ரோமர் 14:7-9 - WCV
7
நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை: தமக்கென்று இறப்பதுமில்லை.
8
வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்: இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே, வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.
9
ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சிசெலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்.