1நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்: பாவிகளின் தீயவழி நில்லாதவர்: இகழ்வாரின் குழுவினில் அமராதவர்:சங் 2:12 சங் 32:1 சங் 32:2 சங் 34:8 சங் 84:12 சங் 106:3 சங் 112:1 சங் 115:12-15 சங் 119:1 சங் 119:2 சங் 144:15 சங் 146:5 உபா 28:2-68 உபா 33:29 எரே 17:7 மத் 16:17 லூக் 11:28 யோவா 13:17 யோவா 20:29 வெளிப் 22:14 2ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்: அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்:சங் 40:8 சங் 112:1 சங் 119:11 சங் 119:35 சங் 119:47 சங் 119:48 சங் 119:72 சங் 119:92 யோபு 23:12 எரே 15:16 ரோம 7:22 1யோவா 5:3 3அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்: பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்: தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.யோபு 14:9 ஏசா 44:4 எரே 17:8 எசே 17:8 எசே 19:10 எசே 47:12 வெளிப் 22:2 4ஆனால், பொல்லார் அப்படி இல்லை: அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்.சங் 35:5 யோபு 21:18 ஏசா 17:13 ஏசா 29:5 ஓசி 13:3 மத் 3:12 5பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைநிற்க மாட்டார்: பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார்.சங் 5:5 சங் 24:3 லூக் 21:36 யூதா 1:15 6நேர்மையாளரின் நெறியை ஆணடவர் கருத்தில் கொள்வார்: பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.சங் 37:18-24 சங் 139:1 சங் 139:2 சங் 142:3 யோபு 23:10 நாகூ 1:7 யோவா 10:14 யோவா 10:27 2தீமோ 2:19