லூக்கா 7:44-46 - WCV
44
பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், “இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை: இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார்.
45
நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை: இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார்.
46
நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை: இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.