இணை வசன வேதாகமம்

எண்ணாகமம் 25

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.எண் 33:49 யோசு 2:1 யோசு 3:1 மீகா 6:5
2அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்; ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள்.யாத் 34:15 யாத் 34:16 யோசு 22:17 1இரா 11:1-8 சங் 106:28 ஓசி 9:10 1கொரி 10:20 1கொரி 10:27 1கொரி 10:28 2கொரி 6:16 2கொரி 6:17 வெளிப் 2:14
3இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.எண் 25:5 உபா 4:3 உபா 4:4 யோசு 22:17 சங் 106:28 சங் 106:29 ஓசி 9:10
4கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய உக்கிரமான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ ஜனங்களின் தலைவர் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரியனுக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதானத்தில் தூக்கிப்போடும்படி செய் என்றார்.எண் 25:14 எண் 25:15 எண் 25:18 யாத் 18:25 உபா 4:3 யோசு 22:17 யோசு 23:2
5அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்கள் மனிதரைக் கொன்றுபோடுங்கள் என்றான்.யாத் 18:21 யாத் 18:25 யாத் 18:26
6அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கையில், அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் ஒரு மீதியானிய ஸ்திரீயைத் தன் சகோதரரிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான்.எண் 25:14 எண் 25:15 எண் 22:4 எண் 31:2 எண் 31:9-16
7அதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன்கையிலே பிடித்து,யாத் 6:25 யோசு 22:30 யோசு 22:31 நியா 20:28
8இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை நின்றுபோயிற்று.எண் 25:5 எண் 25:11 சங் 106:29-31
9அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம்பேர்.எண் 25:4 எண் 25:5 எண் 16:49 எண் 16:50 உபா 4:3 உபா 4:4 1கொரி 10:8
10கர்த்தர் மோசேயை நோக்கி:
11நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர்மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்.யோசு 7:25 யோசு 7:26 2சாமு 21:14 சங் 106:23 யோவா 3:36
12ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன்.எண் 13:29 மல்கி 2:4 மல்கி 2:5 மல்கி 3:1
13அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.1சாமு 2:30 1இரா 2:27 1நாளா 6:4-15 1நாளா 6:50-53
14மீதியானிய ஸ்திரீயோடே குத்துண்டு செத்த இஸ்ரவேல் மனிதருடைய பேர் சிம்ரி; அவன் சல்லூவின் குமாரனும், சிமியோனியரின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவுமாயிருந்தான்.எண் 25:4 எண் 25:5 2நாளா 19:7
15குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பேர் கஸ்பி, அவள் சூரின் குமாரத்தி, அவன் மீதியானியருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான்.எண் 31:8 யோசு 13:21
16கர்த்தர் மோசேயை நோக்கி:
17மீதியானியரை நெருக்கி அவர்களை வெட்டிப்போடுங்கள்.எண் 31:2 வெளிப் 18:6
18பேயோரின் சங்கதியிலும் பேயோரின் நிமித்தம் வாதையுண்டான நாளிலே குத்துண்ட அவர்கள் சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய குமாரத்தியின் சங்கதியிலும், அவர்கள் உங்களுக்குச் செய்த சர்ப்பனைகளினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே என்றார்.எண் 31:15 எண் 31:16 ஆதி 26:10 யாத் 32:21 யாத் 32:35 வெளிப் 2:14

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.