இணை வசன வேதாகமம்

ஆதியாகமம் 7

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.ஆதி 7:7 ஆதி 7:13 யோபு 5:19-24 சங் 91:1-10 நீதி 14:26 நீதி 18:10 ஏசா 26:20 ஏசா 26:21 எசே 9:4-6 செப் 2:3 மத் 24:37-39 லூக் 17:26 அப் 2:39 எபிரெ 11:7 1பேது 3:20 2பேது 2:5
2பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமில்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும்,ஆதி 7:8 ஆதி 6:19-21 ஆதி 8:20 லேவி 11:1-47 உபா 14:1-21 அப் 10:11-15
3ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.
4இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடிக்கு நிக்கிரகம்பண்ணுவேன் என்றார்.ஆதி 7:10 ஆதி 2:5 ஆதி 6:3 ஆதி 8:10 ஆதி 8:12 ஆதி 29:27 ஆதி 29:28 யோபு 28:25 யோபு 36:27-32 யோபு 37:11 யோபு 37:12 ஆமோ 4:7
5நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.ஆதி 6:22 யாத் 39:32 யாத் 39:42 யாத் 39:43 யாத் 40:16 சங் 119:6 மத் 3:15 லூக் 8:21 யோவா 2:5 யோவா 8:28 யோவா 8:29 யோவா 13:17 பிலிப் 2:8 எபிரெ 5:8
6ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான்.ஆதி 5:32 ஆதி 8:13
7ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள்.ஆதி 7:1 ஆதி 7:13-15 ஆதி 6:18 நீதி 22:3 மத் 24:38 லூக் 17:27 எபிரெ 6:18 எபிரெ 11:7 1பேது 3:20 2பேது 2:5
8தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமல்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும்,
9ஆணும் பெண்ணும் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன.ஆதி 7:16 ஆதி 2:19 ஏசா 11:6-9 ஏசா 65:25 எரே 8:7 அப் 10:11 அப் 10:12 கலா 3:28 கொலோ 3:11
10ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று.ஆதி 7:4 ஆதி 7:17-20 ஆதி 6:17 யோபு 22:16 மத் 24:38 மத் 24:39 லூக் 17:27
11நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.ஆதி 1:7 ஆதி 6:17 ஆதி 8:2 யோபு 28:4 யோபு 38:8-11 சங் 33:7 சங் 74:15 நீதி 8:28 நீதி 8:29 ஏசா 24:19 எரே 5:22 எரே 51:16 எசே 26:19 ஆமோ 9:5 ஆமோ 9:6 மத் 24:38 1தெச 5:3
12நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.ஆதி 7:4 ஆதி 7:17 யாத் 24:18 உபா 9:9 உபா 9:18 உபா 10:10 1இரா 19:8 மத் 4:2
13அன்றைத்தினமே நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள் பிரவேசித்தார்கள்.ஆதி 7:1 ஆதி 7:7-9 ஆதி 6:18 எபிரெ 11:7 1பேது 3:20 2பேது 2:5
14அவர்களோடு ஜாதிஜாதியான சகலவிதக் காட்டு மிருகங்களும், ஜாதிஜாதியான சகலவித நாட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற ஜாதிஜாதியான சகலவித ஊரும் பிராணிகளும், ஜாதிஜாதியான சகலவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள சகலவிதப் பட்சிகளும் பிரவேசித்தன.ஆதி 7:2 ஆதி 7:3 ஆதி 7:8 ஆதி 7:9
15இப்படியே ஜீவசுவாசமுள்ள மாம்ச ஜந்துக்களெல்லாம் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குள் பிரவேசித்தன.ஆதி 6:20 ஏசா 11:6
16தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்.ஆதி 7:2 ஆதி 7:3
17ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது.ஆதி 7:4 ஆதி 7:12
18ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானது ஜலத்தின்மேல் மிதந்துகொண்டிருந்தது.யாத் 14:28 யோபு 22:16 சங் 69:15
19ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.யோபு 12:15 சங் 46:2 சங் 46:3 சங் 104:6-9 எரே 3:23 2பேது 3:6
20மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று.சங் 104:6 எரே 3:23
21அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டு மிருகங்களும், காட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன.ஆதி 7:4 ஆதி 6:6 ஆதி 6:7 ஆதி 6:13 ஆதி 6:17 யோபு 22:15-17 ஏசா 24:6 ஏசா 24:19 எரே 4:22-27 எரே 12:3 எரே 12:4 ஓசி 4:3 யோவே 1:17-20 யோவே 2:3 செப் 1:3 மத் 24:39 லூக் 17:27 ரோம 8:20 ரோம 8:22 2பேது 2:5
22வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின.ஆதி 2:7 ஆதி 6:17
23மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.ஆதி 7:21 ஆதி 7:22 யோபு 22:15-17 ஏசா 24:1-8 மத் 24:37-39 லூக் 17:26 லூக் 17:27 1பேது 3:20 2பேது 2:5
24ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.ஆதி 8:3 ஆதி 8:4

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.