இணை வசன வேதாகமம்

2தீமோத்தேயு 2

                   
புத்தகங்களைக் காட்டு
1என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவின் அருளால் வலிமை பெறு.2தீமோ 1:2 1தீமோ 1:2 1தீமோ 1:18
2சான்றாளர் பலர் முன்னிலையில் நீ என்னிடம் கேட்டவற்றை, மற்றவர்களுக்குக் கற்பிக்கும் திறமையுள்ளவர்களும் நம்பிக்கைக்கு உரியவர்களுமாகிய மனிதரிடம் ஒப்படை.2தீமோ 1:13 2தீமோ 3:10 2தீமோ 3:14
3கிறிஸ்து இயேசுவின் நல்ல படை வீரனைப் போன்று துன்பங்களில் பங்கு கொள்.2தீமோ 2:10 2தீமோ 1:8 2தீமோ 3:11 2தீமோ 4:5 1கொரி 13:7 2கொரி 1:6 எபிரெ 6:15 எபிரெ 10:32 எபிரெ 11:27 எபிரெ 12:2 எபிரெ 12:3 யாக் 1:12
4படைவீரர் எவரும் பிழைப்புக்காகப் பிற அலுவல்களில் ஈடுபட மாட்டார். தம்மைப் படையில் சேர்த்துக்கொண்டவருக்கு அவர் உகந்தவராயிருக்க வேண்டும் அன்றோ!உபா 20:5-7 லூக் 9:59-62
5விளையாட்டு வீரர் எவரும் விதி முறைகளுக்குட்பட்டு விளையாடினால் மட்டுமே வெற்றிவாகை சூட முடியும்.லூக் 13:24 1கொரி 9:24-27 பிலிப் 1:15 கொலோ 1:29 எபிரெ 12:4
6நிலத்தில் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளரே விளைச்சலில் முதற்பங்கு பெற வேண்டும்.ஏசா 28:24-26 மத் 9:37 மத் 9:38 மத் 20:1 மத் 21:33-41 லூக் 10:2 யோவா 4:35-38 1கொரி 3:6-9 1கொரி 9:7-11
7நான் கூறுபவற்றைக் கருத்தில் கொள். ஆண்டவர் உனக்கு அனைத்தையும் புரிந்து கொள்ளும் திறமையைத் தருவாராக.உபா 4:39 உபா 32:29 சங் 64:9 நீதி 24:32 ஏசா 1:3 ஏசா 5:12 லூக் 9:44 பிலிப் 4:8 1தீமோ 4:15 எபிரெ 3:1 எபிரெ 7:4 எபிரெ 12:3 எபிரெ 13:7
8தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர்பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள்.எபிரெ 12:2 எபிரெ 12:3
9இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது.2தீமோ 1:8 2தீமோ 1:12 2தீமோ 1:16 அப் 9:16
10தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன்.2தீமோ 2:3 எபே 3:13 கொலோ 1:24
11பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: “நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்:1தீமோ 1:15 1தீமோ 3:1 தீத் 3:8
12அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சிசெய்வோம்: நாம் அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார்.மத் 19:28 மத் 19:29 அப் 14:22 ரோம 8:17 பிலிப் 1:28 2தெச 1:4-8 1பேது 4:13-16 வெளிப் 1:6 வெளிப் 1:9 வெளிப் 5:10 வெளிப் 20:4 வெளிப் 20:6
13நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது.” இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து.ஏசா 25:1 மத் 24:35 ரோம 3:3 ரோம 9:6 1தெச 5:24 2தெச 3:3
14வெறும் சொற்களைப் பற்றிச் சண்டையிடுவது பயனற்றது: அது கேட்போரின் அழிவுக்கு ஏதுவாகும் எனக் கடவுள் முன்னிலையில் சான்று பகர்ந்திடு.2தீமோ 1:6 2பேது 1:13
15நீ கடவுள்முன் ஏற்புடையோனாக நிற்க முழு முயற்சி செய்: உண்மையின் வார்த்தையை நேர்மையாய்ப் பகுத்துக் கூறும் பணியாளாகிய நீ வெட்கமுற வேண்டியதில்லை.எபிரெ 4:11 2பேது 1:10 2பேது 1:15 2பேது 3:14
16உலகப் போக்கிலான வீண் பேச்சுகளை விலக்கு: ஏனெனில் அதனால் அவர்கள் மேன்மேலும் இறைப்பற்று அற்றவர்களாவார்கள்.2தீமோ 2:14 1தீமோ 4:7 1தீமோ 6:20 தீத் 1:14 தீத் 3:9
17அவர்களது போதனை சதையழுகல் நோய் போன்று அரித்துத் தின்றுவிடும். இமனேயும் பிலேத்தும் இத்தகையோராவர்.நாகூ 3:15 யாக் 5:3
18உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நிகழ்ந்து விட்டதென்று அவர்கள் சொல்லி, உண்மையை விட்டு விலகிப் போய் விட்டார்கள்: சிலருடைய நம்பிக்கையைச் சீர்குலைத்துவிட்டார்கள்.மத் 22:29 1தீமோ 1:19 1தீமோ 6:10 1தீமோ 6:21 எபிரெ 3:10 யாக் 5:19
19கடவுள் இட்ட அடித்தளம் உறுதியாய் நிலைத்து நிற்கிறது. அதில் “ஆண்டவர் தம்முடையோரை அறிவார்” என்றும், “ஆண்டவரின் பெயரை அறிக்கையிடுவோர் அநீதியை விட்டு விட வேண்டும்” என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.நீதி 10:25 ஏசா 14:32 ஏசா 28:16 மத் 7:25 லூக் 6:48 1கொரி 3:10 1கொரி 3:11 எபே 2:20 1தீமோ 6:19 எபிரெ 11:10 வெளிப் 21:14
20ஒரு பெரிய வீட்டில் பொன், வெள்ளிக் கலன்கள் மட்டுமல்ல, மண் மற்றும் மரத்தாலான கலன்களும் உள்ளன. அவற்றுள் சில மதிப்புடையவை: சில மதிப்பற்றவை.1கொரி 3:9 1கொரி 3:16 1கொரி 3:17 எபே 2:22 1தீமோ 3:15 எபிரெ 3:2-6 1பேது 2:5
21ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தம்மைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், அவர் மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படுவார். அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார்: தம் தலைவருக்கும் பயனுள்ளவராயிருப்பார்.சங் 119:9 ஏசா 1:25 ஏசா 52:11 எரே 15:19 மல்கி 3:3 1கொரி 5:7 2கொரி 7:1 1பேது 1:22 1யோவா 3:3
22எனவே நீ இள வயதின் இச்சைகளை விட்டு ஓடிவிடு. தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவரது பெயரை அறிக்கையிட்டு வழிபடுவோருடன் நீதி, நம்பிக்கை, அன்பு, அமைதி ஆகியவற்றை நாடித் தேடு.நீதி 6:5 1கொரி 6:18 1கொரி 10:14 1தீமோ 6:11
23மடத்தனமான அறிவற்ற விவாதங்கள் சண்டைகளைத் தோற்றுவிக்கும் என அறிந்து, அவற்றை விட்டுவிடு.2தீமோ 2:14 2தீமோ 2:16 1தீமோ 1:4 1தீமோ 4:7 1தீமோ 6:4 1தீமோ 6:5 தீத் 3:9
24ஆண்டவரின் பணியாளர் சண்டையிடாதவராயிருக்க வேண்டும்: அது மட்டுமல்ல, அனைவரிடமும் கனிவு காட்டுகிறவராகவும், கற்பிக்கும் திறமையுடையவராகவும், தீமையைப் பொறுத்துக் கொள்பவராகவும்,உபா 34:5 யோசு 1:1 2நாளா 24:6 தானி 6:20 1தீமோ 6:11 தீத் 1:1 தீத் 3:2 யாக் 1:1
25மாற்றுக் கருத்துடையோருக்கும் பணிவோடு பயிற்றுவிப்பவராகவும் இருக்க வேண்டும். ஏனெனில் ஒருவேளை அவர்கள் உண்மையை அறிந்துணர்ந்து மனம் மாறக் கடவுள் அருள்கூரலாம்.மத் 11:29 கலா 6:1 1தீமோ 6:11 1பேது 3:15
26அலகையின் விருப்பத்திற்கேற்ப அதன் பிடியில் வாழும் அவர்கள் அதன் கண்ணிக்குத் தப்பி மனத்தெளிவு பெறக் கூடும்.லூக் 15:17 1கொரி 15:34 எபே 5:14

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.