இணை வசன வேதாகமம்

யாத்திராகமம் 24

                   
புத்தகங்களைக் காட்டு
1பின்பு அவர் மோசேயை நோக்கி: நீயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பரில் எழுபதுபேரும் கர்த்தரிடத்தில் ஏறிவந்து, தூரத்திலிருந்து பணிந்துகொள்ளுங்கள்.யாத் 24:15 யாத் 3:5 யாத் 19:9 யாத் 19:20 யாத் 19:24 யாத் 20:21 யாத் 34:2
2மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம்; அவர்கள் சமீபித்து வரலாகாது; ஜனங்கள் அவனோடேகூட ஏறிவரவேண்டாம் என்றார்.யாத் 24:13 யாத் 24:15 யாத் 24:18 யாத் 20:21 எண் 16:5 எரே 30:21 எரே 49:19 எபிரெ 9:24 எபிரெ 10:21 எபிரெ 10:22
3மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.யாத் 21:1-23 உபா 4:1 உபா 4:5 உபா 4:45 உபா 5:1 உபா 5:31 உபா 6:1 உபா 11:1
4மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்.உபா 31:9 யோசு 24:26
5இஸ்ரவேல் புத்திரரின் வாலிபரை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள்.யாத் 19:22
6அப்பொழுது மோசே அந்த இரத்தத்தில் பாதி எடுத்து, பாத்திரங்களில் வார்த்து, பாதி இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து,யாத் 24:8 யாத் 12:7 யாத் 12:22 கொலோ 1:20 எபிரெ 9:18 எபிரெ 12:24 1பேது 1:2 1பேது 1:19
7உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காது கேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.யாத் 24:4 எபிரெ 9:18-23
8அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான்.யாத் 24:6 லேவி 8:30 ஏசா 52:15 எசே 36:25 எபிரெ 9:18-21
9பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரின் எழுபதுபேரும் ஏறிப்போய்,
10இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது.யாத் 24:10 யாத் 3:6 யாத் 33:20 யாத் 33:23 ஆதி 32:30 நியா 13:21 நியா 13:22 1இரா 22:19 ஏசா 6:1-5 எசே 1:28 யோவா 1:18 யோவா 14:9 1தீமோ 6:16 1யோவா 4:12
11அவர் இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு புசித்துக் குடித்தார்கள்.யாத் 24:1 யாத் 24:9 எண் 21:18 நியா 5:13 1இரா 21:8 2நாளா 23:20 நெகே 2:16 எரே 14:3
12அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.யாத் 24:2 யாத் 24:15 யாத் 24:18
13அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடே எழுந்து போனான். மோசே தேவ பர்வதத்தில் ஏறிப்போகையில்,யாத் 17:9-14 யாத் 32:17 யாத் 33:11 எண் 11:28
14அவன் மூப்பரை நோக்கி: நாங்கள் உங்களிடத்தில் திரும்பிவருமட்டும், நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும் ஊரும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு யாதொரு காரியம் உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம் என்றான்.யாத் 32:1 ஆதி 22:5 1சாமு 10:8 1சாமு 13:8-13
15மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.யாத் 19:9 யாத் 19:16 2நாளா 6:1 மத் 17:5
16கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாள் அதை மூடியிருந்தது; ஏழாம்நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.யாத் 24:17 யாத் 16:10 லேவி 9:23 எண் 14:10 எண் 16:42 எசே 1:28 2கொரி 4:6
17மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.யாத் 3:2 யாத் 19:18 உபா 4:24 உபா 4:36 எசே 1:27 நாகூ 1:6 ஆபகூ 3:4 ஆபகூ 3:5 எபிரெ 12:18 எபிரெ 12:29
18மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.யாத் 24:17 யாத் 9:29 யாத் 9:33 யாத் 19:20 நீதி 28:1

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.