இணை வசன வேதாகமம்

ஆதியாகமம் 13

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்.ஆதி 12:9-20 ஆதி 20:1 ஆதி 21:33 யோசு 10:40 யோசு 18:5 1சாமு 27:10 2சாமு 24:7
2ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான்.ஆதி 24:35 ஆதி 26:12 ஆதி 26:13 உபா 8:18 1சாமு 2:7 யோபு 1:3 யோபு 1:10 யோபு 22:21-25 சங் 112:1-3 நீதி 3:9 நீதி 3:10 நீதி 10:22 மத் 6:33 1தீமோ 4:8
3அவன் தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து பெத்தேல்மட்டும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும்,ஆதி 12:6 ஆதி 12:8 ஆதி 12:9
4தான் முதல்முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.ஆதி 13:18 ஆதி 12:7 ஆதி 12:8 ஆதி 35:1-3 சங் 26:8 சங் 42:1 சங் 42:2 சங் 84:1 சங் 84:2 சங் 84:10
5ஆபிராமுடனே வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன.ஆதி 4:20 ஆதி 25:27 எரே 49:29
6அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக்கூடாதிருந்தது; அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண ஏதுவில்லாமற்போயிற்று.ஆதி 36:6 ஆதி 36:7 பிரச 5:10 பிரச 5:11 லூக் 12:17 லூக் 12:18 1தீமோ 6:9
7ஆபிராமுடைய மந்தைமேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தைமேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள்.ஆதி 21:25 ஆதி 26:20 யாத் 2:17 1கொரி 3:3 கலா 5:20 தீத் 3:3 யாக் 3:16 யாக் 4:1
8ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்.நீதி 15:1 மத் 5:9 1கொரி 6:6 1கொரி 6:7 பிலிப் 2:14 எபிரெ 12:14 யாக் 3:17 யாக் 3:18
9இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.ஆதி 20:15 ஆதி 34:10
10அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.ஆதி 3:6 ஆதி 6:2 எண் 32:1-42 1யோவா 2:15 1யோவா 2:16
11அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப்போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள்.ஆதி 19:17
12ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்.ஆதி 19:29
13சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகாபாவிகளுமாய் இருந்தார்கள்.ஆதி 15:16 ஆதி 18:20 ஆதி 19:4-11 1சாமு 15:18 ஏசா 1:9 ஏசா 3:9 எசே 16:46-50 மத் 9:10 மத் 9:13 மத் 11:23 மத் 11:24 யோவா 9:24 யோவா 9:31 ரோம 1:27 2பேது 2:6-8 2பேது 2:10-8 யூதா 1:7
14லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.ஆதி 13:10 ஏசா 49:18 ஏசா 60:4
15நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,ஆதி 12:7 ஆதி 15:18 ஆதி 17:7 ஆதி 17:8 ஆதி 18:18 ஆதி 24:7 ஆதி 26:3 ஆதி 26:4 ஆதி 28:4 ஆதி 28:13 ஆதி 35:12 ஆதி 48:4 யாத் 33:1 எண் 34:2 எண் 34:12-29 உபா 26:2-4 உபா 34:4 2நாளா 20:7 நெகே 9:7 நெகே 9:8 சங் 37:22 சங் 37:29 சங் 105:9-12 சங் 112:1 சங் 112:2 ஏசா 63:18 மத் 5:5 அப் 7:5
16உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.ஆதி 12:2 ஆதி 12:3 ஆதி 15:5 ஆதி 17:6 ஆதி 17:16 ஆதி 17:20 ஆதி 18:18 ஆதி 21:13 ஆதி 22:17 ஆதி 25:1-34 ஆதி 26:4 ஆதி 28:3 ஆதி 28:14 ஆதி 32:12 ஆதி 35:11 ஆதி 36:1-43 ஆதி 46:3 யாத் 1:7 யாத் 32:13 எண் 23:10 உபா 1:10 நியா 6:3 நியா 6:5 1இரா 3:8 1இரா 4:20 1நாளா 21:5 1நாளா 27:23 2நாளா 17:14-18 ஏசா 48:18 ஏசா 48:19 எரே 33:22 ரோம 4:16-18 எபிரெ 11:12 வெளிப் 7:9
17நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார்.
18அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.ஆதி 14:13 ஆதி 18:1

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.