6:3-6 அப் 15:22 அப் 15:25 1கொரி 16:3 1கொரி 16:4 |
20 | இந்தப் பெருந்தொகையைக் கையாளும் முறைபற்றி எங்கள் மீது எவரும் குறை கூறாவண்ணம் கவனமாயிருக்கிறோம். | 2கொரி 11:12 மத் 10:16 ரோம 14:16 1கொரி 16:3 எபே 5:15 1தெச 5:22 |
21 | ஆண்டவர் முன்னிலையில் மட்டுமல்ல, மனிதர் முன்னிலையிலும் கண்ணியத்தைக் கடைப்பிடிப்பதே எங்கள் நோக்கம். | ரோம 12:17 பிலிப் 4:8 1தீமோ 5:14 தீத் 2:5-8 1பேது 2:12 |
22 | அவர்களோடு வேறொரு சகோதரதையும் அனுப்பி வைக்கிறோம். இவரது ஆர்வத்தைப் பலவற்றில் பலவேளைகளில் நாங்கள் சோதித்து அறிந்திருக்கிறோம். அவர் உங்களிடம் உறுதியான நம்பிக்கை மிகக் கொண்டிருப்பதால் இன்னும் மிகுதியாக ஆர்வம் காட்டுகிறார். | பிலிப் 2:20-22 |
23 | தீத்துவைப் பற்றிக் கூற வேண்டுமென்றால் அவர் என் பணியில் பங்காளியும் உடன் உழைப்பாளரும் ஆவார். மற்ற சகோதரர்கள் திருச்சபைகளால் அனுப்பப்பட்ட தூதர்கள். கிறிஸ்துவைப் போற்றிப் புகழும் முறையில் வாழ்பவர்கள். | 2கொரி 8:6 2கொரி 8:16 2கொரி 7:6 2கொரி 12:18 |
24 | ஆகவே அவர்களுக்கு உங்கள் அன்பைக் காட்டி, நாங்கள் உங்களைக் குறித்து அவர்களிடம் பெருமையாய்ப் பேசியது சரியே என்று எல்லாத் திருச்சபைகளுக்கும் எடுத்துக் காட்டுங்கள். | 2கொரி 8:8 2கொரி 7:14 2கொரி 9:2-4 |