1 | ஆண்டவர் மோசேயிடம் கூறியது: |
2 | “நீ இஸ்ரயேல் மக்களுக்குக் கூறவேண்டியது: நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவர். |
3 | நீங்கள் குடியிருந்த எகிப்து நாட்டின் வழக்கப்படி செய்ய வேண்டாம்: நான் உங்களை அழைத்துச் செல்லும் கானான் நாட்டின் வழக்கப்படியும் செய்ய வேண்டாம்.அவர்கள் முறைமையும் வேண்டாம். |
4 | நியமங்களை ஏற்று, என் ஆணைகளுக்குப் பணிந்து நடங்கள், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! |
5 | எனவே நன் நியமங்களையும் ஆணைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.அவற்றிற்கேற்பச் செயல்படுவோர் அவற்றால் வாழ்வு பெறுவார்.நானே ஆண்டவர்! |
6 | உங்களுள் எவரும் தமக்கு இரத்த உறவாயிருக்கும் எந்தப் பெண்ணோடும் உடலுறவு கொள்ள வேண்டாம்: நானே ஆண்டவர்! |
7 | தந்தையின் வெற்றுடம்பாகிய உன் தாயின் வெற்றுடம்பைப் பாராதே! ஏனெனில் அவள் உன் தாய்: உன் தாயை வெற்றுடம்பாக்காதே! |
8 | தந்தையின் மற்ற மனைவியரை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவர்கள் உன் தந்தையின் உடல் ஆவர்! |
9 | தந்தைக்கோ, தாய்க்கோ வீட்டிலோ வெளியிலோ பிறந்த மகளான உன் சகோதரியை வெற்றுடம்பாக்காதே! |
10 | ஏனெனில், அவர்கள் உன் வெற்றுடம்பு ஆவர். |
11 | தந்தைக்கு அவனுடைய மனைவியிடம் பிறந்த மகளை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உனக்கு சகோதரி. |
12 | தந்தையின் சகோதரியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் தந்தையின் உடல். |
13 | தாயின் சகோதரியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் தாயின் உடல். |
14 | தந்தையின் சகோதரனை வெற்றுடம்பாக்காதே! அவன் மனைவியோடு உடலுறவு கொள்ள வேண்டாம்: ஏனெனில் அவள் உன் சிற்றன்னை. |
15 | மருமகளை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில் அவள் உன் மகனின் மனைவி: அவளை வெற்றுடம்பாக்காதே! |
16 | சகோதரனின் மனைவியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில் அவள் உன் சகோதரனின் வெற்றுடம்பு. |
17 | ஒரு பெண்ணையும் அவள் மகளையும் வெற்றுடம்பாக்காதே! அவள் மகனின் மகளையோ அவள் மகளின் மகளையோ மணம் புரியாதே.இவர்கள் அவளின் நெருங்கிய இரத்த உறவினர்.அது முறைகேடு |
18 | மனைவி உயிருடனிருக்க, அவளுக்குச் சகக் கிழத்தியாக, அவள் சகோதரியை மணம் புரிந்து உடலுறவு கொள்ளாதே! |
19 | மனைவி மாதவிலக்கில் இருக்கும்போது, அவளை வெற்றுடம்பாக்காதே! |
20 | உனக்கு அடுத்திருப்பவனின் மனைவியுடன் இன்பக்கலவி கொண்டு உன்னைத் தீட்டாக்கிக் கொள்ளாதே. |
21 | பிள்ளைகளுள் யாரையேனும் மோலேக்கிற்கு எரிபலியாக்கி, உன் கடவுளின் திருப்பெயரை இழிவு படுத்தாதே.நானே ஆண்டவர்! |
22 | பெண்ணுடன் பாலுறவு கொள்வதுபோல் ஆணோடு கொள்ளாதே! அது அருவருப்பு. |
23 | எந்த விலங்கோடும் பாலுறவு கொண்டு உன்னைத் தீட்டாக்கிக் கொள்ளாதே! எந்தப் பெண்ணும் விலங்கோடு பாலுறவு கொள்ள வேண்டாம்.அது முறைகேடான அருவருப்பு. |
24 | இவற்றில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டாக்கிக் கொள்ள வேண்டாம்.ஏனெனில், நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட வேற்றினத்தவர்.இவற்றால் தீட்டானதால் நாடே தீட்டாகிவிட்டது. |
25 | இவ்வாறு நாடு தீட்டுப்பட்டதால் நான் அதன் குற்றங்களுக்காகத் தண்டனை வழங்கினேன்.நாடும் அவர்களை வெளியே கக்கியது. |
26 | நீங்கள் என் கட்டளைகளையும் நியமனங்களையும் கடைப்பிடியுங்கள்.குடிமக்களாயினும் உங்களோடு தங்கும் அன்னியராயினும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்ய வேண்டாம். |
27 | ஏனெனில் இந்த அருவருப்பானவற்றை உங்கள் முன் அந்த நாடுகளில் இருந்தவர்கள் செய்ததனால் நாடு தீட்டாயிற்று. |
28 | உங்களுக்குமுன் இருந்தோரை நாடு வெளியே கக்கிவிட்டது போல, நீங்கள் தீட்டாக்கினால் கக்கப்படுவீர்கள். |
29 | ஏனெனில் யாராவது இவ்வகை அருவருப்புகளில் எதையேனும் செய்தால் அவன் தன் இனத்தில் இராதபடி அழிந்து போவான். |
30 | எனவே, உங்கள் முன்னோர் இத்தகைய அருவருப்புகளைச் செய்ததுபோல, நீங்களும் செய்து, அவற்றால் தீட்டுப்படாதபடி, என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள்.நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! |