1 | ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர்! |
2 | 'கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்" என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். (சேலா) |
3 | ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்: நீரே என் மாட்சி: என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே. |
4 | நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்: அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். (சேலா) |
5 | நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்: ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு. |
6 | என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன். |
7 | ஆண்டவரே, எழுந்தருளும்: என் கடவுளே, என்னை மீட்டருளும்: என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறையும்! பொல்லாரின் பல்லை உடையும்! |
8 | விடுதலை அளிப்பவர் ஆண்டவர்: அவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக! (சேலா) |