ஆரோன் இரு கைகளையும் உயிரோடிருக்கும் அந்தக் கிடாயின் மேல் வைத்து, இஸ்ரயேல் மக்களின் எல்லாக் குற்றங்களையும் தவறுகளையும் பாவங்களையும் அறிக்கையிட்டு அதன் தலைமேல் சுமத்தி, அதைப் பாலை நிலத்துக்குக் கொண்டு செல்ல நியமிக்கப்பட்ட ஆள் மூலம் அங்கு அனுப்பிவிடுவான்.