இணை வசன வேதாகமம்

லேவியராகமம் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1ஒருவரது நேர்ச்சை நல்லுறவுப் பலியாய் இருந்தால், அது அவரது மாட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்தப்படும்.காளையாகவோ பசுவாகவோ இருந்தால், அவர் பழுதற்ற ஒன்றை ஆண்டவருக்கு முன்பாகக் கொண்டு வருவார்.லேவி 7:11-21 லேவி 7:29-34 லேவி 22:19-21 யாத் 20:24 யாத் 24:5 யாத் 29:28 எண் 6:14 எண் 7:17 நியா 20:26 நியா 21:4 1நாளா 21:26 நீதி 7:14 எசே 45:15 ஆமோ 5:22 ரோம 5:1 ரோம 5:2 கொலோ 1:20 1யோவா 1:3
2நேர்ச்சையின் தலைமேல் அவர் தம் கையை வைத்துச் சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் அதனைக் கொல்லவேண்டும்.அப்போது ஆரோனின் புதல்வராகிய குருக்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிப்பர்.லேவி 1:4 லேவி 1:5 லேவி 8:22 லேவி 16:21 லேவி 16:22 யாத் 29:10 ஏசா 53:6 2கொரி 5:21 1யோவா 1:9 1யோவா 1:10
3நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு நெருப்புப்பலியாகக் குடல்களைச் செலுத்த வேண்டியது: அவற்றைச் சுற்றிலுமுள்ள கொழுப்பு முழுவதும்லேவி 3:16 லேவி 4:8 லேவி 4:9 லேவி 7:3 லேவி 7:4 யாத் 29:13 யாத் 29:22 உபா 30:6 சங் 119:70 நீதி 23:26 ஏசா 6:10 எசே 36:26 மத் 13:16 மத் 15:8 ரோம 5:5 ரோம 6:6
4இரு சிறுநீரகங்களும் அவற்றின்மேல் சிறு குடல்களிடத்தில் இருக்கும் கொழுப்பும் சிறுநீரகங்களோடு கல்லீரலின் மேல் இருக்கிற கல்லும் ஆகும்.லேவி 3:10 லேவி 3:15 லேவி 4:9 லேவி 7:4 லேவி 8:16 லேவி 8:25 லேவி 9:10 லேவி 9:19 யாத் 29:13 யாத் 29:22
5ஆரோனின் புதல்வர் அதைப் பலிபீடத்தில் நெருப்பின் மீது உள்ள கட்டைகளில் ஏற்கெனவே வைத்திருக்கும் எரிபலியோடு எரிப்பர்.அது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி ஆகும்.லேவி 1:9 லேவி 4:31 லேவி 4:35 லேவி 6:12 லேவி 9:9 லேவி 9:10 யாத் 29:13 1சாமு 2:15 1சாமு 2:16 1இரா 8:64 2நாளா 35:14 எசே 44:7 எசே 44:15
6ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சையாக நல்லுறவுப் பலியைத் தம் ஆட்டு மந்தையிலிருந்து செலுத்தினால், அது பழுதற்ற கிடாயாகவோ ஆடாகவோ இருக்கட்டும்.கலா 4:4 எபே 1:10 எபே 2:13-22
7ஒருவர் நேர்ச்சையாக ஆட்டைச் செலுத்தினால், அதை ஆண்டவர் திருமுன் கொண்டு வந்து,லேவி 3:1 1இரா 8:62 எபே 5:2 எபே 5:12 எபிரெ 9:14
8நேர்ச்சையின் தலைமேல் அவர் தம் கையை வைத்து, சந்திப்புக் கூடாரத்தின் முன்பாக அதனைக் கொல்லவேண்டும்.ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிப்பர்.லேவி 3:2-5 லேவி 3:13-5 லேவி 4:4 லேவி 4:15 லேவி 4:24 ஏசா 53:6 ஏசா 53:11 ஏசா 53:12 2கொரி 5:21 1பேது 2:24
9நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு நெருப்புப் பலியாகச் செலுத்துவது, அதன் கொழுப்பும், முதுகெலும்பின் அருகில் வெட்டியெடுத்த கொழுப்பு வாலும் குடல்களை மூடிய கொழுப்பும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு முழுவதும்,லேவி 3:3 லேவி 3:4 நீதி 23:26 ஏசா 53:10
10இரு சிறுநீரகங்களும், அவற்றின்மேல் இடுப்பையொட்டி உள்ள கொழுப்பும், சிறுநீரகங்களை அடுத்து கல்லீரலின்மேல் உள்ள சவ்வும் ஆகும்.
11இவற்றைக் குருக்கள் பலிபீடத்தின்மேல் எரிப்பர்.இது ஆண்டவருக்கு உகந்த நெருப்புப்பலி உணவாகும்.லேவி 3:5 சங் 22:14 ஏசா 53:4-10 ரோம 8:32
12நேர்ச்சையாக ஒருவர் வெள்ளாட்டுக் கிடாயைச் செலுத்தினால், அதை அவர் ஆண்டவர் திருமுன் கொண்டுவந்துலேவி 3:1 லேவி 3:7-17 லேவி 1:2 லேவி 1:6 லேவி 1:10 லேவி 9:3 லேவி 9:15 லேவி 10:16 லேவி 22:19-27 ஏசா 53:2 ஏசா 53:6 மத் 25:32 மத் 25:33 ரோம 8:3 2கொரி 5:21
13அதன் தலைமேல் தம் கையை வைத்துச் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்வார்.ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிப்பர்.லேவி 3:1-5 லேவி 3:8-5 ஏசா 53:6 ஏசா 53:11 ஏசா 53:12 2கொரி 5:21 1பேது 2:24 1பேது 3:18
14நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு நெருப்புப் பலியாகச் செலுத்த வேண்டியது: குடல்களை மூடிய கொழுப்பும் அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு முழுவதும்,லேவி 3:3-5 லேவி 3:9-11 சங் 22:14 சங் 22:15 நீதி 23:26 எரே 20:18 மத் 22:37 மத் 26:38 ரோம 12:1 ரோம 12:2
15இரு சிறுநீரகங்களும் அவற்றின் மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பும் சிறுநீரகங்களோடு கல்லீரல்மேல் இருக்கிற சவ்வும் ஆகும்.
16குருக்கள் பலிபீடத்தின்மேல் அவற்றை எரிப்பர்.இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி உணவாகும்.லேவி 3:3-5 லேவி 3:9-11 லேவி 3:14-11 லேவி 3:15-11 லேவி 4:8-19 லேவி 4:26-19 லேவி 4:31-19 லேவி 7:23-25 லேவி 8:25 லேவி 9:24 லேவி 17:6 யாத் 29:13 யாத் 29:22 1சாமு 2:15 1சாமு 2:16 2நாளா 7:7 ஏசா 53:10 மத் 22:37
17கொழுப்பையோ இரத்தத்தையோ நீங்கள் உண்ணலாகாது.இது உங்கள் உறைவிடம் எங்கும் தலைமுறைதோறும் உங்களுக்கு மாறாத நியமமாக விளங்கும்.லேவி 6:18 லேவி 7:36 லேவி 16:34 லேவி 17:7 லேவி 23:14 எண் 19:21

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.