20
என் உளப்பாங்கிற்கு ஏற்ப, உங்கள்மீது உண்மையான கவலை கொள்வதற்கு அவரைத்தவிர வேறொருவரும் என்னிடமில்லை.
21
எல்லாரும் தம்மைச் சார்ந்தவற்றைத் தேடுகிறார்களே தவிர, இயேசு கிறிஸ்துவைச் சார்ந்தவற்றைத் தேடுவதில்லை.
22
ஆனால் திமொத்தேயுவின் தகைமை உங்களுக்குத் தெரியும். தந்தையோடு சேர்ந்து மகன் பணியாற்றுவது போல் என்னோடு சேர்ந்து அவர் நற்செய்திக்காகப் பணியாற்றியுள்ளார்.