1 | தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன: | உபா 4:33 உபா 4:36 உபா 5:4 உபா 5:22 அப் 7:38 அப் 7:53 |
2 | உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. | ஆதி 17:7 ஆதி 17:8 லேவி 26:1 லேவி 26:13 உபா 5:6 உபா 6:4 உபா 6:5 2நாளா 28:5 சங் 50:7 சங் 81:10 எரே 31:1 எரே 31:33 ஓசி 13:4 ரோம 3:29 ரோம 10:12 |
3 | என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். | யாத் 15:11 உபா 5:7 உபா 6:5 உபா 6:14 யோசு 24:18-24 2இரா 17:29-35 சங் 29:2 சங் 73:25 சங் 81:9 ஏசா 26:4 ஏசா 43:10 ஏசா 44:8 ஏசா 45:21 ஏசா 45:22 ஏசா 46:9 எரே 25:6 எரே 35:15 மத் 4:10 1கொரி 8:4 1கொரி 8:6 எபே 5:5 பிலிப் 3:19 கொலோ 2:18 1யோவா 5:20 1யோவா 5:21 வெளிப் 19:10 வெளிப் 22:9 |
4 | மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; | யாத் 32:1 யாத் 32:8 யாத் 32:23 யாத் 34:17 லேவி 19:4 லேவி 26:1 உபா 4:15-19 உபா 4:23-25 உபா 5:8 உபா 27:15 1இரா 12:28 2நாளா 33:7 சங் 97:7 சங் 115:4-8 சங் 135:15-18 ஏசா 40:18-20 ஏசா 42:8 ஏசா 42:17 ஏசா 44:9-20 ஏசா 45:16 ஏசா 46:5-8 எரே 10:3-5 எரே 10:8-5 எரே 10:9-5 எரே 10:14-16 எசே 8:10 அப் 17:29 அப் 19:26-35 ரோம 1:23 வெளிப் 9:20 வெளிப் 13:14 வெளிப் 13:15 வெளிப் 14:9-11 வெளிப் 16:2 |
5 | நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். | யாத் 23:24 லேவி 26:1 யோசு 23:7 யோசு 23:16 நியா 2:19 2இரா 17:35 2இரா 17:41 2நாளா 25:14 ஏசா 44:15 ஏசா 44:19 மத் 4:9 |
6 | என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன். | உபா 4:37 உபா 5:29 உபா 7:9 எரே 32:39 எரே 32:40 அப் 2:39 ரோம 11:28 ரோம 11:29 |
7 | உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். | லேவி 19:12 லேவி 24:11-16 உபா 5:11 சங் 50:14-16 நீதி 30:9 எரே 4:2 மத் 5:33-37 மத் 23:16-22 மத் 26:63 மத் 26:64 2கொரி 1:23 எபிரெ 6:16 எபிரெ 6:17 யாக் 5:12 |
8 | ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; | யாத் 16:23-30 யாத் 31:13 யாத் 31:14 ஆதி 2:3 லேவி 19:3 லேவி 23:3 ஏசா 56:4-6 |
9 | ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; | யாத் 23:12 லூக் 13:14 |
10 | ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். | யாத் 31:13 யாத் 34:21 |
11 | கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். | யாத் 31:17 ஆதி 2:2 ஆதி 2:3 சங் 95:4-7 மாற் 2:27 மாற் 2:28 அப் 20:7 |
12 | உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. | யாத் 21:15 யாத் 21:17 லேவி 19:3 லேவி 19:32 1இரா 2:19 2இரா 2:12 நீதி 1:8 நீதி 1:9 நீதி 15:5 நீதி 20:20 நீதி 23:22-25 நீதி 28:24 நீதி 30:11 நீதி 30:17 மல்கி 1:6 மத் 15:4-6 லூக் 18:20 எபே 5:21 எபே 6:1-3 கொலோ 3:20 |
13 | கொலை செய்யாதிருப்பாயாக. | யாத் 21:14 யாத் 21:20 யாத் 21:29 ஆதி 4:8-23 ஆதி 9:5 ஆதி 9:6 லேவி 24:21 எண் 35:16-34 உபா 5:17 உபா 19:11-13 2சாமு 12:9 2சாமு 12:10 2இரா 21:16 2நாளா 24:22 சங் 10:8-11 நீதி 1:11 நீதி 1:18 ஏசா 26:21 எரே 26:15 மத் 5:21 மத் 5:22 அப் 28:4 ரோம 13:9 கலா 5:21 1தீமோ 1:9 யாக் 2:11 யாக் 2:13 1யோவா 3:12-15 |
14 | விபசாரம் செய்யாதிருப்பாயாக. | லேவி 18:20 லேவி 20:10 2சாமு 11:4 2சாமு 11:5 2சாமு 11:27 நீதி 2:15-18 நீதி 6:24-35 நீதி 7:18-27 எரே 5:8 எரே 5:9 எரே 29:22 எரே 29:23 மல்கி 3:5 மத் 5:27 மத் 5:28 மாற் 10:11 மாற் 10:12 ரோம 7:2 ரோம 7:3 எபே 5:3-5 எபிரெ 13:4 யாக் 4:4 வெளிப் 21:8 |
15 | களவு செய்யாதிருப்பாயாக. | யாத் 21:16 லேவி 6:1-7 லேவி 19:11 லேவி 19:13 லேவி 19:35-37 உபா 24:7 உபா 25:13-16 யோபு 20:19-22 நீதி 1:13-15 நீதி 11:1 ஆமோ 3:10 ஆமோ 8:4-6 மீகா 6:10 மீகா 6:11 மீகா 7:3 சகரி 5:3 சகரி 5:4 மத் 15:19 மத் 19:18 மத் 21:13 லூக் 3:13 லூக் 3:14 யோவா 12:6 1கொரி 6:10 எபே 4:28 1தெச 4:6 |
16 | பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. | யாத் 23:6 யாத் 23:7 லேவி 19:11 லேவி 19:16 உபா 19:15-21 1சாமு 22:8-19 1இரா 21:10-13 சங் 15:3 சங் 101:5-7 நீதி 10:18 நீதி 11:13 மத் 26:59 மத் 26:60 அப் 6:13 எபே 4:31 1தீமோ 1:10 2தீமோ 3:3 யாக் 4:11 |
17 | பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். | ஆதி 3:6 ஆதி 14:23 ஆதி 34:23 யோசு 7:21 1சாமு 15:19 சங் 10:3 சங் 119:36 பிரச 4:8 பிரச 5:10 பிரச 5:11 ஏசா 33:15 ஏசா 57:17 எரே 22:17 எசே 33:31 ஆமோ 2:6 ஆமோ 2:7 மீகா 2:2 ஆபகூ 2:9 லூக் 12:15 லூக் 16:14 அப் 20:33 ரோம 7:7 1கொரி 6:10 பிலிப் 3:19 கொலோ 3:5 1தீமோ 6:6-10 எபிரெ 13:5 |
18 | ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று, | யாத் 19:16-18 |
19 | மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள். | உபா 18:16 அப் 7:38 |
20 | மோசே ஜனங்களை நோக்கி; பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான். | 1சாமு 12:20 ஏசா 41:10 |
21 | ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான். | யாத் 19:16 யாத் 19:17 உபா 5:5 |
22 | அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடே பேசினேன் என்று கண்டீர்கள். | உபா 4:36 நெகே 9:13 எபிரெ 12:25 எபிரெ 12:26 |
23 | நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம். | யாத் 20:3-5 யாத் 32:1-4 1சாமு 5:4 1சாமு 5:5 2இரா 17:33 2இரா 17:41 எசே 20:39 எசே 43:8 தானி 5:4 தானி 5:23 செப் 1:5 1கொரி 10:21 1கொரி 10:22 2கொரி 6:14-16 கொலோ 2:18 கொலோ 2:19 1யோவா 5:20 1யோவா 5:21 வெளிப் 22:15 |
24 | மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். | யோவா 4:24 |
25 | எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமாகில், அதை வெட்டின கல்லுகளால் கட்டவேண்டாம்; அதின்மேல் உளியிட்டவுடனே, அதை அசுசிப்படுத்துவாய். | உபா 27:5 உபா 27:6 யோசு 8:31 |
26 | என் பலிபீடத்தின்மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம். | லேவி 10:3 சங் 89:7 பிரச 5:1 எபிரெ 12:28 எபிரெ 12:29 1பேது 1:16 |