1 | ஒருவன் ஒரு மாட்டையாவது ஒரு ஆட்டையாவது திருடி, அதைக் கொன்றால், அல்லது அதை விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நாலு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கக்கடவன். | லேவி 6:1-6 எண் 5:7 2சாமு 12:6 நீதி 6:31 லூக் 19:8 |
2 | திருடன் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவன் நிமித்தம் இரத்தபழி சுமராது. | யோபு 24:14 யோபு 30:5 ஓசி 7:1 யோவே 2:9 மத் 6:19 மத் 6:20 மத் 24:43 1தெச 5:2 |
3 | சூரியன் அவன்மேல் உதித்திருந்ததானால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தால், தான் செய்த களவுக்காக விலைப்படக்கடவன். | யாத் 21:2 நியா 2:14 நியா 10:7 ஏசா 50:1 |
4 | அவன் திருடின மாடாவது கழுதையாவது ஆடாவது உயிருடனே அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இரட்டிப்பாய் அவன் கொடுக்கவேண்டும். | யாத் 21:16 |
5 | ஒருவன் பிறனுடைய வயலிலாவது திராட்சத்தோட்டத்திலாவது தன் மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன் சுயவயலிலும் திராட்சத்தோட்டத்திலுமுள்ள பலனில் உத்தமமானதை எடுத்து, பதில் செலுத்தக்கடவன். | யாத் 22:3 யாத் 22:12 யாத் 21:34 யோபு 20:18 |
6 | அக்கினி எழும்பி, முள்ளுக்களில் பற்றி, தானியப்போரையாவது, விளைந்த பயிரையாவது, வயலிலுள்ள வேறே எதையாவது எரித்துப்போட்டதேயானால், அக்கினியைக் கொளுத்தினவன் அக்கினிச் சேதத்திற்கு உத்தரவாதம்பண்ணவேண்டும். | நியா 15:4 நியா 15:5 2சாமு 14:30 2சாமு 14:31 |
7 | ஒருவன் பிறனுடைய வசத்தில் திரவியத்தையாவது, உடைமைகளையாவது அடைக்கலமாக வைத்திருக்கும்போது, அது அவன் வீட்டிலிருந்து திருடப்பட்டுப்போனால், திருடன் அகப்பட்டானாகில், அவன் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கவேண்டும். | நீதி 6:30 நீதி 6:31 எரே 2:26 யோவா 12:6 1கொரி 6:10 |
8 | திருடன் அகப்படாதேபோனால், அந்த வீட்டுக்காரன் தானே பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடத்தில் அவனைக் கொண்டுபோகவேண்டும். | யாத் 22:28 யாத் 21:6 உபா 16:18 உபா 19:17 உபா 19:18 1நாளா 23:4 சங் 82:1 |
9 | காணாமற்போன மாடு, கழுதை, ஆடு, வஸ்திரம் முதலியவைகளில் யாதொன்றைப் பிறனொருவன் தன்னுடையது என்று சொல்லி குற்றஞ்சாற்றினால், இருதிறத்தாருடைய வழக்கும் நியாயாதிபதிகளிடத்தில் வரக்கடவது; நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு இரட்டிப்பாகக் கொடுக்கக்கடவன். | எண் 5:6 எண் 5:7 1இரா 8:31 மத் 6:14 மத் 6:15 மத் 18:15 மத் 18:35 லூக் 17:3 லூக் 17:4 |
10 | ஒருவன் தன் கழுதையையாவது மாட்டையாவது ஆட்டையாவது மற்ற யாதொரு மிருகஜீவனையாவது பிறன் வசத்தில் விட்டிருக்கும்போது, அது செத்தாலும், சேதப்பட்டுப்போனாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும், | ஆதி 39:8 லூக் 12:48 லூக் 16:11 2தீமோ 1:12 |
11 | அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று கர்த்தர் பேரில் இடும் ஆணை அவர்கள் இருவருக்கும் நடுத்தீர்க்கக்கடவது; உடையவன் அதை அங்கிகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கவேண்டுவதில்லை. | லேவி 5:1 லேவி 6:3 1இரா 2:42 1இரா 2:43 நீதி 30:9 எபிரெ 6:16 |
12 | அது அவன் வசத்திலிருந்து திருடப்பட்டுப்போயிற்றானால், அவன் அதின் எஜமானுக்கு அதற்காக உத்தரவாதம்பண்ணக்கடவன். | யாத் 22:7 ஆதி 31:39 |
13 | அது பீறுண்டுபோயிற்றானால், அதற்குச் சாட்சியை ஒப்புவிக்கவேண்டும். பீறுண்டதற்காக அவன் உத்தரவாதம்பண்ணவேண்டுவதில்லை. | எசே 4:14 ஆமோ 3:12 மீகா 5:8 நாகூ 2:12 |
14 | ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும் இரவலாக வாங்கினதுண்டானால், அதற்கு உடையவன் கூட இராதபோது, அது சேதப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு உத்தரவாதம்பண்ணவேண்டும். | உபா 15:2 உபா 23:19 உபா 23:20 நெகே 5:4 சங் 37:21 மத் 5:42 லூக் 6:35 |
15 | அதற்கு உடையவன் கூட இருந்தானாகில், அவன் உத்தரவாதம்பண்ணவேண்டுவதில்லை; அது வாடகைக்கு வாங்கப்பட்டிருந்தால், அது அவன் வாடகைக்கு வந்த சேதம். | சகரி 8:10 |
16 | நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன். | ஆதி 34:2-4 உபா 22:28 உபா 22:29 |
17 | அவள் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்றானாகில், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும். | உபா 7:3 உபா 7:4 |
18 | சூனியக்காரியை உயிரோடே வைக்கவேண்டாம். | லேவி 19:26 லேவி 19:31 லேவி 20:6 லேவி 20:27 உபா 18:10 உபா 18:11 1சாமு 28:3 1சாமு 28:9 ஏசா 19:3 அப் 8:9-11 அப் 16:16-19 அப் 19:19 கலா 5:20 வெளிப் 22:15 |
19 | மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும். | லேவி 18:23 லேவி 18:25 லேவி 20:15 லேவி 20:16 உபா 27:21 |
20 | கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன். | எண் 25:2-4 எண் 25:7-4 எண் 25:8-4 உபா 13:1-15 உபா 17:2-5 உபா 18:20 |
21 | அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே. | யாத் 23:9 லேவி 19:33 லேவி 25:35 உபா 10:19 எரே 7:6 எரே 22:3 சகரி 7:10 மல்கி 3:5 |
22 | விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; | உபா 10:18 உபா 24:17 உபா 27:19 சங் 94:6 சங் 94:7 ஏசா 1:17 ஏசா 1:23 ஏசா 10:2 எசே 22:7 சகரி 7:10 யாக் 1:27 |
23 | அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு, | உபா 15:9 உபா 24:15 யோபு 31:38 யோபு 31:39 யோபு 35:9 லூக் 18:7 |
24 | கோபம்மூண்டவராகி, உங்களைப்பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள். | யோபு 31:23 சங் 69:24 சங் 76:7 சங் 90:11 நாகூ 1:6 ரோம 2:5-9 எபிரெ 10:31 |
25 | உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம். | லேவி 25:35-37 உபா 23:19 உபா 23:20 2இரா 4:1 2இரா 4:7 நெகே 5:2-5 நெகே 5:7-5 நெகே 5:10-5 நெகே 5:11-5 சங் 15:5 நீதி 28:8 எரே 15:10 எசே 18:8 எசே 18:17 மத் 25:27 லூக் 19:23 |
26 | பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால், பொழுதுபோகுமுன்னமே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிடுவாயாக. | உபா 24:6 உபா 24:10-13 உபா 24:17-13 யோபு 22:6 யோபு 24:3 யோபு 24:9 நீதி 20:16 நீதி 22:27 எசே 18:7 எசே 18:16 எசே 33:15 ஆமோ 2:8 |
27 | அவன் போர்வை அதுதானே, அதுவே அவன் தன் உடம்பை மூடிக்கொள்ளுகிற வஸ்திரம்; வேறு எதினாலே போர்த்துப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுக்குச் செவிகொடுப்பேன், நான் இரக்கமுள்ளவராயிருக்கிறேன். | யாத் 2:23 யாத் 2:24 சங் 34:6 சங் 72:12 ஏசா 19:20 |
28 | நியாயாதிபதிகளைத் தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக. | யாத் 22:8 யாத் 22:9 சங் 32:6 சங் 82:1-7 சங் 138:1 யோவா 10:34 யோவா 10:35 |
29 | முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக. | யாத் 23:16 யாத் 23:19 உபா 26:2-10 2இரா 4:42 2நாளா 31:5 நீதி 3:9 நீதி 3:10 எசே 20:40 மீகா 7:1 மத் 6:33 ரோம 8:23 யாக் 1:18 |
30 | உன் மாடுகளிலும் உன் ஆடுகளிலும் அப்படியே செய்வாயாக; குட்டியானது ஏழுநாள் தன் தாயோடே இருக்கட்டும்; எட்டாம் நாளிலே அதை எனக்குச் செலுத்துவாயாக. | உபா 15:19 |
31 | நீங்கள் எனக்குப் பரிசுத்த மனுஷராயிருக்கக்கடவீர்கள்; வெளியிலே பீறுண்ட மாம்சத்தைப் புசியாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள். | யாத் 19:5 யாத் 19:6 லேவி 11:45 லேவி 19:2 உபா 14:21 1பேது 1:15 1பேது 1:16 |