இணை வசன வேதாகமம்

கொலோசேயர் 4

                   
புத்தகங்களைக் காட்டு
1தலைவர்களே, உங்கள் அடிமைகளை உங்களுக்கு இணையாகக் கருதி நேர்மையோடு நடத்துங்கள். உங்களுக்கும் விண்ணகத்தில் ஆண்டவர் ஒருவர் உண்டு என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.லேவி 19:13 லேவி 25:39-43 உபா 15:12-15 உபா 24:14 உபா 24:15 நெகே 5:5-13 யோபு 24:11 யோபு 24:12 யோபு 31:13-15 ஏசா 58:3 ஏசா 58:5-9 எரே 34:9-17 மல்கி 3:5 யாக் 2:13 யாக் 5:4
2தொடர்ந்து இறைவனிடம் வேண்டுங்கள். விழிப்போடும் நன்றி உணர்வோடும் அதில் ஈடுபடுங்கள்.கொலோ 4:12 கொலோ 1:9 1சாமு 12:23 யோபு 15:4 யோபு 27:8-10 சங் 55:16 சங் 55:17 சங் 109:4 லூக் 18:1 ரோம 12:12 எபே 6:18 பிலிப் 4:6 1தெச 5:17 1தெச 5:18
3நாங்கள் நற்செய்தியை அறிவிப்பதற்கான வாய்ப்பைக் கடவுள் உருவாக்கித் தருமாறு அவரிடம் எங்களுக்காகவும் வேண்டுங்கள். அப்பொழுது கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நாங்கள் எடுத்துரைக்க முடியும். இம்மறைபொருளின் பொருட்டே நான் சிறைப்பட்டிருக்கிறேன்.ரோம 15:30-32 எபே 6:19 பிலிப் 1:19 1தெச 5:25 பிலேமோ 1:22 எபிரெ 13:18 எபிரெ 13:19
4நான் பேசவேண்டிய முறையில் பேசி இம்மறை பொருளை வெளிப்படுத்தும் ஆற்றலைப் பெற எனக்காக வேண்டுங்கள்.மத் 10:26 மத் 10:27 அப் 4:29 2கொரி 3:12 2கொரி 4:1-4
5திருச்சபையைச் சேராதவர்களிடம் ஞானத்தோடு நடந்துகொள்ளுங்கள். காலத்தை நன்கு பயன்படுத்துங்கள்.கொலோ 3:16 சங் 90:12 மத் 10:16 ரோம 16:19 1கொரி 14:19-25 எபே 5:15-17 யாக் 1:5 யாக் 3:13 யாக் 3:17
6உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாயும் சுவையுடையதாயும் இருப்பதாக! ஒவ்வொருவருக்கும் தகுந்த மறுமொழி அளிக்க நீங்கள் அறிந்திருக்கவேண்டும்.கொலோ 3:16 உபா 6:6 உபா 6:7 உபா 11:19 1நாளா 16:24 சங் 37:30 சங் 37:31 சங் 40:9 சங் 40:10 சங் 45:2 சங் 66:16 சங் 71:15-18 சங் 71:23-18 சங் 71:24-18 சங் 78:3 சங் 78:4 சங் 105:2 சங் 119:13 சங் 119:46 நீதி 10:21 நீதி 15:4 நீதி 15:7 நீதி 16:21-24 நீதி 22:17 நீதி 22:18 நீதி 25:11 நீதி 25:12 பிரச 10:12 மல்கி 3:16-18 மத் 12:34 மத் 12:35 லூக் 4:22 எபே 4:29
7என்னைப்பற்றிய செய்திகளையெல்லாம் அன்பார்ந்த சகோதரர் திக்கிக்கு உங்களுக்குத் தெரிவிப்பார். அவர் ஆண்டவரது பணியில் என் உடன்பணியாளர், நம்பிக்கைக்குரிய திருத்தொண்டர்.எபே 6:21-23
8எங்களைப்பற்றிய செய்திகளை உங்களுக்குத் தெரிவித்து உங்கள் உள்ளங்களை ஊக்குவிக்கவே அவரை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன்.1கொரி 4:17 2கொரி 12:18 எபே 6:22 பிலிப் 2:28 1தெச 3:5
9நம்பிக்கைக்குரிய அன்பார்ந்த சகோதரர் ஒனேசிமுவையும் அவரோடு அனுப்பிவைக்கிறேன். அவர் உங்கள் திருச்சபையைச் சேர்ந்தவர். அவர்கள் இங்கு நடப்பவை அனைத்தையும் உங்களுக்குத் தெரிவிப்பார்கள்.கொலோ 4:7 பிலேமோ 1:10-19
10என் உடன்கைதியாயிருக்கும் அரிஸ்தர்க்கு உங்களை வாழ்த்துகிறார். பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரர் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார். இவருக்கு நீங்கள் செய்ய வேண்டிவைபற்றி ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளோம். இவர் உங்களிடம் வந்தால் வரவேற்பு அளியுங்கள்.அப் 19:29 அப் 20:4 அப் 27:2 பிலேமோ 1:24
11யுஸ்து என்னும் இயேசுவும் உங்களை வாழ்த்துகிறார். விருத்தசேதனம் பெற்றவர்களுள் இவர்கள் மட்டுமே இறையாட்சிக்காக என்னுடன் உழைப்பவர்கள். இவர்கள் எனக்கு ஆறுதலாயிருந்து வருகின்றார்கள்.அப் 10:45 அப் 11:2 ரோம 4:12 கலா 2:7 கலா 2:8 எபே 2:11 தீத் 1:10
12கிறிஸ்து இயேசுவின் பணியாளரும் உங்கள் திருச்சபையைச் சேர்ந்தவருமான எப்பப்பிரா உங்களை வாழ்த்துகிறார். எல்லாச் சூழ்நிலைகளிலும் கடவுளின் திருவுளத்தை முழுமையாக நிறைவேற்றுவதில் நீங்கள் தேர்ச்சிபெற்றவர்களாயும் நிலைத்து நிற்பவர்களாயும் இருக்கவேண்டுமென இவர் எப்போதும் உங்களுக்காக இறைவனிடம் வருந்தி வேண்டி வருகிறார்.கொலோ 1:7 பிலேமோ 1:23
13இவர் உங்களுக்காகவும் லவோதிக்கேயா, எராப்பொலி நகரத்தைச் சேர்ந்தவர்களுக்காகவும் கடுமையாக உழைக்கிறார் என்பதற்கு நான் சாட்சி.ரோம 10:2 2கொரி 8:3
14அன்பார்ந்த மருத்துவர் லூக்காவும், தேமாவும் உங்களை வாழ்த்துகின்றனர்.2தீமோ 4:11 பிலேமோ 1:24
15லவோதிக்கேயாவிலுள்ள சகோதரர் சகோதரிகளுக்கும் நிம்பாவுக்கும் அச்சகோதரி வீட்டில் கூடும் திருச்சபைக்கும் வாழ்த்துக் கூறுங்கள்.ரோம 16:5 1கொரி 16:9 பிலேமோ 1:2
16இத்திருமுகத்தை நீங்கள் வாசித்தபின்பு லவோதிக்கேயா திருச்சபையிலும் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள். அவ்வாறே லவோதிக்கேயா திருச்சபையிலிருந்து வரும் திருமுகத்தையும் நீங்கள் வாசியுங்கள்.1தெச 5:27
17ஆண்டவரது பணியில் தாம் பெற்றுள்ள திருத்தொண்டை தாம் பெற்றுள்ள திருத்தொண்டை நிறைவேறி முடிக்கக் கவனமாயிருக்குமாறு அர்க்கிப்பிடம் சொல்லுங்கள்.பிலேமோ 1:2
18பவுலாகிய நான் இவ்வாழ்த்தை என் கைப்பட எழுதுகிறேன். சிறைப்பட்டிருக்கும் என்னை நினைத்துக் கொள்ளுங்கள். இறையருள் உங்களோடிருப்பதாக!1கொரி 16:21 2தெச 3:17

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.