1 | கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்கின்ற பிலிப்பி நகர இறைமக்கள், சபைக் கண்காணிப்பாளர்கள், திருத்தொண்டர்கள் அனைவருக்கும், | ரோம 1:1 1கொரி 1:1 |
2 | கிறிஸ்து இயேசுவின் பணியாளர்களான பவுலும் திமொத்தேயுவும் எழுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும், ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! | ரோம 1:7 2கொரி 1:2 1பேது 1:2 |
3 | உங்களை நினைவுகூரும்பொழுதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்: | ரோம 1:8 ரோம 1:9 ரோம 6:17 1கொரி 1:4 |
4 | உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன்றாடிவருகிறேன். | பிலிப் 1:9-11 ரோம 1:9 எபே 1:14-23 1தெச 1:2 |
5 | ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள். | பிலிப் 1:7 பிலிப் 4:14 அப் 16:15 ரோம 11:17 ரோம 12:13 ரோம 15:26 1கொரி 1:9 2கொரி 8:1 எபே 2:19-22 எபே 3:6 கொலோ 1:21-23 பிலேமோ 1:17 எபிரெ 3:14 2பேது 1:1 1யோவா 1:3 1யோவா 1:7 |
6 | உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்தார் என உறுதியாய் நம்புகிறேன். | 2கொரி 1:15 2கொரி 2:3 2கொரி 7:16 2கொரி 9:4 கலா 5:10 2தெச 3:4 பிலேமோ 1:21 எபிரெ 10:35 |
7 | நீங்கள் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள். உங்கள் எல்லாரையும் பற்றி எனக்கு இத்தகைய எண்ணங்கள் எழுவது முறையே. ஏனெனில் நான் சிறையிலிருக்கும் இந்நேரத்திலும் நற்செய்திக்காக வழக்காடி அதை நிலைநாட்டிய காலத்திலும் நான் பெற்ற அருளில் உங்களுக்கும் பங்கு உண்டு. | 1கொரி 13:7 1தெச 1:2-5 1தெச 5:5 எபிரெ 6:9 எபிரெ 6:10 |
8 | கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன் என்பதற்குக் கடவுளே சாட்சி. | ரோம 1:9 ரோம 9:1 கலா 1:20 1தெச 2:5 |
9 | மேலும், நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, | பிலிப் 3:15 பிலிப் 3:16 யோபு 17:9 நீதி 4:18 மத் 13:31-33 2கொரி 8:7 1தெச 3:12 1தெச 4:1 1தெச 4:9 1தெச 4:10 2தெச 1:3 பிலேமோ 1:6 1பேது 1:22 |
10 | அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன். | ஏசா 7:15 ஏசா 7:16 ஆமோ 5:14 ஆமோ 5:15 மீகா 3:2 யோவா 3:20 ரோம 2:18 ரோம 7:16 ரோம 7:22 ரோம 8:7 ரோம 12:2 ரோம 12:9 |
11 | கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன். | பிலிப் 4:17 சங் 1:3 சங் 92:12-14 ஏசா 5:2 லூக் 13:6-9 யோவா 15:2 யோவா 15:8 யோவா 15:16 ரோம 6:22 ரோம 15:28 2கொரி 9:10 கலா 5:22 கலா 5:23 எபே 5:9 கொலோ 1:6 கொலோ 1:10 எபிரெ 12:11 யாக் 3:17 யாக் 3:18 |
12 | சகோதர சகோதரிகளே, எனக்கு நேர்ந்தவையெல்லாம் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவாயின. இதை நீங்கள் அறிய வேண்டுமென விரும்புகிறேன். | அப் 21:28-36 அப் 22:1-30 அப் 28:1-31 |
13 | ஏனெனில் கிறிஸ்துவுக்காகவே நான் சிறைப்பட்டுள்ளேன் என்பது ஆளுநர் மாளிகைக் காவற்படையினர் அனைவருக்கும் மற்ற யாவருக்குமே தெளிவாயிற்று. | அப் 20:23 அப் 20:24 அப் 21:11-13 அப் 26:29 அப் 26:31 அப் 28:17 அப் 28:20 எபே 3:1 எபே 4:1 எபே 6:20 கொலோ 4:3-18 |
14 | என் சிறைவாழ்வினால் சகோதரர் சகோதரிகளுள் பெரும்பாலோர் ஆண்டவரை உறுதியாக நம்பிக் கடவுள் வார்த்தையை அச்சமின்றி எடுத்துரைக்க மேலும் துணிவு பெற்றிருக்கிறார்கள். | பிலிப் 4:1 கொலோ 4:7 |
15 | சிலர் பொறாமையும் போட்டி மனப்பான்மையும் கொண்டு கிறிஸ்துவை அறிவிக்கின்றனர்: வேறுசிலர் நன்மனத்தோடு அறிவிக்கின்றனர். | பிலிப் 1:16 பிலிப் 1:18 அப் 5:42 அப் 8:5 அப் 8:35 அப் 9:20 அப் 10:36 அப் 11:20 1கொரி 1:23 2கொரி 1:19 2கொரி 4:5 1தீமோ 3:16 |
16 | இவர்களைத் தூண்டுவது அன்பே. நற்செய்திக்காகக் குரல்கொடுக்கவே நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன் என இவர்கள் அறிவார்கள். | பிலிப் 1:10 2கொரி 2:17 2கொரி 4:1 2கொரி 4:2 |
17 | மற்றவர்களோ கட்சி மனப்பான்மையால் தூண்டப்பட்டுக் கிறிஸ்துவை அறிவிக்கின்றனர். அவர்களது நோக்கம் தூய்மையானது அல்ல: அவர்கள் என் சிறைவாழ்வின் துன்பத்தை மிகுதியாக்கவே நினைக்கின்றனர். | பிலிப் 1:7 ரோம 1:13-17 1கொரி 9:16 1கொரி 9:17 கலா 2:7 கலா 2:8 1தீமோ 2:7 2தீமோ 1:11 2தீமோ 1:12 2தீமோ 4:6 2தீமோ 4:7 லூக் 21:14 அப் 22:1 அப் 26:1 அப் 26:24 2தீமோ 4:16 |
18 | அதனாலென்ன? அவர்களது நோக்கம் போலியாக அல்லது உண்மையாக இருக்கலாம். எப்படியும் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆம், இனியும் மகிழ்ச்சியடைவேன். | ரோம 3:9 ரோம 6:15 1கொரி 10:19 1கொரி 14:15 |
19 | இவ்வாறு உங்கள் மன்றாட்டும் இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் துணையும் என்விடுதலைக்கு வழிவகுக்கும் என நான் அறிவேன். | ரோம 8:28 1கொரி 4:17 1பேது 1:7-9 |
20 | என்ன நேர்ந்தாலும் வெட்கமுற மாட்டேன். இன்றும் என்றும், வாழ்விலும் சாவிலும் முழுத்துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப் படுத்துவேன். இதுவே என் பேராவல், இதுவே என் எதிர்நோக்கு. | சங் 62:5 நீதி 10:28 நீதி 23:18 ரோம 8:19 |
21 | ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே: நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. | பிலிப் 1:20 பிலிப் 2:21 1கொரி 1:30 கலா 6:14 கொலோ 3:4 |
22 | எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்துகொள்வதென எனக்குத் தெரியவில்லை. | பிலிப் 1:24 2கொரி 10:3 கலா 2:20 கொலோ 2:1 1பேது 4:2 |
23 | இந்த இரண்டுக்குமிடையே ஒரு இழுபறி நிலையில் உள்ளேன். உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம். - இதுவே மிகச் சிறந்தது.- | 2சாமு 24:14 1தெச 2:1 1தெச 2:13 லூக் 12:50 2கொரி 6:12 |
24 | ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம். - இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது. | பிலிப் 1:22 பிலிப் 1:25 பிலிப் 1:26 யோவா 16:7 அப் 20:29-31 |
25 | நான் உங்களோடிருப்பதால் நீங்கள் நம்பிக்கையில் வளர்ச்சி பெற்று மகிழ்ச்சியடைவீர்கள். எனவே உங்கள் அனைவரோடும் தொடர்ந்து தங்கியிருப்பேன் என உறுதியாக நம்புகிறேன். | பிலிப் 2:24 அப் 20:25 |
26 | ஆகவே, நான் உங்களிடம் மீண்டும் வருவதால், கிறிஸ்து இயேசுவின் உறவில் வாழும் நீங்கள் என் பொருட்டு இன்னும் மிகுதியாகப் பெருமிதம் கொள்வீர்கள். | பிலிப் 2:16-18 பிலிப் 3:1 பிலிப் 3:3 பிலிப் 4:4 பிலிப் 4:10 உன்ன 5:1 யோவா 16:22 யோவா 16:24 2கொரி 1:14 2கொரி 5:12 2கொரி 7:6 |
27 | ஒன்றைமட்டும் மறந்துவிடாதீர்கள்: கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுங்கள். நான் உங்களை வந்து பார்த்தாலும், நான் வரமுடியாத நிலையில் உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டாலும் நீங்கள் நற்செய்தியில் கொண்டுள்ள நம்பிக்கைக்காக ஒருமனத்தோடு போராடி, ஒரே உள்ளத்தோடு நிலைத்து நிற்கிறீர்கள் என்றும், | பிலிப் 3:18-21 எபே 4:1 கொலோ 1:10 1தெச 2:11 1தெச 2:12 1தெச 4:1 தீத் 2:10 2பேது 1:4-9 2பேது 3:11 2பேது 3:14 |
28 | எதிரிகள் முன் சற்றும் மருளாமல் இருக்கிறீர்கள் என்றும் நான் அறிய வேண்டும். இவ்வாறு நீங்கள் மருளாதிருப்பது அவர்களது அழிவுக்கும் உங்களது மீட்புக்கும் அறிகுறியாகும். இதுவும் கடவுளின் செயலே. | ஏசா 51:7 ஏசா 51:12 மத் 10:28 லூக் 12:4-7 லூக் 21:12-19 அப் 4:19-31 அப் 5:40-42 1தெச 2:2 2தீமோ 1:7 2தீமோ 1:8 எபிரெ 13:6 வெளிப் 2:10 |
29 | ஏனெனில் கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்வதற்கு மட்டும் அல்ல, அவருக்காகத் துன்பங்களை ஏற்பதற்கும் நீங்கள் அருள் பெற்றுள்ளீர்கள். | அப் 5:41 ரோம 5:3 யாக் 1:2 1பேது 4:13 |
30 | நீங்கள் என் போராட்டத்தைக் கண்டீர்கள், இப்பொழுதும் அதுபற்றிக் கேள்விப்படுகிறீர்கள். உங்கள் போராட்டமும் அதுவே. | யோவா 16:33 ரோம 8:35-37 1கொரி 4:9-14 1கொரி 15:30-32 எபே 6:11-18 கொலோ 2:1 1தெச 2:14 1தெச 2:15 1தெச 3:2-4 2தீமோ 2:10-12 2தீமோ 4:7 எபிரெ 10:32 எபிரெ 10:33 எபிரெ 12:4 வெளிப் 2:10 வெளிப் 2:11 வெளிப் 12:11 |