1 | மனுஷர் பூமியின்மேல் பெருகத்துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது: | ஆதி 1:28 |
2 | தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். | ஆதி 4:26 யாத் 4:22 யாத் 4:23 உபா 14:1 சங் 82:6 சங் 82:7 ஏசா 63:16 மல்கி 2:11 யோவா 8:41 யோவா 8:42 ரோம 9:7 ரோம 9:8 2கொரி 6:18 |
3 | அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். | எண் 11:17 நெகே 9:30 ஏசா 5:4 ஏசா 63:10 எரே 11:7 எரே 11:11 அப் 7:51 கலா 5:16 கலா 5:17 1தெச 5:19 1பேது 3:18-20 யூதா 1:14 யூதா 1:15 |
4 | அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். | எண் 13:33 உபா 2:20 உபா 2:21 உபா 3:11 1சாமு 17:4 2சாமு 21:15-22 |
5 | மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, | ஆதி 13:13 ஆதி 18:20 ஆதி 18:21 சங் 14:1-4 சங் 53:2 ரோம 1:28-31 ரோம 3:9-19 |
6 | தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. | யாத் 32:14 எண் 23:19 உபா 32:36 1சாமு 15:11 1சாமு 15:29 2சாமு 24:16 1நாளா 21:15 சங் 106:45 சங் 110:4 எரே 18:8-10 எரே 26:19 ஓசி 11:8 யோனா 3:10 மல்கி 3:6 ரோம 11:29 எபிரெ 6:17 எபிரெ 6:18 யாக் 1:17 |
7 | அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார். | சங் 24:1 சங் 24:2 சங் 37:20 நீதி 10:27 நீதி 16:4 |
8 | நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. | ஆதி 19:19 யாத் 33:12-17 சங் 84:11 சங் 145:20 நீதி 3:4 நீதி 8:35 நீதி 12:2 எரே 31:2 லூக் 1:30 அப் 7:46 ரோம 4:4 ரோம 11:6 1கொரி 15:10 கலா 1:15 2தீமோ 1:18 தீத் 2:11 தீத் 3:7 எபிரெ 4:16 2பேது 2:5 |
9 | நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். | ஆதி 2:4 ஆதி 5:1 ஆதி 10:1 |
10 | நோவா சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான். | ஆதி 5:32 |
11 | பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. | ஆதி 7:1 ஆதி 10:9 ஆதி 13:13 2நாளா 34:27 லூக் 1:6 ரோம 2:13 ரோம 3:19 |
12 | தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். | ஆதி 6:8 ஆதி 18:21 யோபு 33:27 சங் 14:2 சங் 33:13 சங் 33:14 சங் 53:2 சங் 53:3 நீதி 15:3 |
13 | அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன். | எரே 51:13 எசே 7:2-6 ஆமோ 8:2 1பேது 4:7 |
14 | நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல்பூசு. | மத் 24:38 லூக் 17:27 1பேது 3:20 |
15 | நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும். | ஆதி 7:20 உபா 3:11 |
16 | நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத் தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும். | ஆதி 8:6 2சாமு 6:16 2இரா 9:30 |
17 | வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்ச ஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம். | ஆதி 6:13 ஆதி 7:4 ஆதி 7:21-23 ஆதி 9:9 யாத் 14:17 லேவி 26:28 உபா 32:39 சங் 29:10 ஏசா 51:12 எசே 5:8 எசே 6:3 எசே 34:11 எசே 34:20 ஓசி 5:14 2பேது 2:5 |
18 | ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள். | ஆதி 9:9 ஆதி 9:11 ஆதி 17:4 ஆதி 17:7 ஆதி 17:21 |
19 | சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள். | ஆதி 7:2 ஆதி 7:3 ஆதி 7:8 ஆதி 7:9 ஆதி 7:15 ஆதி 7:16 ஆதி 8:17 சங் 36:6 |
20 | ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது. | ஆதி 1:20-24 அப் 10:11 அப் 10:12 |
21 | உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார். | ஆதி 1:29 ஆதி 1:30 யோபு 38:41 யோபு 40:20 சங் 35:6 சங் 104:27 சங் 104:28 சங் 136:25 சங் 145:16 சங் 147:9 மத் 6:26 |
22 | நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான். | ஆதி 7:5 ஆதி 7:9 ஆதி 7:16 ஆதி 17:23 யாத் 40:16 யாத் 40:19 யாத் 40:21 யாத் 40:23 யாத் 40:25 யாத் 40:27 யாத் 40:32 உபா 12:32 மத் 7:24-27 யோவா 2:5 யோவா 15:14 எபிரெ 11:7 எபிரெ 11:8 1யோவா 5:3 1யோவா 5:4 |