1 | லேவியரின் முதுபெரும் தலைவர்கள், குரு எலயாசரையும் நூனின் மகன் யோசுவாவையும், இஸ்ரயேல் மக்கள் குலங்களின் முதுபெரும் தலைவர்களையும் அணுகி, |
2 | கானான் நாட்டில் சீலோவில் கூறியது:”நாங்கள் வாழ நகர்களையும், எங்கள் கால்நடைகள் மேய நிலங்களையும் கொடுக்கும்படி ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டார்.” |
3 | இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் கட்டளைப்படி தங்கள் பங்கிலிருந்து லேவியருக்குப் பின்வருமாறு நகர்களையும் நிலங்களையும் கொடுத்தனர். |
4 | கோகாத்தியரின் குடும்பங்களுக்காகச் சீட்டுப் போட்டனர்.லேவியருள் குரு ஆரோனின் மக்களுக்கு, யூதா குலத்திலிருந்தும் சிமியோன் குலத்திலிருந்தும் பென்யமின் குலத்திலிருந்தும் பதின்மூன்று நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கிடைத்தன. |
5 | கோகாத்தியரில் ஏனைய மக்களுக்கு, எப்ராயிம் குலத்தின் குடும்பத்திலிருந்தும், தாண் குலத்திலிருந்தும் மனாசேயின் பாதிக் குலத்திலிருந்தும் பத்து நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கிடைத்தன. |
6 | கேர்சோன் மக்களுக்கு இசக்கார் குலத்தின் குடும்பங்களிலிருந்தும், ஆசேர் குலத்திலிருந்தும், நப்தலி குலத்திலிருந்தும், பாசானிலிருந்த மனாசேயின் பாதிக் குலத்திலிருந்தும் பதின்மூன்று நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கிடைத்தன. |
7 | மெராரியின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களுக்கேற்ப ரூபன் குலத்திலிருந்தும், காத்துக் குலத்திலிருந்தும், செபுலோன் குலத்திலிருந்தும் பன்னிரு நகர்கள் கிடைத்தன. |
8 | ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டபடி, சீட்டுப் போட்டு, இஸ்ரயேல் மக்கள் லேவியருக்கு இந்நகர்களையும் மேய்ச்சல் நிலங்களையும் அளித்தனர். |
9 | யூதா மக்களின் குலத்திலிருந்தும் சிமியோன் மக்களின் குலத்திலிருந்தும் கொடுக்கப்பட்ட நகர்களின் பெயர்ப்பட்டியல்: |
10 | லேவியரின் மக்கள் கோகாத்தியரின் குடும்பத்தைச் சார்ந்த ஆரோனின் மக்களுக்கு முதல் சீட்டு விழுந்ததால் அவர்களுக்குப் பின்வருமாறு நகர்கள் கிடைத்தன. |
11 | யூதா மலைநாட்டில் உள்ள எபிரோன் என்னும் கிரியத்து அர்பாவைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலம் அவர்களுக்குக் கிடைத்தது.அர்பா ஆனாக்கின் தந்தை. |
12 | நகரின் விளைநிலமும் அதன் சிற்றூர்களும் எபுன்னேயின் மகன் காலேபுக்கு உடைமையாகக் கிடைத்தன. |
13 | குரு ஆரோனின் மக்களுக்குக் கிடைத்தவை: கொலையாளியின் அடைக்கல நகரான எபிரோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்: லிப்னா, அதன் மேய்ச்சல் நிலங்கள்: |
14 | யாத்திர், அதன் மேய்ச்சல் நிலம்: எசுத்தமோவா, அதன் மேய்ச்சல் நிலம்: |
15 | கோலோன், அதன் மேய்ச்சல் நிலம்: தெபீர், அதன் மேய்ச்சல் நிலம்: |
16 | அயின், அதன் மேய்ச்சல் நிலம்: யுற்றா, அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, இவ்விரு குலங்களினின்று ஒன்பது நகர்கள். |
17 | பென்யமின் குலத்திலிருந்து கொடுக்கப்பட்டவை: கிபயோன், அதன் மேய்ச்சல் நிலம்: கேபா, அதன் மேய்ச்சல் நிலம்: |
18 | அனத்தோத்து, அதன் மேய்ச்சல் நிலம்: அல்மோன், அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, நான்கு நகர்கள். |
19 | குரு ஆரோனின் மக்களுக்குக் கிடைத்தவை மொத்தம் பதின் மூன்று நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும். |
20 | லேவியரைச் சார்ந்த கோகாத்தின் ஏனைய குடும்பங்களுக்கு எப்ராயிம் குலத்தின் உடைமைகளிலிருந்து நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கொடுக்கப்பட்டன. |
21 | அவர்களுக்குக் கிடைத்தவை: கொலையாளியின் அடைக்கல நகரான எப்ராயிம்: மலையில் அமைந்துள்ள செக்கெம் நகர், அதன் மேய்ச்சல் நிலம்: |
22 | கிபட்சயிம், அதன் மேய்ச்சல் நிலம், பெத்கோரோன், அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, நான்கு நகர்கள். |
23 | தாணின் குலத்திலிருந்து கிடைத்தவை: எல்தக்கே, அதன் மேய்ச்சல் நிலம்: கிபத்தோன், அதன் மேய்ச்சல் நிலம்: |
24 | அய்யலோன், அதன் மேய்ச்சல் நிலம்: கத்ரிம்மோன், அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, நான்கு நகர்கள். |
25 | மனாசேயின் பாதிக் குலத்திலிருந்து கிடைத்தவை: தானாக்கு, அதன் மேய்ச்சல் நிலம்: கத்ரிம்மோன், அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, இரண்டு நகர்கள். |
26 | இவ்வாறு கோகாத்தின் எஞ்சிய குடும்பங்களுக்குப் பத்து நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் அளிக்கப்பட்டன. |
27 | லேவியரின் குடும்பத்தைச் சார்ந்த கேர்சோனின் குடும்பங்களுக்கு மனாசேயின் பாதிக் குலத்திலிருந்து கிடைத்தவை: கொலையாளியின் அடைக்கல நகரான பாசானில் கோலான், அதன் மேய்ச்சல் நிலம்: பெயசுதரா, அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, இரண்டு நகர்கள். |
28 | இசக்காரின் குலத்திலிருந்து கிடைத்தவை: கிசியோன், அதன் மேய்ச்சல் நிலம்: தாபராத்து, அதன் மேய்ச்சல் நிலம்: |
29 | யார்முத்து, அதன் மேய்ச்சல் நிலம்: ஏன்கன்னிம், அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, நான்கு நகர்கள். |
30 | ஆசேரின் குலத்திலிருந்து கிடைத்தவை: மிசால், அதன் மேய்ச்சல் நிலம்: |
31 | எல்காத்து, அதன் மேய்ச்சல் நிலம்: இரகோபு, அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, நான்கு நகர்கள். |
32 | நப்தலி குலத்திலிருந்து கிடைத்தவை: கொலையாளியின் அடைக்கல நகரான கலிலேயாவின் கெதேசு, அதன் மேய்ச்சல் நிலம்: அம்மோத்தோர், அதன் மேய்ச்சல் நிலம்: காத்தான், அதன் மேய்ச்சல் நிலம்: ஆக மூன்று நகர்கள். |
33 | இவ்வாறு கேர்சோனின் குடும்பங்களுக்குக் கிடைத்தவை இப் பதின்மூன்று நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும். |
34 | எஞ்சிய லேவியருள் மெராரி மக்களின் குடும்பத்தினருக்கு செபுலோன் குலத்திலிருந்து கிடைத்தவை: யோக்னயாம், அதன் மேய்ச்சல் நிலம்: கர்த்தா, அதன் மேய்ச்சல் நிலம். |
35 | திம்னா, அதன் மேய்ச்சல் நிலம்: நகலால், அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, நான்கு நகர்கள். |
36 | ரூபன் குலத்திலிருந்து கிடைத்தவை: பெட்சேர், அதன் மேய்ச்சல் நிலம்: யாகசு, அதன் மேய்ச்சல் நிலம்: |
37 | கெதமோத்து, அதன் மேய்ச்சல் நிலம்: மேபாத்து, அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, நான்கு நகர்கள். |
38 | காத்துக் குலத்திலிருந்து கிடைத்தவை: கொலையாளியின் அடைக்கல நகரான கிலயாத்து ராமோத்து, அதன் மேய்ச்சல் நிலம்: மகனயிம், அதன் மேய்ச்சல் நிலம்: |
39 | எஸ்போன், அதன் மேய்ச்சல் நிலம்: யாசேர், அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, நான்கு நகர்கள். |
40 | இவ்வாறு எஞ்சிய லேவியருள் மெராரி குடும்பங்களுக்குச் சீட்டு விழுந்ததன்படி கிடைத்த மொத்த நகர்கள் பன்னிரண்டு. |
41 | இஸ்ரயேல் மக்களுக்குரிய நிலப்பகுதியில் லேவியருக்கு ஆங்காங்கே விடப்பட்டவை நாற்பத்தெட்டு நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும். |
42 | எல்லா நகர்களைச் சுற்றிலும் மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. |
43 | இவ்வாறு ஆண்டவர் அவர்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக வாக்களித்த நாடு முழுவதையும் இஸ்ரயேலுக்குக் கொடுத்தார்.அவர்கள் அதனை உடைமையாக்கிக் கொண்டு அதில் வாழ்ந்தார்கள். |
44 | அவர்கள் மூதாதையருக்கு வாக்களித்தபடி ஆண்டவர் அவர்களுக்கு நாட்டின் எல்லை எங்கும் அமைதி நிலவச் செய்தார்.பகைவர்களில் எவனாலும் அவர்களை எதிர்த்து நிற்க இயலவில்லை.கடவுள் அவர்களுடைய பகைவர்களை அவர்கள் கையில் ஒப்படைத்தார். |
45 | ஆண்டவர் இஸ்ரயேல் வீட்டாருக்கு உரைத்த எல்லா நல்வாக்குகளும் தவறாமல் நிறைவேறின. |