1 | பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. | ஏசா 19:18 செப் 3:9 அப் 2:6 |
2 | ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். | ஆதி 13:11 |
3 | அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. | ஆதி 11:4 ஆதி 11:7 சங் 64:5 நீதி 1:11 பிரச 2:1 ஏசா 5:5 ஏசா 41:6 ஏசா 41:7 யாக் 4:13 யாக் 5:1 |
4 | பின்னும் அவர்கள்: நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். | உபா 1:28 உபா 9:1 தானி 4:11 தானி 4:22 |
5 | மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். | ஆதி 18:21 யாத் 19:11 சங் 11:4 சங் 33:13 சங் 33:14 எரே 23:23 எரே 23:24 யோவா 3:13 எபிரெ 4:13 |
6 | அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள். | ஆதி 3:22 நியா 10:14 1இரா 18:27 பிரச 11:9 |
7 | நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். | ஆதி 11:5 ஆதி 1:26 ஆதி 3:22 ஏசா 6:8 |
8 | அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். | ஆதி 11:4 ஆதி 11:9 ஆதி 49:7 உபா 32:8 லூக் 1:51 |
9 | பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். | ஆதி 10:5 ஆதி 10:10 ஆதி 10:20 ஆதி 10:31 ஏசா 13:1-14 எரே 50:1-51 1கொரி 14:23 |
10 | சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான். | ஆதி 11:27 ஆதி 10:21 ஆதி 10:22 1நாளா 1:17-27 லூக் 3:34-36 |
11 | சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். | ஆதி 5:4-32 |
12 | அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான். | லூக் 3:36 |
13 | சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். |
14 | சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான். |
15 | ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். |
16 | ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான். | ஆதி 10:21 ஆதி 10:25 எண் 24:24 1நாளா 1:19 |
17 | பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். |
18 | பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான். | லூக் 3:35 |
19 | ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். |
20 | ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான். | லூக் 3:35 |
21 | செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். |
22 | செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான். | யோசு 24:2 |
23 | நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். |
24 | நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான். | லூக் 3:34 |
25 | தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். |
26 | தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான். | ஆதி 12:4 ஆதி 12:5 ஆதி 22:20-24 ஆதி 29:4 ஆதி 29:5 யோசு 24:2 1நாளா 1:26 1நாளா 1:27 |
27 | தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான். | ஆதி 11:31 ஆதி 12:4 ஆதி 13:1-11 ஆதி 14:12 ஆதி 19:1-29 2பேது 2:7 |
28 | ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்குமுன்னே மரித்தான். | ஆதி 15:7 நெகே 9:7 அப் 7:2-4 |
29 | ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண் கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன். | ஆதி 17:15 ஆதி 20:12 |
30 | சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள். | ஆதி 15:2 ஆதி 15:3 ஆதி 16:1 ஆதி 16:2 ஆதி 18:11 ஆதி 18:12 ஆதி 21:1 ஆதி 21:2 ஆதி 25:21 ஆதி 29:31 ஆதி 30:1 ஆதி 30:2 நியா 13:2 1சாமு 1:2 சங் 113:9 லூக் 1:7 லூக் 1:36 |
31 | தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும், தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள். | ஆதி 11:26 ஆதி 11:27 ஆதி 12:1 |
32 | தேராகுடைய ஆயுசு நாட்கள் இருநூற்றைந்து வருஷம்; தேராகு ஆரானிலே மரித்தான். |