இணை வசன வேதாகமம்

சங்கீதம் 20

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆபத்துநாளிலே கர்த்தர் உமது விண்ணப்பத்துக்குப் பதிலருளுவாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.சங் 41:1 சங் 46:1 சங் 50:5 சங் 60:11 சங் 91:15 சங் 138:7 எரே 30:7 மத் 26:38 மத் 26:39 எபிரெ 5:7
2அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.சங் 73:17 1இரா 6:16 1இரா 8:44 1இரா 8:45 2நாளா 20:8 2நாளா 20:9
3நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா)ஆதி 4:4 ஏசா 60:7 எபே 5:2 1பேது 2:5
4அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.சங் 21:2 சங் 37:4 சங் 145:19 நீதி 11:23 மத் 21:22 யோவா 11:42 யோவா 16:23 ரோம 8:27 ரோம 8:28 1யோவா 5:14 1யோவா 5:15
5நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.சங் 13:5 சங் 19:4 சங் 21:1 சங் 35:9 சங் 118:15 ஏசா 12:1-3 ஏசா 25:9 ஏசா 61:10 ஆபகூ 3:18 லூக் 1:47
6கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய விண்ணபத்துக்கு பதில்ருளுவார்.சங் 2:2 சங் 18:50 சங் 28:8 சங் 89:20-23 அப் 2:36 அப் 4:10
7சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.சங் 33:16 சங் 33:17 1சாமு 13:5 2சாமு 8:4 2சாமு 10:18 நீதி 21:31 ஏசா 30:16 ஏசா 31:1 எரே 17:5
8அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.சங் 34:21 சங் 34:22 நியா 5:31
9கர்த்தாவே, இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.சங் 118:25 சங் 118:26 மத் 21:9 மத் 21:15

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.