1 | பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள். | ஆதி 9:7 ஆதி 1:22 ஆதி 1:28 ஆதி 2:3 ஆதி 8:17 ஆதி 24:60 சங் 112:1 சங் 128:3 சங் 128:4 ஏசா 51:2 |
2 | உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன. | ஆதி 1:28 ஆதி 2:19 ஆதி 35:5 லேவி 26:6 லேவி 26:22 யோபு 5:22 யோபு 5:23 சங் 8:4-8 சங் 104:20-23 எசே 34:25 ஓசி 2:18 யாக் 3:7 |
3 | நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்தது போல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன். | லேவி 11:1-47 லேவி 22:8 உபா 12:15 உபா 14:3-21 அப் 10:12-15 1தீமோ 4:3-5 |
4 | மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம். | லேவி 3:17 லேவி 7:26 லேவி 17:10-14 லேவி 19:26 உபா 12:16 உபா 12:23 உபா 14:21 உபா 15:23 1சாமு 14:34 அப் 15:20 அப் 15:25 அப் 15:29 1தீமோ 4:4 |
5 | உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன். | யாத் 21:12 யாத் 21:28 யாத் 21:29 |
6 | மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது. | யாத் 21:12-14 யாத் 22:2 யாத் 22:3 லேவி 17:4 லேவி 24:17 எண் 35:25 1இரா 2:5 1இரா 2:6 1இரா 2:28-34 மத் 26:52 ரோம 13:4 வெளிப் 13:10 |
7 | நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விர்த்தியாகுங்கள் என்றார். | ஆதி 9:1 ஆதி 9:19 ஆதி 1:28 ஆதி 8:17 |
8 | பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி: |
9 | நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும், | ஆதி 9:11 ஆதி 9:17 ஆதி 6:18 ஆதி 17:7 ஆதி 17:8 ஆதி 22:17 ஏசா 54:9 ஏசா 54:10 எரே 31:35 எரே 31:36 எரே 33:20 ரோம 1:3 |
10 | உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். | ஆதி 9:15 ஆதி 9:16 ஆதி 8:1 யோபு 38:1-41 யோபு 41:1-34 சங் 36:5 சங் 36:6 சங் 145:9 யோனா 4:11 |
11 | இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். | ஆதி 8:21 ஆதி 8:22 ஏசா 54:9 |
12 | அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: | ஆதி 17:11 யாத் 12:13 யாத் 13:16 யோசு 2:12 மத் 26:26-28 1கொரி 11:23-25 |
13 | நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். | எசே 1:28 வெளிப் 4:3 வெளிப் 10:1 |
14 | நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும். |
15 | அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். | யாத் 28:12 லேவி 26:42-45 உபா 7:9 1இரா 8:23 நெகே 9:32 சங் 106:45 எரே 14:21 எசே 16:60 லூக் 1:72 |
16 | அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன். | ஆதி 9:9-11 ஆதி 8:21 ஆதி 8:22 ஆதி 17:13 ஆதி 17:19 2சாமு 23:5 சங் 89:3 சங் 89:4 ஏசா 54:8-10 ஏசா 55:3 எரே 32:40 எபிரெ 13:20 |
17 | இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார். |
18 | பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம், காம், யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன். | ஆதி 9:23 ஆதி 10:1 1நாளா 1:4 |
19 | இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள். | ஆதி 5:32 |
20 | நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான். | ஆதி 3:18 ஆதி 3:19 ஆதி 3:23 ஆதி 4:2 ஆதி 5:29 நீதி 10:11 நீதி 12:11 பிரச 5:9 ஏசா 28:24-26 |
21 | அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். | ஆதி 6:9 ஆதி 19:32-36 நீதி 20:1 நீதி 23:31 நீதி 23:32 பிரச 7:20 லூக் 22:3 லூக் 22:4 ரோம 13:13 1கொரி 10:12 கலா 5:21 தீத் 2:2 |
22 | அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைத் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான். | ஆதி 9:25 ஆதி 10:6 ஆதி 10:15-19 1நாளா 1:8 1நாளா 1:13-16 |
23 | அப்பொழுது சேமும், யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு, பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை. | யாத் 20:12 லேவி 19:32 ரோம 13:7 கலா 6:1 1தீமோ 5:1 1தீமோ 5:17 1தீமோ 5:19 1பேது 2:17 1பேது 4:8 |
24 | நோவா திராட்சரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து: |
25 | கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான். | ஆதி 9:22 ஆதி 3:14 ஆதி 4:11 ஆதி 49:7 உபா 27:16 உபா 28:18 மத் 25:41 யோவா 8:34 |
26 | சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான். | உபா 33:26 சங் 144:15 ரோம 9:5 |
27 | யாப்பேத்தை தேவன் விர்த்தியாக்குவார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான். | ஏசா 11:10 ஓசி 2:14 மல்கி 1:11 அப் 17:14 ரோம 11:12 ரோம 15:12 எபே 2:13 எபே 2:14 எபே 2:19 எபே 3:6 எபே 3:13 எபிரெ 11:9 எபிரெ 11:10 |
28 | ஜலப்பிரளயத்துக்குப்பின்பு நோவா முந்நூற்று ஐம்பது வருஷம் உயிரோடிருந்தான். |
29 | நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம்; அவன் மரித்தான். | ஆதி 5:5 ஆதி 5:20 ஆதி 5:27 ஆதி 5:32 ஆதி 11:11-25 சங் 90:10 |