1 | ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்: என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு என்னைத் தண்டியாதேயும். |
2 | ஆண்டவரே, எனக்கு இரங்கும்: ஏனெனில், நான் தளர்ந்து போனேன்: ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்: ஏனெனில், என் எலும்புகள் வலுவிழந்து போயின. |
3 | என் உயிர் ஊசலாடுகின்றது: ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்? |
4 | ஆண்டவரே, திரும்பும்: என் உயிரைக் காப்பாற்றும், உமது பேரன்பை முன்னிட்டு என்னை மீட்டருளும். |
5 | இறந்தபின் உம்மை நினைப்பவர் எவருமில்லை: பாதாளத்தில் உம்மைப் போற்றுபவர் யார்? |
6 | பெருமூச்சினால் இளைத்துப் போனேன்: ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது. என் கட்டில் அழுகையால் நனைகின்றது. |
7 | துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று: என் பகைவர் அனைவரின் காரணமாக அது மங்கிப்போயிற்று. |
8 | தீங்கிழைப்போரே! நீPங்கள் அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்: ஏனெனில், ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவி சாய்த்து விட்டார். |
9 | ஆண்டவர் என் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்: அவர் என் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார். |
10 | என் எதிரிகள் யாவரும் வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்: அவர்கள் திடீரென நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும். |