1 | இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய இரண்டாம் ஆண்டு, இரண்டாம் மாதம், முதல் நாளன்று, சீனாய்ப் பாலைநிலத்தில் சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் மோசேயுடன் பேசினார்.அவர் கூறியது: |
2 | இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள ஆண்கள் அனைவரையும் அவர்கள் குடம்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி தலைக்கட்டு வாரியாகக் கணக்கெடுங்கள். |
3 | இஸ்ரயேலில் இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குச் செல்லத்தக்க அனைவரையும் அணி அணியாக நீயும், ஆரோனும் எண்ணுங்கள். |
4 | ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவன் உங்களோடிருப்பான்: அவன் தன் மூதாதையரின் வீட்டுத் தலைவனாக இருக்க வேண்டும். |
5 | உங்களுக்குத் துணை நிற்க வேண்டியவர்களின் பெயர்களாவன: ரூபன் குலத்திலிருந்து எலிட்சூர்: இவன் செதேயூர் மகன்: |
6 | சிமியோன் குலத்திலிருந்து செலுமியேல்: இவன் சுரிசத்தாய் மகன்: |
7 | யூதா குலத்திலிருந்து நகுசோன்: இவன் அம்மினதாபின் மகன்: |
8 | இசக்கார் குலத்திலிருந்து நெத்தனியேல்: இவன் சூவார் மகன்: |
9 | செபுலோன் குலத்திலிருந்து எலியாபு: இவன் கேலோன் மகன்: |
10 | யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் குலத்திலிருந்து எலிசாமா: இவன் அம்மிகூதின் மகன்: மனாசே குலத்திலிருந்து கமாலியேல்: இவன் பெதாசூரின் மகன்: |
11 | பென்யமின் குலத்திலிருந்து அபிதான்: இவன் கிதயோனின் மகன்: |
12 | தாண் குலத்திலிருந்து அகியசேர்: இவன் அம்மிசத்தாயின் மகன்: |
13 | ஆசேர் குலத்திலிருந்து பகியேல்: இவன் ஒக்ரானின் மகன்: |
14 | காத்து குலத்திலிருந்து எல்யாசாபு: இவன் தெகுவேலின் மகன்: |
15 | நப்தலி குலத்திலிருந்து அகிரா: இவன் ஏனானின் மகன்: |
16 | மக்கள் கூட்டமைப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்களே.இவர்கள் தங்கள் மூதாதையர் குலங்களின் முதல்வர்களும் இஸ்ரயேலில் ஆயிரவர் தலைவர்களும் ஆவர். |
17 | பெயர் குறிக்கப்பட்ட இவர்களை மோசேயும் ஆரோனும் தங்களுடன் சேர்த்துக்கொண்டனர். |
18 | இரண்டாம் மாதம் முதல் நாளன்று அவர்கள் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்றுகூட்டினர்.அவர்கள் தங்கள் குடம்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி, தலைக்கட்டுவாரியாக இருபதோ அதற்குமேலோ வயதுடையவர்களைப் பதிவு செய்தனர். |
19 | ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தும் இதுவே: அவ்வாறே அவர் சீனாய்ப் பாலைநிலத்தில் அவர்களை எண்ணினார். |
20 | இஸ்ரயேலின் தலைப்பேறான ரூபன் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி, தலைக்கட்டுவாரியாக, இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்: |
21 | ரூபன் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு பேர். |
22 | சிமியோன் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி தலைக்கட்டு வாரியாக இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்: |
23 | சிமியோன் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்தொன்பதாயிரத்து முந்நூறு பேர். |
24 | காத்து மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: |
25 | காத்து குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது பேர். |
26 | யூதா மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடம்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: |
27 | யூதா குலத்தில் எண்ணப்பட்டோர் எழுபத்து நாலாயிரத்து அறுநூறு பேர். |
28 | இசக்கார் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடம்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: |
29 | இசக்கார் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்து நாலாயிரத்து நானூறு பேர். |
30 | செபுலோன் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: |
31 | செபுலோன் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்தேழாயிரத்து நானூறு பேர். |
32 | யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: |
33 | எப்ராயிம் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பதாயிரத்து ஐந்நூறுபேர். |
34 | மனாசே மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: |
35 | மனாசே குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர். |
36 | பென்யமின் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: |
37 | பென்யமின் குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தையாயிரத்து நானூறு பேர். |
38 | தாண் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: |
39 | தாண் குலத்தில் எண்ணப்பட்டோர் அறுபத்தீராயிரத்து எழுநூறு பேர். |
40 | ஆசேர் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: |
41 | ஆசேர் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு பேர். |
42 | நப்தலி மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: |
43 | நப்தலி குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர். |
44 | மூதாதையர் ஒவ்வொருவரின் வீட்டு முதல்வர்களான தலைவர் பன்னிருவரின் துணையுடன் மோசேயாலும் ஆரோனாலும் எண்ணப்பட்டவர்கள் இவர்களே. |
45 | ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை: |
46 | மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது பேர். |
47 | ஆனால் இவர்களோடு லேவியர் தங்கள் மூதாதையர் குலப்படி எண்ணப்படவில்லை. |
48 | ஏனெனில் ஆண்டவர் மோசேயிடம் சொன்னது: |
49 | லேவி குலத்தை மட்டும் நீ எண்ணவேண்டாம்: இஸ்ரயேல் மக்களுக்குள் அவர்களை நீ கணக்கெடுப்புச் செய்ய வேண்டாம்: |
50 | லேவியரை உடன்படிக்கைக் கூடாரம், அதன் பணிப்பொருள்கள், அதற்குச் சொந்தமான அனைத்துப் பொருள்கள் ஆகியவற்றின் பொறுப்பாளராக ஏற்படுத்து: அவர்கள் கூடாரத்தையும் அதன் பணிப் பொருள்களையும் சுமந்து செல்ல வேண்டியவர்கள்: அவர்கள் கூடாரத்தைச் சுற்றித் தங்கியிருந்து அதைப் பேணி வருவார்கள். |
51 | புறப்பட வேண்டிய நேரத்தில் லேவியரே கூடாரத்தைப் பிரித்து வைப்பர்: கூடாரம் இடிக்கும்போது லேவியரே அதனை எழுப்பி நிறுத்துவர்.வேறு எவனும் அதன் அருகில் வந்தால் அவன் கொல்லப்படுவான். |
52 | இஸ்ரயேல் மக்கள் அணி அணியாகச் சென்று ஒவ்வொருவரும் தம் பாளையம், கொடி இவற்றுக்கேற்பத் தங்கியிருப்பர். |
53 | லேவியரோ இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் மேல் சினம் வராதபடி உடன்படிக்கைக் கூடாரத்தைச் சுற்றிப் பாளையமிறங்குவர்: உடன்படிக்கைக் கூடாரத்தைக் காவல் செய்ய வேண்டியவரும் லேவியரே. |
54 | இஸ்ரயேல் மக்கள் இவ்வாறே செய்தனர்: ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவர்கள் செய்தனர். |